பேச்சு:அபுதாபி (நகரம்)
இது தமிழில் அபுதாபி என்றே வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறே தலைப்பிட வேண்டும். அரபு மொழியில் Abu Dhabi என்றே அழைக்கப்படுவதாக ஆங்கில விக்கியில் சொல்லப்பட்டிருக்கிறது. அபூ ழபீ என்பது எந்த மொழியில் வழங்கப்படுகிறது?--Kanags \உரையாடுக 04:03, 10 ஆகத்து 2012 (UTC)+1--சண்முகம்ப7 (பேச்சு) 06:35, 10 ஆகத்து 2012 (UTC)
- விளக்கம் இல்லை, மீண்டும் அபுதாபி என மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 16:08, 31 அக்டோபர் 2012 (UTC)
- மாற்றலாம்.--Kanags \உரையாடுக 20:02, 31 அக்டோபர் 2012 (UTC)
அபுதாபி என்பது பிழை. அரபு மொழியை ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் போது Abu Dhabi என்று எழுதியிருப்பதால் dh என்பது தமிழில் த என்பதாக வந்தாக வேண்டுமென்னும் ஆங்கிலமைய வாதம் தவறானது. அரபு மொழிப் பெயரிலுள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்பதாகத்தான் அரபு மொழிபெயர்ப்பிலும் எழுத்துப் பெயர்ப்பிலும் பன்னெடுங்காலமாக வழங்கப்படுகிறது. அரபு மொழி தெரியாதவர்கள் எழுதும் போது ஏற்படும் தவறுகளிலொன்றுதான் அபுதாபி என்று எழுதியிருப்பது. நான் மேலே சுட்டிக் காட்டிய எழுத்துக்கூட்டல் முறையை அரபு - தமிழ் நேரடி மொழிபெயர்ப்பு நூல்களிற் காணலாம். உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த றஹ்மத் அறக்கட்டளையினர் வெளியிட்ட ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதீ, முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களில் மேற்படி முறையைக் காணலாம்.--பாஹிம் (பேச்சு) 07:25, 10 நவம்பர் 2014 (UTC)