பேகம் ஹசரத் மஹல்

பேகம் ஹசரத் மஹல் (Begum Hazrat Mahal)(c. 1820 – 7 April 1879)இவரின் இயற் பெயர் முஹம்மது கானம் என்பதாகும். ஆனாலும் அவத்தின் பேகம் எனவும் அழைக்கப்பட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மஹலுக்கு முக்கிய இடமுண்டு.

நவாப் வஜித் அலி ஷாவின் இரண்டாவது மனைவி தான் பேகம் ஹசரத் மஹல், அவரது கணவர் வாஜித் அலி ஷா கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், அவத்தின் மாநில விவகாரங்களை பொறுப்பேற்றார் மற்றும் லக்னோவின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார். அவரது மகன் இளவரசர் பிரிஜிஸ் காதரை அவத்தின் ஆளுநர் பொறுப்பில் நியமித்து ஆட்சியை திறம்பட நடத்தினார்.

1857 ம் ஆண்டு இந்திய கலகத்தின் போது பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக அவர் கலகம் செய்தார். நேபாளில் புகலிடம் பெற்ற அவர் 1879 ல் இறந்தார்

பிறப்பு தொகு

இன்றைய இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அவத்தின் பைசாபாத்தில் 1820 ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு முறை மன்னனுடைய கையாட்களின் கண்களில் சிக்கினார் பேகம். பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டி பெற்றோரை மயக்கி சம்மதிக்க வைத்து, மன்னனின் ஆசைநாயகியாக்க அவளை அழைத்துச் சென்றனர் காவலர்கள். அவரும் (மஹல்) அரசியானார்

பதவியேற்பு தொகு

1856-இல் மன்னன் வாஜித் அலிஷா பட்டத்தை இழந்தார், கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டானர், தலைநகர் லக்னோவில் இருந்த பிரிட்டிஷ் கமிஷனர் சர் ஹென்றி லாரன்ஸ் கைக்கு அதிகாரம் மாறியது. நாடே கொந்தந்தளித்தது. ஆங்காங்கே பிரிட்டிஷாரைக் கொன்று குவித்தவாறே சிப்பாய்கள் தலைநகரம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயப் பெண்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக ஒரு கோட்டைக்குள் இருத்திவிட்டு சிப்பாய்களை லக்னோவின் எல்லையிலேயே முறியடிக்கப் புறப்பட்டான் ஹென்றி லாரன்ஸ். இந்திய சிப்பாய்களிடம் படுதோல்வியுற்று கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் ஹென்றி லாரன்ஸ்.

வெற்றி பெற்ற சிப்பாய்களுக்கோ சரியான தலைவனில்லை, அடுத்து என்ன செய்வதென்றும் புரியவில்லை மன்னனும் கல்கத்தாவில் சிறையில். பட்டத்தரசிகளும் பயந்திருந்த நேரம் மன்னரின் பிள்ளைகளில் யாரையேனும் மன்னனாக அறிவிக்குமாறு மன்றாடினார்கள். நடுங்கிய அரசிகள் மறுத்தனர். ஆனால் அந்த பொறுப்பை துணிந்து ஏற்க ஹசரத் மஹல் முன் வந்தார். தன் 10 வயது மகனை மன்னனாக்கித் தானே காப்பாளராகப் பெறுப்பேற்றுக் கொண்டாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_ஹசரத்_மஹல்&oldid=3539493" இலிருந்து மீள்விக்கப்பட்டது