பெர்ராக்சில் நிறங்காட்டி
பெர்ராக்சில் நிறங்காட்டி (Ferroxyl indicator) என்பது பொட்டாசியம் எக்சாசயனோபெர்ரேட்டு(III) சேர்மமும் பினாப்தலீனும் சேர்ந்த கரைசலாகும். Fe2+ அயனிகள் முன்னிலையில் இச்சேர்மம் நீலமாகவும், ஐதராக்சைடு அயனிகள் முன்னிலையில் இளஞ் சிவப்பாகவும் மாறுகிறது. உலோக ஆக்சிசனேற்றத்தைக் கண்டறியவும், பல்வேறு சூழல்களில் துருப்பிடித்தலைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.
10 கிராம் சோடியம் குளோரைடுடன் 1 கிராம் பொட்டாசியம் எக்சாசயனோபெர்ரேட்டு(III) கலந்து காய்ச்சி வடிகட்டிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். 10 செ,மீ3 பினாப்தலீன் நிறங்காட்டியைச் சேர்த்து பின்னர் காய்ச்சி வடிகட்டிய நீரைப் பயன்படுத்தி 500 செமீ 3 கரைசலாக உருவாக்கிக் கொள்ளவேண்டும் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ [benjamin-mills.com/chemistry/sac/techguides/A2.pdf]
.