பெர்சிலியனைட்டு

சல்பைடு கனிமம்

பெர்சிலியனைட்டு (Berzelianite) என்பதுCu2Se.[1][2][3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய தாமிர செலீனைடு கனிமம் ஆகும். மெல்லிய கிளைவடிவ மேலோடு அல்லது நேர்த்தியாக தூளாக்கப்பட்ட சேர்க்கையாக சமவச்சு படிகத்திட்டத்தில் இது படிகமாகத் தோன்றுகிறது[4][5][6]. ஈருருவ வகை பெல்லிடோயிட் கனிமம் போலல்லாமல் இது நாற்கோணவமைப்பில் படிகமாக்குகிறது[7]. பெர்சிலியனைட்டு படிகங்கள் ஒளிபுகா தன்மையும் சற்று தகடாக அடிக்கும் தன்மையும் கொண்டதாக உள்ளன.

பெர்சிலியனைட்டு
Berzelianite
சுவீடன், சிக்ரிகெரம் சுரங்கத்தில் கால்சைட்டுடன் கிடைத்த பெர்சிலியனைட்டு
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுCu2Se
இனங்காணல்
நிறம்வெள்ளி வெண்மை, எளிதில் மங்கும்
படிக இயல்புகிளை வடிவ படிவுகள், நேர்த்தியான தூள் சேர்க்கை
படிக அமைப்புசமவடிவம்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைசற்று தகடாக்கலாம்
மோவின் அளவுகோல் வலிமை2.7
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
அடர்த்தி6.71 (அளக்கப்பட்டது) 7.28 (கணக்கிடப்பட்டது)
புறவூதா ஒளிர்தல்ஏதுமில்லை
பொதுவான மாசுகள்Ag
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்சிலியனைட்டு கனிமத்தை Brz[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பெயரும் தோற்றமும்

தொகு

பெர்சிலியனைட்டு முதன் முதலில் சுவீடன் நாட்டில் சிக்ரிகெர்னம் சுரங்கத்தில் 1850 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. சுவீடிய வேதியியலாளரும் பகுப்பாய்வு வேதியியல் துறையின் தந்தையுமான பெர்சிலியசு நினைவாக கனிமத்திற்கு பெர்சிலியனைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. வேதிக்குறியீடு மூலம் தனிமங்களை குறிப்பிடும் முறையையும் சீரியம், செலீனியம், சிலிக்கான், தோரியம் [5] போன்ற தனிமங்களையும் இவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்க இவர் சாதனைகளாகும்[5]. பெரும்பாலும் இயுகேய்ரைட்டு, கிளாசுதாலைட்டு, டைமானைட்டு, உமாங்கைட்டு, கிளாக்மேன்னைட்டு, அகுய்லாரைட்டு, குரூக்கிசைட்டு, அதாபாசுகைட்டு, சிட்ரோமேயரைட்டு, பாலிபாசைட்டு, பியர்சியைட்டு, தங்கம், யுரேனினைட்டு, பைரைட்டு, மார்கேசைட்டு, கால்சைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்தே பெர்சிலியனைட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. I.Y. Nekrasov (1 January 1996). Geochemistry, Mineralogy and Genesis of Gold Deposits. CRC Press. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5410-723-1.
  2. Stephen B. Castor; Gregory C. Ferdock (2004). Minerals of Nevada. University of Nevada Press. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87417-540-0.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Bernhard Pracejus (25 June 2015). The Ore Minerals Under the Microscope: An Optical Guide. Elsevier Science. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-62737-7.
  4. "Handbook of mineralogy Berzelianite" (PDF).
  5. 5.0 5.1 5.2 "Berzelianite: Berzelianite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  6. Barthelmy, Dave. "Berzelianite Mineral Data". www.webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  7. "Bellidoite: Bellidoite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  8. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சிலியனைட்டு&oldid=4092031" இலிருந்து மீள்விக்கப்பட்டது