புனித ஜார்ஜ்
புனித ஜார்ஜ் (Saint George, கி.பி 275/281 – ஏப்ரல் 23, 303) உரோமன் படைத்துறையில் பணியாற்றிய ஓர் கிரேக்க வீரர். இவரது தந்தை ஆசிய மைனரைச் சேர்ந்த கப்பாடோசியா என்றவிடத்தில் இருந்த கெரோன்டியோசு என்பவராவார். இவரது அன்னையார் லிட்டா நகரைச் சேர்ந்த போலிகிரோனியா ஆவார். தற்போது இசுரேலில் உள்ள இந்த நகரம் கிமு 333இலிருந்தே, அலெக்சாண்டர் கைப்பற்றிய பின்னர், கிரேக்கர்கள் வாழும் நகரமாக இருந்தது. ஜார்ஜ் உரோமன் படைத்துறையில் அதிகாரியாக பதவி ஏற்றம் பெற்றவர். கிறித்தவர்களால் வேத சாட்சியாக வணங்கப்படுபவர். கத்தோலிக்க (மேற்கத்திய கிழக்கு ரைட்டுகள்), ஆங்கிலிக்க, கிழக்கு மரபுவழி, மற்றும் கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளின் புனிதர்களின் வரலாற்றில் புனிதர் ஜார்ஜ் மிகவும் வணங்கப்படும் புனிதர்களில் ஒருவராக உள்ளார். புனித ஜார்ஜும் டிராகனும் கதை மூலமாக இவர் நினைவு கூறப்படுகிறார்; பதினான்கு புனித உதவியாளர்களில் ஒருவராவார். இவரது திருவிழா ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. படைத்துறை புனிதர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.
லிட்டாவின் புனித ஜார்ஜ் | |
---|---|
புனித ஜார்ஜ், 1472இல் கார்லோ கிரிவெலி வரைந்தது | |
மறைசாட்சி | |
பிறப்பு | கி.பி 280 லிட்டா, சிரிய பாலத்தீனம், உரோமப் பேரரசு[1][2] |
இறப்பு | ஏப்ரல் 23, 303 நிக்கோமெடியா, பைத்தினியா, உரோமப் பேரரசு[1][2] |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம் ஆங்கிலிக்கம் லூதரனியம் கிழக்கத்திய மரபுவழி திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை |
முக்கிய திருத்தலங்கள் | புனித ஜார்ஜ் தேவாலயம், லிட்டா |
திருவிழா | ஏப்ரல் 23 |
சித்தரிக்கப்படும் வகை | ஓர் படைவீரராக கவச உடை அணிந்து, கையில் சிலுவை முனை கொண்ட ஈட்டியை ஏந்தி, வெண்குதிரையில் அமர்ந்த வண்ணம் டிராகனை கொல்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். மேற்கத்திய சபைகளில் கவசம் அல்லது கேடயம் அல்லது பட்டியில் புனித ஜார்ஜின் சிலுவை காட்டப்பட்டுள்ளது. |
பாதுகாவல் | உலகின் பல பகுதிகளைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. |
இவர் பல நிலபகுதிகளையும் தொழில்களையும் அமைப்புக்களையும் நோயாளிகளையும் காப்பதாக நம்பப்படுகிறது. இவரது பாதுகாவலில் உள்ள நிலப்பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற முக்கிய நிலப்பகுதிகள்: ஜார்ஜியா, இங்கிலாந்து, எகிப்து, பல்கேரியா, அரகொன், காத்தலோனியா, உருமேனியா, எத்தியோப்பியா, கிரீசு, ஈராக், லித்துவேனியா, பாலத்தீனம், போர்த்துக்கல், செர்பியா, உக்ரைன் மற்றும் உருசியா ஆகும்.
காட்சிக்கூடம்
தொகு- இதைவிட பெரிய காட்சிக்கூடம் காண, காண்க: புனித ஜார்ஜ் காட்சிக்கூடம்.
-
நொவ்கோரோடிலிருந்து புனித ஜார்ஜின் 15ஆம் நூற்றாண்டு படிமம் .
-
ராபியேல், 1505-1506
-
புனித ஜார்ஜ் டிராகனுடன் போரிடுவதாய் சித்தரிக்கும் பல்கேரிய மரபுவழி திருச்சபையின் படிமம்.
-
செருமனியில் ஓர் மடாலய வாயிற்கதவில் புனித ஜார்ஜின் பதாகை
-
புனித ஜார்ஜின் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள், பல்கேரியா.
-
புனித. ஜார்ஜ் ஓர் வேத சாட்சியாக
-
உருசிய சிற்றூர் ஒன்றில் 12ஆம் நூற்றாண்டு சித்தரிப்பு.
-
பிரித்தானியா
-
உருசியா
சான்றுகோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Foakes-Jackson, FJ (2005), A History of the Christian Church, Cosimo Press, p. 461, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59605-452-2.
- ↑ 2.0 2.1 Ball, Ann (2003), Encyclopedia of Catholic Devotions and Practices, p. 568, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87973-910-X.
வெளி இணைப்புக்கள்
தொகு- St. George and the Dragon, free illustrated book based on 'The Seven Champions' by Richard Johnson (1596) பரணிடப்பட்டது 2007-04-29 at the வந்தவழி இயந்திரம்
- Archnet பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம்
- Saint George and the Dragon links பரணிடப்பட்டது 2006-03-13 at the வந்தவழி இயந்திரம் and pictures (more than 125), from Dragons in Art and on the Web பரணிடப்பட்டது 2005-05-26 at the வந்தவழி இயந்திரம்
- Story of St. George from The Golden Legends பரணிடப்பட்டது 2008-03-16 at the வந்தவழி இயந்திரம்
- Saint George and the Boy Scouts பரணிடப்பட்டது 2002-08-02 at the வந்தவழி இயந்திரம், including a woodcut of a Scout on horseback slaying a dragon
- A prayer for St George's Day பரணிடப்பட்டது 2004-06-02 at the வந்தவழி இயந்திரம்
- St. George பரணிடப்பட்டது 2005-03-20 at the வந்தவழி இயந்திரம்
- St. George and the Dragon: An Introduction
- Greatmartyr, Victory-bearer and Wonderworker George Orthodox திருவோவியம் and synaxarion for April 23
- Dedication of the Church of the Greatmartyr George in Lydia Icon and synaxarion for November 3
- Dedication of the Church of the Greatmartyr George at Kiev Icon and synaxarion for November 26
- St. George in the church in Plášťovce,(Palást) in சிலோவாக்கியா
- The St George Orthodox Military Association பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம்
- Famous Georgian Pilgrim Center in India St. George Orthodox Church Puthuppally, Kerala, India
- Hail George பரணிடப்பட்டது 2013-02-16 at the வந்தவழி இயந்திரம் Radio webcast explains how Saint George came to be confused with some Afro-Brazilian deities