பெர்சிஸ் கம்பட்டா

இந்திய நடிகை

பெர்சிஸ் கம்பட்டா (Persis Khambatta) (2 அக்டோபர் 1948 – 18 ஆகஸ்ட் 1998) ஒரு இந்திய வடிவழகியும் நடிகையுமாவார். இவர் ஸ்டார் ட்ரெக்: தி மோஷன் பிக்சர் (1979) என்ற திரைப்படத்தில் இலியா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்.

பெர்சிஸ் கம்பட்டா
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு(1948-10-02)2 அக்டோபர் 1948
மும்பை, பம்பாய் மாகாணம், இந்திய மேலாட்சி அரசு
இறப்பு18 ஆகத்து 1998(1998-08-18) (அகவை 49)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
செயல் ஆண்டுகள்1968–1998
பட்ட(ம்)ங்கள்பெமினா மிஸ் இந்தியா 1965
Major
competition(s)
பெமினா மிஸ் இந்தியா 1965
(வாகையாளர்)
மிஸ் போட்டோஜெனிக்)
மிஸ் யுனிவர்ஸ் 1965
Spouse
கிளிப் டெய்லர் (நடிகர்)
(தி. 1981; ம.மு. 1981)

உர்ர்ய் சல்தான்ஹா (1989–?)

ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் தொகு

பெர்சிஸ் கம்பட்டா மும்பையில் ஒரு நடுத்தர வர்க்க பார்சி குடும்பத்தில் பிறந்தார்.[1][2] இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது இவருடைய தந்தை தனது குடும்பத்தை விட்டு வெளியேறினார்.[3] மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல புகைப்படக் கலைஞரால் புகைப்படம் எடுக்கப்பட்ட போது புகழ் பெற்றார். இந்தப் புகைப்படம் ஒரு பிரபலமான சவர்க்கார நிறுவனத்தின் விளம்பத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது இறுதியில் இவரை ஒரு வடிவழகியாக மாற வழிவகுத்தது. இவர் 1965 இல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் நுழைந்து பட்டம் வென்றார். இப்போட்டியில் வென்ற இந்தியாவின் இரண்டாவது வெற்றியாளரும், பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இந்தியப் பெண்ணும் ஆவார். பெமினா மிஸ் இந்தியா போட்டியில், இவர் மிஸ் போட்டோஜெனிக் விருதையும் வென்றார்.[4]

நடிப்பு வாழ்க்கை தொகு

கம்பட்டாவின் 13 வயதில் ரெக்ஸோனா விளம்பரங்களில் முதன்முதலில் தோன்றியதால், இவர் பிரபலமாக மாறினார். 16 வயதில், பெமினா மிஸ் இந்தியாவான்கம்பட்டா அந்த ஆண்டு ஜூலை மாதம் மிஸ் யுனிவர்ஸ் 1965 இல் நுழைந்தார். பின்னர், ஏர் இந்தியா, ரெவ்லான், கார்டன் வரேலி போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றினார் .

இயக்குனர் கே.ஏ.அப்பாசின் பம்பாய் ராத் கி பஹோன் மெய்ன் (1968),[5] என்ற திரைப்படத்தின் தலைப்புப் பாடலில் காபரே பாடகி லில்லியாக நடித்ததன் மூலம் கம்பட்டா பாலிவுட்டில் அறிமுகமானார். கன்டாக்ட் அன்பெகமிங் மற்றும் தி வில்பி கான்ஸ்பிரசி (இரண்டும் 1975) ஆகிய படங்களில் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார். ஸ்டார் ட்ரெக்: தி மோஷன் பிக்சர் (1979) படத்தில் வழுக்கை தலையுடன் கூடிய டெல்டான் நேவிகேட்டர் லெப்டினன்ட் இலியா என்ற பாத்திரத்திற்காக இவர் மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். பாத்திரத்திற்காக தலையை மொட்டையடித்தார்.[6] 1980 இல் அகாதமி விருதை வழங்கிய முதல் இந்தியரானார். ஸ்டார் ட்ரெக்கில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆக்டோபஸ்ஸி (1983) என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க பரிசீலிக்கப்பட்டார். ஆனால் மவுட் ஆடம்ஸ் என்பவர் அதில் நடித்தார்.

