பெரும் பூனை

பெரும் பூனை (big cat) என்ற பதமானது உயிரியல் ரீதியான வகைப்பாடல்லாது, பூனைக் குடும்பத்திலுள்ள பெரிய இனத்திலிருந்து சிறியவற்றை வேறுபடுத்திக் காட்ட பொதுவான அல்லது முறைசாராது பயன்படுத்தப்படும் பதமாகும்.

புலி, பூனைக் குடும்பத்திலுள்ள பெரிய, பாரிய இனம்

ஒரு குறுகலான வரைவிலக்கணம் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், ஜாகுவார், சிறுத்தை, பனிச்சிறுத்தை என்பனவற்றை பெரும் பூனை எனக் குறிப்பிடுகிறது. இப்பேரினத்தைச் சேர்ந்த இவை மாத்திரமே கர்ச்சனை செய்யக் கூடியன. வேறு ஓர் வரைவிலக்கணம் மலையரிமா, சிவிங்கிப்புலி என்பனவற்றையும் பெரும் பூனைகளாக உள்வாங்குகின்றன. படைச்சிறுத்தை பெரிய, சிறிய பூனைகளுக்கு இடையிலான பரிணாமத் தொடர்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. அளவில் வேறுபட்டிருந்தாலும் அமைப்பிலும் நடத்தையிலும் ஒத்த தன்மையுடன் காணப்படுகின்றன. ஆயினும் சிவிங்கிப்புலி பெரிய, சிறிய பூனைகளில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. எல்லா பூனைக் குடும்ப விலங்குகளும் ஊனுண்ணிகளாகவும் உயர்நிலை கொன்றுண்ணிகளாகவும் உள்ளன.[1] இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

இனங்கள் தொகு

 
சிங்கம், பூனைக் குடும்பத்திலுள்ள உயரமான இனம்

பூனைக் குடும்பம்

பரிமாணம் தொகு

2010 இல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு பெரும் பூனைகளுக்களுக்கிடையிலான பரிமாண உறவு பற்றிய பார்வையை வெளியிட்டது[2] இக்கற்றல் பனிச்சிறுத்தையும் புலியும் சகோதர இனங்கள் எனவும், சிங்கம், சிறுத்தை, ஜாகுவார் என்பன நெருக்கிய தொடர்புள்ளவை எனவும் வெளிப்படுத்தியது.

3.9 Ma
3.2 Ma

பனிச்சிறுத்தை

புலி

3.6 Ma

ஜாகுவார்

2 Ma

சிங்கம்

சிறுத்தை

காட்சியகம் தொகு

உசாத்துணை தொகு

  1. Counting Cats பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம், Guy Balme, Africa Geographic, May 2005.
  2. Davis, Brian W.; Li, Gang; Murphy, William J. (2010). "Supermatrix and species tree methods resolve phylogenetic relationships within the big cats, Panthera (Carnivora: Felidae)". Molecular Phylogenetics and Evolution 56 (1): 64–76. doi:10.1016/j.ympev.2010.01.036. பப்மெட்:20138224. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_பூனை&oldid=3574310" இலிருந்து மீள்விக்கப்பட்டது