பெரிலியம் ஆக்சலேட்டு

பெரிலியம் ஆக்சலேட்டு (Beryllium oxalate) என்பது C2BeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிலியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. பெரிலியம் ஆக்சலேட்டு நீரில் கரையும். படிக நீரேற்றுகளாகவும் உருவாகும். நிறமற்ற படிகங்களாகக் காணப்படும். வெப்பச் சிதைவின் மூலமாக தூய்மையான பெரிலியம் ஆக்சைடு தயாரிக்க இது பயன்படுகிறது.

பெரிலியம் ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
3173-18-0 Y
ChemSpider 4953986
InChI
  • InChI=1S/C2H2O4.Be/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2/p-2
    Key: XQZGLPVUHKSNBQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6451522
SMILES
  • [Be+2].C(=O)(C(=O)[O-])[O-]
பண்புகள்
C
2
BeO
4
வாய்ப்பாட்டு எடை 97.03[1]
தோற்றம் ஒளிபுகும் படிகங்கள்
கொதிநிலை 365.1 °C (689.2 °F; 638.2 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 188.8[2] °C (371.8 °F; 461.9 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பெரிலியம் ஐதராக்சைடுடன் ஆக்சாலிக் அமிலத்தை நேரடியாகச் சேர்த்து வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பெரிலியம் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.:[3]

 

வேதிப் பண்புகள் தொகு

பெரிலியம் ஆக்சலேட்டின் படிக நீரேற்றுகளை சூடாக்கினால் நீர் இழப்பு ஏற்படுகிறது.

 

மேற்கோள்கள் தொகு