பெர்பெரைட்டு

ஆக்சைடு கனிமம்

பெர்பெரைட்டு (Ferberite) என்பது FeWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மாங்கனீசுஇரும்பு உல்பிரமைட்டு திண்ம கரைசல் தொடரில் இரும்பு வகையின் இறுதி உறுப்பினர் பெர்பெரைட்டு ஆகும். இதேபோல மாங்கனீசு வகையின் இறுதி உறுப்பினர் அப்னெரைட்டு எனப்படும் மாங்கனீசு தங்குதன் ஆக்சைடு ஆகும். கருப்பு நிறத்தில் ஒற்றை சரிவச்சுக் கனிமமாக இது படிகமாகிறது. பெர்பெரைட்டு, அப்னெரைட்டு இரண்டும் பெரும்பாலும் இரும்பு மற்றும் மாங்கனீசு தனிமங்களின் ஈரிணைதிற நேர்மின் அயனிகளைப் பெற்றிருக்கின்றன. திண்மக் கரைசல் தொடராகப் பெயரிடப்பட்டுள்ள உல்பிரமைட்டு ஓர் இடைநிலை சேர்ம இனமாகக் காணப்படுகிறது.

பெர்பெரைட்டு
Ferberite
மினாசுடா பனசுகுவேரா, பீரா பைக்சா, போர்ச்சுகலில் இருந்து பெர்பெரைட்டின் மீது புளோரபடைட்டு
பொதுவானாவை
வகைதங்குசிடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFeWO4
இனங்காணல்
நிறம்கருப்பு, பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் அடர் பழுப்பு
படிக இயல்புமெல்லிய படிகங்கள்; பெருந்திரள் பொருண்மைகள்
படிக அமைப்புஒற்றைச் சரிவு
இரட்டைப் படிகமுறல்தொடர்புள்ள அல்லது உள்ளுக்குள் ஊடுருவல் அல்லது இரட்டை மடிப்பு
பிளப்பு{010} இல் தெளிவு; {100} மற்றும் {102} இல் பகுதி
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4–4.5
மிளிர்வுவிடாப்பிடியான உலோகம் அல்லது துணை உலோகம்
கீற்றுவண்ணம்கரும்பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைகிட்டத்தட்ட ஒளிபுகாது
ஒப்படர்த்தி7.58
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 2.255 nβ = 2.305 nγ = 2.414
இரட்டை ஒளிவிலகல்δ = 0.159
2V கோணம்அளக்கப்பட்டது: 66°
பிற சிறப்பியல்புகள்மெல்லிய காந்தம்
மேற்கோள்கள்[1][2][3]

பெர்பெரைட்டு கனிமம் சிறுசிறு மணிகளான பெருந்திரள் பொருண்மைகளாகவும் ஒடுங்கிய பட்டகப் படிகங்களாகவும் தோன்றுகிறது.பெர்பெரைட்டின் மோவின் கடினத்தன்மை மதிப்பு 4.5 என்றும் ஒப்படர்த்தி மதிப்பு 7.4 முதல் 7.5 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெக்மாடைட்டு எனப்படும் அனற் பாறைகள், மிகைமாற்ற கருங்கற் பாறைகள், உயர்வெப்ப நீர்வெப்ப படிவுகள் போன்றவற்றில் பெர்பெரைட்டு பொதுவாக சேர்ந்து காணப்படுகிறது. தங்குதனின் சிறுபான்மை தாதுவாகவும் இது கருதப்படுகிறது.

1863 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் சியாரா அல்மாகிரேரா என்ற சுரங்க மாவட்டத்தில் முதன் முதலாக பெர்பெரைட்டு கண்டறியப்பட்டது. 1805 முதல் 1875 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த செருமன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் மோரிட்சு உருடால்ப் பெர்பெர் இதைக் கண்டறிந்தார் என்பதால் கனிமத்திற்கு பெர்பெரைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்பெரைட்டு&oldid=2978403" இலிருந்து மீள்விக்கப்பட்டது