துரு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துரு என்பது இரும்பு துருப்பிடித்தலின் போது உருவாகும் சேர்மம் ஆகும். இரும்பானது நீர் மற்றும் ஒக்சிசனின் நிலவுகையின் போது துரு பிடிக்கும் (கபில நிறம்). சிலவகைத் துருவானது இரும்பு குளோரைட்டுடன் தாக்கமடையும் போது உருவாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். துருவானது இரும்பு(மூன்று)ஒக்சைட்டாலும் இரும்பு(மூன்று) ஒக்சைட்-ஐதரொக்சைட்டாலும் ஆனது.
ஏனைய உலோகங்களின் ஒக்சைட்டுகள் அவற்றுக்குக் கீழுள்ள உலோகத்தைப் பாதுகாக்கும். உதாரணமாக செப்பு ஒக்சைட்டு அதன் கீழுள்ள செப்புப் படைகள் ஒக்சியேற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கும். எனினும் இரும்பின் துருவானது அதற்குக் கீழுள்ள இரும்பின் துரு பிடித்தலை மேலும் விரைவுபடுத்தும். எனவே சரியான காலம் வழங்கப்படின் துரு பிடிக்கும் இரும்பானது முழுமையாக அரிக்கப்பட்டு விடும்.
இரசாயனத் தாக்கங்கள்
தொகுஇரும்புத் துரு உருவாகும் வேதியற் தாக்கமானது அமிலம் அல்லது உப்புக்கள் நிலவுகையில் வேகமாக்கப்படும். சுத்தமான நீர் அல்லது ஈரப்பதமற்ற ஒக்சிசன் மாத்திரம் உள்ள போது இரும்பில் இருந்து துரு உருவாகாது. இரண்டும் உள்ள போது இரும்பு துருப்பிடிக்கும். ஒக்சிசனோடு மாத்திரம் இரும்பு தாக்கமடையும் போது உருவாகும் ஒக்சைட்டுப் படை இரும்பைப் பாதுகாக்கும். எனினும் நீர் மற்றும் ஒக்சிசன் இணைந்து இரும்புடன் தாக்கமடையும் போதே பாதிப்பை ஏற்படுத்தும் துரு உருவாகும்.
துரு உருவாகும் முதற் செயற்பாடாக இரும்பில் இருந்து பெறப்படும் எதிர்மின்னிகள் மூலம் ஒக்சிசன் தாழ்த்தப்படும்:
- O2 + 4 e− + 2 H2O → 4 OH−
மேலுள்ள தாக்கத்தின் விளைவாக ஐதரொட்சைட் அயன்கள் உருவாவதால் இச்செயற்பாடு அமிலங்களால் மாற்றுவிக்கப்படும். மேலும் பல உலோகங்கள் குறைந்த காரகாடித்தன்மைச் சுட்டெண்இல் (அமிலத் தன்மையில்) அரிமாணம் அடைவனவாகும். இவ்வாறு எதிர்மின்னிகள் வெளியேற்றப்படுவதால் இரும்பு ஒக்சியேற்றப்படும்:
- Fe → Fe2+ + 2 e−
நீருள்ள போது உருவாகும் பின்வரும் தாக்கமானது துரு உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது:
- 4 Fe2+ + O2 → 4 Fe3+ + 2 O2−
- Fe2+ + 2 H2O ⇌ Fe(OH)2 + 2 H+
- Fe3+ + 3 H2O ⇌ Fe(OH)3 + 3 H+
எனவே துரு உருவாகும் வேதியல் தாக்கங்களைப் பின்வாறு தொகுக்கலாம்:
- Fe(OH)2 ⇌ FeO + H2O
- Fe(OH)3 ⇌ FeO(OH) + H2O
- 2 FeO(OH) ⇌ Fe2O3 + H2O
தடுத்தல்
தொகுஇரும்பு அன்றாட வாழ்வில் மிக முக்கியமான உலோகம் என்பதால் இரும்பு துருபிடித்தல் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே பல்வேறு முறைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
- துரு பிடிக்காத கலப்புலோகப் பயன்பாடு. எடுத்துக்காட்டாக, துரு பிடிக்கா உருக்கு.
- கல்வனைசுப்படுத்தல்: இரும்பை விட தாக்குதிறன் அதிகமான உலோகத்தை இரும்பு மீது பதித்தல்.
- கதோட்டுப் பாதுகாப்பு
- பூச்சு பூசுதல்
- ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தல்
வெளி இணைப்புகள்
தொகு- corrosion case studies Analysis of corrosion
- Corrosion Doctors Rusting article