பெ. அப்பால நரசிம்மம்
பெடகம்செட்டி அப்பால நரசிம்மம் (Petakamsetti Appala Narasimham) (1938 - 2009) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். [1]
பெ. அப்பால நரசிம்மம் | |
---|---|
சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1983–1984 | |
முன்னையவர் | குடிவாடா அப்பன்னா |
பின்னவர் | அல்ல ராமச்சந்திர ராவ் |
தொகுதி | பெண்டுருத்தி |
மாநிலங்கவை உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | அப்பாலநாயுடு |
பின்னவர் | கோனத்தலா ராமகிருஷ்ணா |
தொகுதி | அனகாபள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 நாகுலப்பள்ளி, விசாகப்பட்டினம் மாவட்டம் |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி |
வாழ்க்கை
தொகுவிசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளி வட்டத்திலுள்ள நாகுலபள்ளி கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பாலநரசிம்மம் பிறந்தார்.
அரசியல்
தொகுஇவர் சுயேச்சையாக சமிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் என். டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1983 மற்றும் 1984 க்கு இடையில் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பெண்டுர்த்தி தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
இவர் 1984 இல் விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்தார் [3] 1984 இல் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கௌரவம்
தொகு2009 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள வைர பூங்காவில் இவரது நினைவாக இவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது [4]