பெரியார் விருது
சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் மற்றும் அவர்தம் வாழ்நாள் பெருந்தொண்டான சமூகநீதியும்,பெண் அடிமைத்தனம் ஒழிய சனாதன சதிகளை எதிர்த்து போராடிய போராட்டம்...மேலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர்
தொகு(முழுமையடையாத பட்டியல் இது)
- நன்னிலம் நடராசன் (1999)
- திருச்சி என். செல்வேந்திரன் (2000)
- புலமைப்பித்தன் (2001)
- ஜெகவீர பாண்டியன் (2002)
- துரை கோவிந்தராசன் (2003)
- பி. வேணுகோபால் (2004)
- இரா. செழியன் (2005)
- சத்யராஜ் (2006)
- விசாலாட்சி நெடுஞ்செழியன் (2012)
- பா. வளர்மதி (2017)
- சி. பொன்னையன் (2018)
- செஞ்சி இராமசந்திரன் (2019)
- அ. தமிழ் மகன் உசேன் (2020)
- க. திருநாவுக்கரசு (2021)
- சுப வீரபாண்டியன் (2024)