பெருந்துளசி

பெருந்துளசி, காட்டு துளசி, ஆப்பிரிக்க துளசி, கிராம்பு துளசி என அழைக்கப்படுவது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் ஓசிமம் கிராட்டிசிமம் (Ocimum gratissimum) என்பதாகும். இது லேமியேசி (Lemiaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தெற்கு ஆசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வெப்பமண்டல அமெரிக்கா மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.

African basil
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
O. gratissimum
இருசொற் பெயரீடு
Ocimum gratissimum
L.

இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலையில் எலுமிச்சம் பழச் சுவையும், நறுமணமும் கொண்டிருக்கும். ஆகவே இதை எலுமிச்சை துளசி என்றும் அழைக்கின்றனர். இதில் வெள்ளை நிற பூக்கள் மலர்கின்றன.

பயன்கள் தொகு

இச்செடியில் இருந்து ஆவியாகும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவான சமையல் மூலிகையாக இது பயன்படுகிறது. இச்செடிக்கு வாந்தியை நிறுத்தும் குணம் உண்டு. கொசுக்களை விரட்டும் தன்மையும் இதற்கு உள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. அறிவியல் களஞ்சியம் (2005) தொகுதி பதினாறு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்துளசி&oldid=3868281" இலிருந்து மீள்விக்கப்பட்டது