பெ. பெரியபுள்ளான்

பெ. பெரியபுள்ளான் என்கிற பெ. செல்வம் (Periyapullan, alias P. Selvam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் மேலூர் அ. வலையப்பட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். இவர் மேலூர், அரசுக் கலைக் கல்லூரியில் பி. எஸ்.சி. பயின்று பட்டம் பெற்றவர்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர் மேலூர் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2016 மற்றும் 2021 ஆண்டு நடைபெற்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளாரகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]

பெ. பெரியபுள்ளான்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிமேலூர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
மே 2016 – மே 2021
முன்னையவர்ஆர். சாமி
தொகுதிமேலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பெரிய அழகி
பிள்ளைகள்மகள் 2 (சந்தியா, சத்யா); மகன் 1 (உலகாதிபதி)
வாழிடம்அ. வலையப்பட்டி, மதுரை
முன்னாள் மாணவர்அரசுக் கலைக் கல்லூரி, மேலூர்
தொழில்விவசாயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Periyapullan P Alias Selvam(AIADMK):Constituency- MELUR(MADURAI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-07-02.
  2. Chandar, B. Tilak (2021-05-03). "AIADMK continues its winning streak in Melur". The Hindu (in Indian English). Retrieved 2021-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._பெரியபுள்ளான்&oldid=3187996" இலிருந்து மீள்விக்கப்பட்டது