பேகம் ஐசாஸ் ரசூல்
பேகம் குத்ஸியா ஐசாஸ் ரசூல் (1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 - 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1) இந்திய அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற ஒரே முஸ்லிம் பெண் ஆவார். [1]
பேகம் ஐசாஸ் ரசூல் | |
---|---|
உறுப்பினர் - இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | |
பதவியில் 9 டிசம்பர் 1946 – 24 ஜனவரி 1950 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பேகம் சஹேபா குத்ஸியா 2 ஏப்ரல் 1909 லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1 ஆகத்து 2001 லக்னோ, உத்தர பிரதேசம், இந்தியா | (அகவை 92)
தேசியம் | இந்தியன் |
வேலை | அரசியல்வாதி, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் |
விருதுகள் | பத்ம பூஷன் (2000) |
குடும்பம்
தொகுபேகம் ரசூல் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி குத்ஸியா பேகம் என்ற பெயரில் சர் சுல்பிகர் அலிகான், மஹ்முதா சுல்தானா ஆகியோரின் மகளாக பிறந்தார். இவரது தந்தை சர் சுல்பிகர், பபஞ்சாபில் உள்ள மலேர்கோட்லா ஆளும் சுதேச அரசின் குடும்பத்தினை சேர்ந்தவர். இவரது தாயார் மஹ்முதா சுல்தானா லோஹாருவைச் சேர்ந்த நவாப் அல்லாவுதீன் அகமது கானின் மகள்.
குத்ஸியா நவாப் ஐசாஸ் ரசூலை 1929 ஆம் ஆண்டில் ஹர்தோய் மாவட்டத்தில் (இப்போது ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசம்) திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சர் மால்கம் ஹெய்லி ஏற்பாடு செய்தார், திருமணம் நிகழ்வு முற்றிலும் இணக்கமானது. திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குத்ஸியாவுக்கு பதினான்கு வயதாக இருந்தபோது, இவரது தந்தை 1931 ஆம் ஆண்டில் இறந்தார். இது நடந்த சிறிது நேரத்திலேயே, இவரது மாமியார் வந்து இவரை சண்டிலாவுக்கு அழைத்துச் சென்றார். இது தான் குத்ஸியாவின் மீதி வாழ்க்கையில் இவருடைய வீடாகவும், இறந்தபின் புதைக்கப்பட்ட இடமாகவும் இருந்தது. சண்டிலாவில், குத்ஸியா தனது கணவரின் பெயருக்குப் பிறகு "பேகம் ஐசாஸ் ரசூல்" என்று அழைக்கப்பட்டார். மேலும் இது அனைத்து பொது பதிவுகளிலும் அறியப்பட்டப் பெயர்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்திய அரசு சட்டம் 1935 அமல்படுத்தப்பட்டதன் மூலம் இந்த குத்ஸியா - நவாம் ஐசாஸ் ரசூல் முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேர்தல் அரசியலில் நுழைந்தனர். 1937 தேர்தலில், பொது தொகுதியில் போட்டியிட்டு உ.பி. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். பேகம் ஐசாஸ் ரசூல் 1952 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்தார். இவர் 1937 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை சபையின் துணைத் தலைவர் பதவியில் இருந்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை சபையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். இந்தியாவில் முதல் பெண்மணி மற்றும் உலகின் முதல் முஸ்லிம் பெண் இந்த நிலையை அடைந்தார். இவரது குடும்ப பின்னணி அரச குடும்பமாக இருந்தபோதிலும், ஜமீன்தாரி ஒழிப்புக்கான வலுவான நிலையில் இருந்தார். மதத்தின் அடிப்படையில் தனி வாரியான வாக்கரசியலை இவர் கடுமையாக எதிர்த்தார்.
1946 ஆம் ஆண்டில், இவர் இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் இறுதியாக இணைந்த 28 முஸ்லிம் லீக் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். சட்டசபையில் இவர் மட்டுமே முஸ்லிம் பெண். 1950 ஆம் ஆண்டில், இந்தியாவில் முஸ்லிம் லீக் கலைக்கப்பட்டு, பேகம் ஐசாஸ் ரசூல் காங்கிரசில் சேர்ந்தார். 1952 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1969 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
1969 ஆம் ஆண்டு மற்றும் 1971 ஆம் ஆண்டுக்கு இடையில் இவர் சமூக நலன் மற்றும் சிறுபான்மை அமைச்சராக இருந்தார். சமூகப் பணிகளில் இவர் செய்த பங்களிப்புக்காக 2000 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் வழங்கப்பட்டது. [2]
அரசியலமைப்பு சபையில் பங்கு
தொகுஇந்தியாவின் பிரிவினை நடந்துக்கொண்டிருக்கும் போது ஒரு சில முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்பு சபையில் இணைந்தனர். பேகம் ஐசாஸ் ரசூல் தூதுக்குழுவின் துணைத் தலைவராகவும், அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தலைவர் சவுத்ரி கலிகுஸ்மான் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டபோது, பேகம் ஐசாஸ் இவருக்குப் பின் முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்து சிறுபான்மை உரிமைகள் வரைவு துணைக்குழுவில் உறுப்பினரானார்.
விளையாட்டு துறை பங்களிப்பு
தொகுஇவர் இந்திய மகளிர் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் பதவியில் 20 ஆண்டுகள் இருந்தார். மேலும் ஆசிய பெண்கள் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். [3]
குறிப்புகள்
தொகு- ↑ George, Christina (2018-02-14). "Begum Aizaz Rasul: The only Muslim woman to oppose minority reservations in the Constituent Assembly". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "From Purdah To Parliament: Begum Aizaz Rasul". NDTV.com. http://www.ndtv.com/people/from-purdah-to-parliament-begum-aizaz-rasul-1652956. பார்த்த நாள்: 30 January 2017.