பேச்சு:அராபியர்

@Fahimrazick: அரபியர் என்று தானே தமிழில் எழுதப்படுகிறது. பிறகு எப்படி அறபியர் என்று வரும்??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:02, 14 சூலை 2020 (UTC)Reply

ஒரு மொழியை அறியாதவர்கள் எழுதுவதை விட அம்மொழியை அறிந்தவர்கள் எழுதும் நடைக்கல்லவா முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்? அறபு என்பதே சரி. எனவேதான் அறபியர் எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:04, 14 சூலை 2020 (UTC)Reply

@Fahimrazick: அறபு என்று எழுதப்படுவதற்கான, சான்று ஏதாவது இருந்தால் தாருங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:08, 14 சூலை 2020 (UTC)Reply

நீங்களே சற்று தேடிப் பார்த்திருக்கலாம். சான்று 1, சான்று 2, இலங்கையின் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வப் பாடத் திட்டம்.--பாஹிம் (பேச்சு) 17:34, 14 சூலை 2020 (UTC)Reply

பேச்சுப்பக்கத்தில் உரையாடி, முடிவை எட்டியபின் கட்டுரையை நகர்த்தவும். நன்றி. --AntanO (பேச்சு) 02:17, 15 சூலை 2020 (UTC)Reply

ஏற்கனவே உரையாடி ஆதாரமும் வழங்கப்பட்டு விட்டது. இனியும் ஏன் நீங்கள் விதண்டாவாதமாக பிழையான தலைப்பிலேயே வைக்க முனைகிறீர்கள்? அராபு என்று எதுவும் கிடையாது. அறபு மொழியினர் அறபியர். அராபு என்றால் என்ன?--பாஹிம் (பேச்சு) 02:20, 15 சூலை 2020 (UTC)Reply

அரபு, அராபு என்பதெல்லாம் எதுவும் கிடையாது என்பதற்கு என்ன ஆதாரம்? --AntanO (பேச்சு) 02:21, 15 சூலை 2020 (UTC)Reply

அரபு என்று எழுத்துப் பிழையாக எழுதுகிறார்கள். அராபு என்று எதுவும் கிடையாது. இல்லை என்பவர் எப்படி ஆதாரம் கொடுப்பார்? இருக்கிறது என்று சொல்பவரே ஆதாரம் வழங்க வேண்டும். இல்லை என்றால் இல்லைதான்.--பாஹிம் (பேச்சு) 02:23, 15 சூலை 2020 (UTC)Reply

அரபு - இவையெல்லாம் என்ன? --AntanO (பேச்சு) 02:24, 15 சூலை 2020 (UTC)Reply

அதைத்தானே எழுத்துப் பிழை என்கிறேன். மொழியறியாதவர்கள் எழுதுவதற்கா முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறீர்கள்? அத்துடன், நீங்கள் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்த அராபு என்றால் என்ன?--பாஹிம் (பேச்சு) 02:25, 15 சூலை 2020 (UTC)Reply

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரபு என்றே அழைக்கிறது. --AntanO (பேச்சு) 02:26, 15 சூலை 2020 (UTC)Reply

யார் கூறினாலும் பிழை பிழையே. நான் கேட்பது அராபு என்று நீங்கள் வலிந்து மாற்றியதன் பொருள் என்ன? அதை நான் திருத்தினேன் என்பதால் மாற்றினீர்களா அல்லது நியாயமான காரணத்துடன் மாற்றினீர்களா?

அராபியர். அரேபியர், அரபு ஆகிய பதங்கள் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருபவை. இதனை தன்னிச்சையாக மாற்றுவது முறையல்ல. முறையாக உரையாடி மாற்றலாம். மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம். நன்றி. --AntanO (பேச்சு) 02:34, 15 சூலை 2020 (UTC)Reply

அராபு என்று எதுவும் கிடையாது. இருந்தால் ஆதாரம் தாருங்கள். அரேபியர் என்பது ஆங்கிலத்தின் மருவல். ஒரு மொழியை நேரடியாக அணுக இயலும் போது ஆங்கிலத்தின் துணை தேவையில்லை. அதனாலேயே இதனை மாற்ற வேண்டும். தலைப்பை மாற்ற வேண்டும் என்ற தொடுப்பிணைப்பைக் கூட இட முடியாமல் நீங்கள் அதனைத் தடுத்து விட்டீர்களே. அது தன்னிச்சையான செயலல்லவா? எந்த ஆதாரமும் வழங்காமல் நீங்கள் பிழையான தலைப்புக்கு மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றினீர்கள். என்னால் அதற்குரிய தொடுப்பிணைப்பைக்கூட இட முடியாமல் நீங்கள் தடுத்து வைத்திருக்கிறீர்கள். எதற்காக?--பாஹிம் (பேச்சு) 02:45, 15 சூலை 2020 (UTC)Reply

அரபு மொழி என்ற கட்டுரைதான் உள்ளது அறபு அல்ல. மேலும் விவிலிய தமிழ் மொழிபெயர்ப்பு "அதைத் தவிரச் சாலமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும் வியாபாரிகளும் வணிகர்களும் அராபிய அரசர்களும் மாநில ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு. (1 அரசர் 10:15)" என்கிறது. இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நிற்க, இக்கட்டுரை அராபியர் என்று உருவாக்கப்பட்டது. அது பிழையென்றால் உரையாடுதல் முறை. அதைவிடுத்து தன்னிச்சையாக மாற்ற வேண்டாம். தொகுத்தல் போரைத் தவிர்க்க காப்பிட்டுள்ளேன். அல்லது தலைப்பை தன்னிச்சையாக மாற்றுபவரை தடை செய்திருக்க வேண்டும். :விக்கிப்பீடியாவின் தலைப்பு மாற்ற நடைமுறையின்படி செயற்படவும். இதற்குப் புறம்பான கேள்விகள் தேவையற்றவை. --AntanO (பேச்சு) 03:03, 15 சூலை 2020 (UTC)Reply

நீங்களே எத்தனையோ தலைப்புக்களைத் தன்னிச்சையாக மாற்றியுள்ளீர்கள். இப்போது "தலைப்பை தன்னிச்சையாக மாற்றுபவரை தடை செய்திருக்க வேண்டும்" என்று கூறுகிறீர்கள். அதுதான் உங்களுக்கு விருப்பமான வேலையோ? என்னை இதற்கு முன்னரும் தொகுப்புப் போரை நீங்களே உருவாக்கித் தடை செய்தீர்கள். இப்போதும் தொகுப்புப் போரை உருவாக்கியது நீங்கள் மட்டுமே. கவனிக்க, @Ravidreams:, @Kanags:--பாஹிம் (பேச்சு) 03:09, 15 சூலை 2020 (UTC)Reply

மீண்டும் சொல்கிறேன். விடயத்திற்குப் புறம்பே உரையாடாதீர்கள். நன்றி. --AntanO (பேச்சு) 03:17, 15 சூலை 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அராபியர்&oldid=3000525" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அராபியர்" page.