அண்ணா அசாரே என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இக்கட்டுரையைப் புகுபதிகை செய்யாத பயனர்கள் (IPs) தொகுக்க முடியாதபடி பூட்டி வைக்கவும். இது தீக்குறும்புக்கு ஆளாகும் நிலையை எட்டியுள்ளது. குறைந்தது ஒரு வார காலத்திற்கு இக்கட்டுரையைப் பூட்ட நிர்வாகிகளைப் பணிக்கிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:27, 17 ஏப்ரல் 2011 (UTC)

வரலாற்றின் படி ஒரு முறை மட்டுமே ஒரு அனாமதேயப் பயனர் விசமக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கட்டுரையைப் பூட்ட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் கண்காணிப்போம்.--Kanags \உரையாடுக 11:01, 17 ஏப்ரல் 2011 (UTC)

வெளியிணைப்பை நீக்கியதன் காரணம் என்ன?--HK Arun 16:48, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

காரணத்தை தொகுப்பு சுருக்கத்தில் கொடுத்திருந்தேன். techsatish.net போன்ற videorip காணொளிகள் பதிப்புரிமை மீறல்கள். அவற்றை வெளி இணைப்பாக இணைக்க இயலாது. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகளின் படி அதனை இணைக்க இயலாது. காண்க விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள். இவ்வாறு நீக்கப்பட்டால், மீண்டும் அதனை சேர்க்காதீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply
//techsatish.net போன்ற videorip காணொளிகள் பதிப்புரிமை மீறல்கள். அவற்றை வெளி இணைப்பாக இணைக்க இயலாது. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகளின் படி அதனை இணைக்க இயலாது.// அறியத் தந்தமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா, பதிப்புரிமை விதிகளை மிகச் சரியாக கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. --HK Arun 18:25, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பெயரில் எழுத்துப் பிழை சிக்கல்கள்

தொகு

தலைப்பிலும் உட்பிரிவுகளிலும் முரண்பட்ட எழுத்துக்கள் (அண்ணா மற்றும் அன்னா) பயன்படுத்தப்பட்டுள்ளன. சரியான தகவல் அறிந்தோர் இரு இடங்களிலும் திருத்தங்கள் செய்யவும்.--ஏர்னஸ்டோ பாலாஜி 13:34, 16 திசம்பர் 2011 (UTC)Reply

ஆம் இக்காட்டுரையில் பெயர் சீராகக் குறிக்கப் பெறவில்லை |இந்தி மொழியில் अन्ना हज़ारे (அன்னா ஃகசாரே) என்றும், மராட்டியில் அண்ணா ஃகசா3ரே என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். வங்காளி மொழியிலும் অন্না হজারে அன்னா ஃகசா3ரே என்று எழுதியுள்ளார்கள். தமிழ் ஊடகங்களில் அண்ணா அன்னா என இருவிதமாகவும் எழுதுகின்றார்கள் (எ.கா தினமணி நாளிதழ் "அன்னா ஹசாரே", தி இந்து நாளிதழ் அண்ணா ஹசாரே, தினத்தந்தி அன்னா ஹசாரே). கீற்று வலைத்தளம் ([1], வலைப்பதிவுகள் [2], விடுதலை நாளிதழ்[3] முதலான இடங்களில் அன்னா அசாரே என்று எழுதுகின்றன. அண்ணா அசாரே, அன்னா அசாரே ஆகிய இரண்டும் தமிழ் முறைப்படி சரியானதாகும். கிரந்தம் எழுத்தைச் சேர்த்து எழுதுவதானாலும் ஹசாரே என்று எழுதுவதா ஹஜாரே என்று எழுதுவதா என்பதும் தெளிவில்லை. எளிமையாக எல்லாத் தமிழர்களாகும் ஒலிக்கக்கூடிய வகையில் அன்னா அசாரே என்று இருப்பதே சிறந்ததாகும். எதுவாயினும் சீராக கட்டுரையில் ஒரே வடிவில் இருப்பது நல்லது. முதல் வரியிலோ, அடிக்குறிப்பாகவோ வெவ்வேறு வடிவங்களில் இவர் பெயர் வழங்குவதைக் குறிக்கலாம். --செல்வா (பேச்சு) 16:01, 15 திசம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அண்ணா_அசாரே&oldid=4024760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அண்ணா அசாரே" page.