பேச்சு:அங்கெலா மேர்க்கெல்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் people-stub வார்ப்புருவிலுள்ள எழுத்துக்கள் firefox இல் சரிவர தெரிகிறதில்லை. இவ்வார்ப்புரு வடிவமைப்பில் உரைப்பகுதியை justify செய்யும் தெரிவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடவும் --மு.மயூரன் 16:53, 17 அக்டோபர் 2005 (UTC)Reply

மயூரன், விக்கிபீடியாவில் (ஆங்கில பதிப்பு உட்பட) உள்ள பல formatகள் IEக்கு தான் optimise செய்யப்படுள்ளன. firefoxன் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறும், விக்கிபீடியாவை வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. உங்களை போன்று firefox பயன்படுத்தும் பயனர்கள் இந்த விடயத்தில் முன்வந்து தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.--ரவி (பேச்சு) 07:49, 22 அக்டோபர் 2005 (UTC)Reply

இந்தபிரச்சனை உண்மையில் விக்கிபீடியாவின் தவறு அல்ல. இது firefox இனுடைய வழு. firefox இன்னமும் சிக்கலான வரிவடிவங்களை கையாளும் திறனில் முழுமைபெறவில்லை என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துக்கள் கைவேறு கால்வேறாக சிக்கலான வரிவடிவமாக்கப்பட்டு யுனிகோட் குறிமுறைக்கு சிபாரிசு செய்யப்பட்டதும் இந்த பிரச்சாஇக்கு மற்றொரு காரணம். இப்போதைக்கு justify தெரிவினை தவிர்த்தலே இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கான ஒரே வழி..இதுபற்றி மொசில்லாவுக்கு வழு அறிவிப்பு செய்தல் நலம். விக்கிபீடியா மூலமாகவே எவராவது இவ்வாறான அறிவித்தலை அனுப்புவார்களானால் அது அதிக கவனத்தை பெறும். முன்விருப்பங்களில் justify தெரிவினை அமைக்கும்போது மொத்த விக்கிபீடியா தமிழ்பக்கங்களே பிய்ந்து பிய்ந்துதான் தெரிகிறது. விக்கி மென்பொருட்களின் அழகே அது உரையினை justify செய்வதில் தான் தங்கியிருக்கிறது. தமிழ் லினக்ஸ், firefox பயனர்கள் இதனை அனுபவிக்க முடியாமலே போய்விட்டது. தயவு செய்து யாராவது மொசில்லாவுக்கு இதுபற்றிய வழு அறிவித்தலை சமர்ப்பிக்கவும். --மு.மயூரன் 11:22, 22 அக்டோபர் 2005 (UTC)Reply

எனக்குப் புரியவில்லை, அன்(ங்)கெலா என்பதை ஏன் ஏங்கலா என்று எழுதியிருக்கிறீர்கள் என்று.

--Chandravathanaa 06:32, 5 சூலை 2011 (UTC)Reply

தவறான எழுத்துப்பெயர்ப்பென்றால் தயங்காமல் மாற்றி விடுங்கள் சந்திரவதனா.--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 5 சூலை 2011 (UTC)Reply
அங்கிலா மெர்க்கெல் என்றிருக்க வேண்டுமோ?--Kanags \உரையாடுக 08:54, 5 சூலை 2011 (UTC)Reply

நன்றி சிறீதரன் சோடாபாட்டில். அங்கெலா மேர்கெல் தான் ஆகக்கிட்டிய சரியான உச்சரிப்பு.--−முன்நிற்கும் கருத்து Chandravathanaa (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆனாலும் மேர்கெல் என்றால் mergel எனவே உச்சரிக்கப்படும். merkel என உச்சரிப்பதற்கு மேர்க்கெல் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 12:22, 5 சூலை 2011 (UTC)Reply
ஆம். மெர்க்கெல் அல்லது மேர்க்கெல் என்று க் இடையே வருதல் வேண்டும். இடாய்ச்சு மொழியில் g என்பது மெல்லொலி ககரமாகவே ஒலிக்கும். சொல்லின் இறுதியில் எனில் சற்று வலிந்து வல்லினமாக ஒலிக்கும். முதல் பெயரானது சந்திரவதனா அவர்கள் சொல்வதுபோல் அங்கெலா என்று ஒலிக்கும். இடாய்ச்சு மொழியில் a எப்பொழுதும் அகரமாகவே ஒலிக்கும், ஆங்கிலம் போல் எ,ஏ, எஅ, அ, ஆ என்றெல்லாம் வெவ்வேறு விதமாக ஒலிக்காது. இடாய்ச்சு, எசுப்பானியம் முதலானவை மிகப்பெரும்பாலும் சீரான, முறை சார்ந்த ஒலிப்பொழுக்கம் கொண்ட மொழிகள். எனவே ஒலிபெயர்ப்பதும் சற்று எளிது. --செல்வா 13:46, 5 சூலை 2011 (UTC)Reply



க் சேர்ப்பது சரியானதே.--Chandravathanaa 14:39, 5 சூலை 2011 (UTC)Reply

இவரது பெயரைத் (தமிழ்) தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் ஏஞ்சலா மெர்கெல் (ஏஞ்செலா மெர்கெல்) என்று ஒலிக்கக் கேட்டுள்ளேன். இது சரியா? எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கவும். நானும் ஏஞ்செலா என்றே ஒலித்து வருகிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:35, 5 சூலை 2011 (UTC)Reply



சூர்யபிரகாசு, ஆங்கில முறைப்படி Angela வை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அங்கெலா மேர்க்கெல் ஒரு ஜேர்மனியர். ஜேர்மனிய உச்சரிப்பின் படி அங்கெலா என்றுதான் வருகிறது.
--Chandravathanaa 16:18, 5 சூலை 2011 (UTC)Reply

ம்ம். சரி. :) நான் அவற்றுக்கு ஒரு வழிமாற்றும் செய்துவிடுகிறேன். :) உதவிக்கு நன்றி.--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:38, 5 சூலை 2011 (UTC)Reply

Return to "அங்கெலா மேர்க்கெல்" page.