பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம்

வேதிச் சேர்மம்

பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம் (Ferrocenecarboxylic acid) என்பது C11H10FeO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (C5H5)Fe(C5H4CO2H) என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். கரிம இரும்பு சேர்மமான இது பெரோசீனின் எளிய கார்பாக்சிலிக்கு அமில வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. பெரோசீனிலிருந்து இரண்டு படிநிலைகளில் இதைத் தயாரிக்கலாம். பெரோசீனுடன் 2-குளோரோபென்சாயில் குளோரைடைச் சேர்த்து அசைலேற்றம் செய்து தொடர்ந்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம் உருவாகும்.[2]

பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம்
வேறு பெயர்கள்
பெரோசீன்மோனோகார்பாக்சிலிக்கு அமிலம்
இனங்காட்டிகள்
1271-42-7 Y
ChemSpider 26585892
InChI
  • InChI=1S/C6H5O2.C5H5.Fe/c7-6(8)5-3-1-2-4-5;1-2-4-5-3-1;/h1-4H,(H,7,8);1-5H;/q2*-1;+2
    Key: BAJHDUZEIKRKAS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15764230
  • [CH-]1C=CC=C1.C1=C[C-](C=C1)C(=O)O.[Fe+2]
பண்புகள்
C11H10FeO2
வாய்ப்பாட்டு எடை 230.04 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
அடர்த்தி 1.862 கி/செ.மீ3[1]
உருகுநிலை 214–216 °C (417–421 °F; 487–489 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு

பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலத்தின் காரகாடித்தன்மை எண் (pKa) மதிப்பு 7.8 ஆகும். பெரோசீனியம் நேர்மின் அயனிக்கு ஆக்சிசனேற்றம் செய்யும்போது அமிலத்தன்மை ஆயிரம் மடங்குக்கும் மேலாக pH 4.54 ஆக அதிகரிக்கிறது.[3]

தயோனைல் குளோரைடுடன் பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் ([(C5H5)Fe(C5H4CO)]2O) என்ற வாய்பாட்டைக் கொண்ட கார்பாக்சிலிக்கு அமில நீரிலி உருவாகிறது.[4][5]

பயன்

தொகு

பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலத்தின் வழிப்பெறுதிகள் சில ஆக்சிசனேற்ற ஒடுக்க மூலக்கூற்று கருவிகளிலும், சில ஆக்சிசனேற்ற ஒடுக்க மேற்பூச்சுகளிலும் உட்கூறுகளாக உள்ளன.

தொடர்புடைய சேர்மம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lin, Lily; Berces, Attila; Kraatz, Heinz-Bernhard (1998). "Ferrocenic acid derivatives: Towards Rationalizing Changes in the Electronic and Geometric Structures". Journal of Organometallic Chemistry 556 (1–2): 11–20. doi:10.1016/S0022-328X(97)00785-7. 
  2. Perry C. Reeves (1977). "Carboxylation of Aromatic Compounds: Ferrocenecarboxylic Acid". Organic Syntheses 56: 28. doi:10.15227/orgsyn.056.0028. 
  3. Fabbrizzi, Luigi (2020). "The Ferrocenium/Ferrocene Couple: A Versatile Redox Switch". Chemtexts 6 (4). doi:10.1007/s40828-020-00119-6. 
  4. Tazi, Mehdi; Roisnel, Thierry; Mongin, Florence; Erb, William (2017). "Ferrocenecarboxylic Anhydride: Identification of a New Polymorph". Acta Crystallographica Section C Structural Chemistry 73 (10): 760–766. doi:10.1107/S205322961701124X. பப்மெட்:28978780. https://hal-univ-rennes1.archives-ouvertes.fr/hal-01617956/file/Ferrocenecarboxylic%20anhydride%20-HAL.pdf. 
  5. Lau, Hans; Hart, Harold (1959). "Notes- Preparation and Hydrolysis of Crystalline Ferrocenoyl Chloride". The Journal of Organic Chemistry 24 (2): 280–281. doi:10.1021/jo01084a647.