பெர்டெக்னிட்டிக் அமிலம்

பெர்டெக்னிட்டிக் அமிலம் (Pertechnetic acid) என்பது HTcO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். டெக்னீசியம்(VII) ஆக்சைடை தண்ணீர் அல்லது நைட்ரிக் அமிலம், அடர் கந்தக அமிலம், இராச திராவகம் போன்ற வலிமையானதொரு ஆக்சிசனேற்றியுடன் சேர்த்து வினைப்படுத்தினால் பெர்டெக்னிட்டிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்[1] . நீருறிஞ்சியான பெர்டெக்னிட்டிக் அமிலம் அடர் சிவப்பு நிறத்தில் அமிலத்தன்மை எண் மதிப்பு pKa 0.32 [2] ஆகக் கொண்டு ஒரு வலிமையான அமிலமாக விளங்குகிறது. பெரும்பாலும் நீர்த்த கரைசலில் பெர்டெக்னிடேட்டு அயனியாகவே காணப்படுகிறது.

பெர்டெக்னிட்டிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெர்டெக்னிடிக் அமிலம்
இனங்காட்டிகள்
14332-45-7
ChemSpider 9979749 Y
InChI
  • InChI=1S/H2O.3O.Tc/h1H2;;;;/q;;;;+1/p-1 Y
    Key: UTQISYNNAQMRBN-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11805084
  • O[Tc](=O)(=O)=O
பண்புகள்
HO4Tc
வாய்ப்பாட்டு எடை 163.00 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பெர்மாங்கனிக் அமிலம்
பெர்ரீனிக் அமிலம்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பெர்டெக்னிடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அடர் கந்தக அமிலத்துடன் தேவையான அளவுக்கு வலிமையான அமிலக் கரைசலைச் சேர்த்தால் புரோட்டானேற்றம் நிகழ்ந்து எண்முக வடிவிலான இருநீரேற்றாக (TcO3(OH)(H2O)2) மாறுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Schwochau, Klaus (2000). Technetium : Chemistry and radiopharmaceutical applications. Weinheim [u.a.]: Wiley-VCH. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-29496-1.
  2. Omori, T.; Asahina, K.; Suganuma, H.. "Mechanism of the solvent extraction of pertechnetate with tetraphenylarsonium chloride". Journal of Radioanalytical and Nuclear Chemistry Articles 191 (1): 99–104. doi:10.1007/BF02035989. 
  3. Poineau F, Weck PF, German K, Maruk A, Kirakosyan G, Lukens W, Rego DB, Sattelberger AP, Czerwinski KR (2010). "Speciation of heptavalent technetium in sulfuric acid: structural and spectroscopic studies". Dalton Transactions 39 (37): 8616–8619. doi:10.1039/C0DT00695E. பப்மெட்:20730190. http://radchem.nevada.edu/docs/pub/tc%20in%20h2so4%20%28dalton%29%202010-08-23.pdf. பார்த்த நாள்: 2015-08-31. 

இவற்றையு காண்க

தொகு