1980 ஆம் ஆண்டில், மேற்கு செருமனியில் நடந்த ஒரு வாகன விபத்தில் இவர் பலத்த காயமடைந்தார். அது இவரது தலையில் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியது. 1983 இல், இவர் கரோனரி தமனி அறுவை சிகிச்சைக்கு மும்பைக்குத் திரும்பினார். 1986 ஆம் ஆண்டு வெளியான ஷிங்கோரா என்ற இந்தித் திரைபடத்தில் ஆதித்யா பஞ்சோலி மற்றும் மார்க் ஜூபர் ஆகியோருக்கு இணையாக நடித்தார். பின்னர், கம்பட்டா ஹாலிவுட் திரும்பினார். அங்கு மைக் ஹேமர் மற்றும் மேக் கைவர் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார். 1997 இல், இவர் ஒரு காபி டேபிள் புக், பிரைட் ஆஃப் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் பல முன்னாள் மிஸ் இந்தியா வெற்றியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த புத்தகம் அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் பங்குவீதத் தொகையின் ஒரு பகுதி பிறரன்பின் பணியாளர்கள் சபைக்கு வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும் தொகு

கம்பட்டா முதலில் நடிகர் கிளிஃப் டெய்லர் என்பவரை மணந்தார். மே 1989 இல் இவர் 1972இல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வளைதடிப் பந்தாட்ட வீரரான ரூய் சல்தான்ஹா என்பவரை மணந்தார்.[7] நியூயார்க் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக சல்தான்ஹா பணியாற்றிய அயோவா மாநிலத் தலைநகர் டி மொயினில் இந்த விழா நடந்தது.[7]

கம்பட்டா, தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராக இருந்தார்.[8] இதனால் 18 ஆகஸ்ட் 1998 அன்று தனது 49 வயதில் மாரடைப்பால் இறந்தார் [9] மறுநாள் மும்பையில் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.[9]

சான்றுகள் தொகு

  1. "Obituary: Persis Khambatta". 23 October 2011.
  2. "Those Nights in Nairobi". 2 June 2014.
  3. Reilly, Sue (January 1980). "To the Top". People. 
  4. "'Star Trek' Actress Persis Khambatta, 49". 20 August 1998. https://news.google.com/newspapers?id=5AxbAAAAIBAJ&sjid=SU4NAAAAIBAJ&pg=5217,917115&dq=persis+khambata+miss+india. 
  5. "Persis Khambatta, 49, dies". இந்தியன் எக்சுபிரசு. 19 August 1998. http://www.indianexpress.com/Storyold/47402/. 
  6. "Star Trek The Motion Picture: Remembering Persis Khambatta and Lt. Ilia". Star Trek Communicator. January 1999. http://trekweb.com/articles/2010/02/23/Star-Trek-The-Motion-Picture-Remembering-Persis-Khambatta-and-Lt-Ilia.shtml. பார்த்த நாள்: 7 October 2014. 
  7. 7.0 7.1 Connelly, Sherilyn (2021). Presenting Persis Khambatta: From Miss India to Star Trek--The Motion Picture and Beyond. McFarland. பக். 155. 
  8. "Persis Khambatta — the bold model-actor who went bald for Star Trek". 2 October 2019.
  9. 9.0 9.1 "Persis Khambatta, Movie Actress, 49: Obituary". த நியூயார்க் டைம்ஸ். 20 August 1998. https://www.nytimes.com/1998/08/20/arts/persis-khambatta-movie-actress-49.html. 

குறிப்புகள் தொகு

  • The Globe: 10 November 1998
  • Beverly Hills [213] magazine: November 1998
  • New York Post: 20 October 1998

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சிஸ்_கம்பட்டா&oldid=3807046" இலிருந்து மீள்விக்கப்பட்டது