பேச்சு:அம்பர்

நல்ல அறிமுகக் கட்டுரை--ரவி 09:29, 6 ஜூலை 2006 (UTC)

நன்றி. --C.R.Selvakumar 12:03, 6 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, அம்பர் என்பது தமிழ்ச் சொல்லா? தமிழெனில் இங்கிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதா?--Sivakumar \பேச்சு 15:46, 23 மார்ச் 2007 (UTC)


சிவகுமார், போதிய ஆய்வு செய்யாமல் எங்கிருந்து எங்கு சென்றது என்று கூறுவது தவறாகும். எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். முதலில் தமிழில் அம் என்றால் நீர். அம்பரம் என்றால் கடல். அம்பணம் என்றாலும் நீர், கடல். அம்பா என்றால் நீராடல் (அம்பா ஆடல் என்றும் கூறுவர்). அப்பை = கொன்றை (மஞ்சள் நிறப்பூ). ம-ப சில இடங்களில் மருவி வரும். எ.கா: அமரம்=அபரம் = பின் பக்கம் (முதுகு). இதன் தொடர்பாய் அம்பர் என்பது கடலில் கிடைக்கும் பொருள் என்று வந்திருக்க வேண்டும். இவை மரப்பிசினாயினும், பால்ட்டிக் நாடு போன்ற நாடுகளில் கடற்கரையில் கிடைப்பது -இன்றும் கிடைப்பது. இது திமிங்கிலத்தின் உறுப்பில் சுரக்கும் ("Ambergris, a morbid secretion of the liver or intestines of the spermaceti whale") என்றும் கருதப்படுகின்றது. எப்படியாயினும் கடலோடு தொடர்பு கொண்டது. கடல்-படு-திரவியம் என்றே அறியப்படுகின்றது. தமிழ்வழிப் பொருள் தொடர்பு புரிகின்றது. எப்பொழுதிருந்து இச்சொற்கள் தமிழில் ஆளப்படுகின்றன என்பனவற்றையும் பார்த்தல் வேண்டும். இப்பொழுது ஆங்கிலத்துக்கு வருவோம்.

 +  
 + ஆக்ஸ்போர்டு அகராதியில் amber என்பதற்குக் கீழ்க்காணும் குறிப்பு உள்ளது (சற்று நீளமானது): 
 + அதன் படி கி.பி. 1400ல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றது. (கிரேக்க மொழியில் electron Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}).")  
 + . The resin. 
 +  
 + 3. a. A yellowish translucent fossil resin, found chiefly along the southern shores of the Baltic. It is used for ornaments; burns with an agreeable odour; often entombs the bodies of insects, etc.; and when rubbed becomes notably electric (so called from its Greek name {hlenisacu}{lambda}{epsilon}{kappa}{tau}{rho}{omicron}{nu}). (See also LAMBER.) 
 + c1400 Destr. Troy v. 1666 Bourdourt about all with bright Aumbur. c1450 Bk. Curtasye III. 481 The wardrop he herbers, and eke of chambur Ladyes with bedys of coralle and lambur. 1463 in Bury Wills 15 A peyre bedys of ambyr with a ryng of syluir. a1529 SKELTON Elynour Rummyng 603 But my bedes of amber, Bere them to my chamber. 1552 HULOET, Ambre called lambre or yelow Ambre. 1556 Richmond. Wills (1853) 89 One paire of long beads of awmer. 1602 SHAKES. Ham. II. ii. 200 Thicke Amber, or Plum-Tree Gumme. 1658 SIR T. BROWNE Hydriot. ii. 18 That Romane Urne..wherein were found an Ape of Agate, an Elephant of Ambre. 1735 POPE Ep. Arbuthnot 169 Pretty! in amber to observe the forms Of hairs, or straws, or dirt, or grubs, or worms! 1794 SULLIVAN View Nat. II. 27 Amber, when rubbed, was observed to attract bits of straw, down, and other light bodies. 1847 BLACKWELL Malet's North. Antiq. 374 Byron caught him up, and..preserved him, like a fly in amber, for future generations to wonder at. 1865 CARLYLE Fredk. Gt. I. II. ii. 54 Amber, science declares, is a kind of petrified resin, distilled by pines that were dead before the days of Adam. 
 +  
 + மெரியம்-வெப்ஸ்ட்டர் அகராதி, "Etymology: Middle English ambre, from Anglo-French, from Medieval Latin ambra, from Arabic 'anbar ambergris" என்று தருகின்றது. எனவே அராபிக் மொழித்தொடர்பும் இருக்கும்.  
 + --செல்வா 00:11, 24 மார்ச் 2007 (UTC)

குழப்பம் தொகு

இங்கே கட்டுரையில் உண்மையான அம்பரையும் பிசினம்பரையும் குழப்பிக் கொள்ளப்பட்டிருப்பது தெளிவு. கட்டுரை பிசினம்பர் (amber) என்பதைப் பற்றிக் கூறி அம்பர் (ambergris) தொடர்பான சில விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அது தவறு. விடயமறியாமல் எழுதும் போது இத்தகைய பிழைகள் நிகழ்கின்றன. நான் ஓர் அம்பர் வணிகன். என்னிடம் இப்போதும் உண்மையான மீனம்பர் கட்டிகள் இருக்கின்றன. மணிக் கற்களும் அம்பரும் அகிலும் எம் தொழிற் பொருட்கள். எனவே, இந்தக் கட்டுரையைத் திருத்துவதும் உண்மையான அம்பர் (ambergris) தொடர்பான கட்டுரையை எழுதுவதும் முக்கியம்.--பாஹிம் (பேச்சு) 02:02, 5 அக்டோபர் 2023 (UTC)Reply

வணக்கம் பாஹிம் இந்த பொருட்களை நன்கு அறிந்த நீங்களே இக்கட்டுரையின் பிழையான அம்சங்களைக் களைந்து இன்னொரு புதிய கட்டுரையையும் உருவாக்கினால் நன்று--கு. அருளரசன் (பேச்சு) 04:31, 5 அக்டோபர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்பர்&oldid=3803548" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அம்பர்" page.