பேகூர், பெங்களூர்

கர்நாடக நகரம்

பேகூர் (Begur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது பெங்களூரு- ஒசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கு கங்க வம்சத்தின் ஆட்சியிலும் பின்னர் சோழப் பேரரசின் ஆட்சியிலும் இது ஒரு முக்கிய இடமாக இருந்ததாக கூறப்படுகிறது. [2]

பேகூர்
தொட்டபேகூர்
நகரம்
பேகூர் is located in Bengaluru
பேகூர்
பேகூர்
பேகூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°52′20″N 77°37′58″E / 12.872347°N 77.632871°E / 12.872347; 77.632871
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
MetroBengaluru
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
560114[1]

பேகூர் கோட்டை

தொகு
 
பேகூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகநாதேசுவரர் கோயில்

பேகூர் நகரின் மையத்தில் பஞ்சலிங்கேசுவரர் கோயில் உள்ளது. இதில் 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு உள்ளது. இது 'பெங்களூரு' என்ற இடத்தைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு ஆகும். [3] இப்பகுதி மேற்கு கங்க வம்சத்தால் ஆளப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் சோழர் இப் பகுதியைக் கைப்பற்றினர்.

நாகேசுவரர் கோயில் இரிகங்க நீதிமார்கனால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் பாஞ்சாலிகேசுவரர் கோயில் சோழர் காலத்தில் அக்தியரால் கட்டப்பட்டது.

கோயிலுக்கு அருகில், ஒரு சிறிய வட்ட கோட்டை உள்ளது. இது சுமார் 1.4 கிமீ² பரப்பளவு கொண்டதாக உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்டது எனப்படுகிறது. கட்டப்பட்ட காலம் தெரியவில்லை (ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை), ஆனால் கோட்டையின் நுழைவாயிலில் உள்ள 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு இருப்பது கோட்டையின் பழமையைக் குறிக்கும். [4]

போக்குவரத்து

தொகு

பேகூர் ஆர்.கே. மார்க்கெட், சிவாஜி நகர், கெம்பேகவுடா பேருந்து நிலையம் ஆகியவற்றுடன் பெங்களுர் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தே.நெ-44 க்கு அருகில் உள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லை நகரமான ஒசூருடன் இணைக்கிறது. பெங்களூர் வானூர்தி நிலையம் மற்றும் தொடருந்து நிலையம் ஆகியவை இந்த பகுதி வழியாக செல்லும் வெளிவட்ட சாலையால் இணைக்கபட்டுள்ளன. இப்பகுதியில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், இப்பகுதி வழியாக செல்லும் பேகூர் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. [5] [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Begur Pin Code". India Post, GoI.
  2. Divya Shekhar (2016-02-04). "Begur's Panchalingeshwara temple gives earliest proof of Bengaluru's existence". The Economic Times.
  3. "Ganga-era inscription stone discovered inside Begur lake". The Economic Times. 2018-10-01.
  4. Renuka Krishnaraja (2018-04-30). "Spectrum: Where the past lingers". Deccan Herald.
  5. "BBMP kicks off process for Begur Road widening". The Times of India. 2019-02-01.
  6. "TDR only way to acquire land to widen three major roads in Bengaluru: Basavaraj Bommai". Deccan Herald. 2021-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகூர்,_பெங்களூர்&oldid=3746270" இலிருந்து மீள்விக்கப்பட்டது