தமிழ் இஸ்லாமிய எழுத்து முறை `ஹலால்`. யாரும் முஸ்லிம் உணவு முறையை `அலால்` என எழுதுவதில்லை. அதனால் கட்டுரை பெயரிலும், மற்ற இடங்களிலும் ஹலால் என மாற்ற பரிவு.--92.39.200.17 15:32, 9 ஜூன் 2009 (UTC)

தமிழ் இசுலாமிய எழுத்து முறை, தமிழ் இந்து எழுத்து முறை, தமிழ் கிறித்தவ எழுத்து முறை... தமிழ் கிரந்த எழுத்து முறை, தமிழ் சமசுகிருத எழுத்து முறை, தமிழ் ஆங்கில எழுத்து முறை... அப்புறம் இன்னும் என்னென்ன எழுத்து முறைகள் இருக்கு? :( --ரவி 15:58, 9 ஜூன் 2009 (UTC)

தமிழ் இஸலாமியர்கள் ஹலால் என்றுதான் எழுதுகிறார்கள். மேலும் `அலால்` கூகிளில் போட்டால், இஸ்லாமிய உணவு என்ற அர்த்ததில் வராது. ‘ஹலால்` போட்டு தேடினால்தான் நிறைய பக்கக்கள் இந்த அர்த்தத்தில் வரும். மற்றபடி தமிழ் கிரந்த எழுத்து முறை, தமிழ் சமசுகிருத எழுத்து முறை, தமிழ் ஆங்கில எழுத்து முறை ஆகியவை கற்பனைகள். இஸ்லாமிய சம்பந்தப்பட்ட இணைகளில் கிடப்பவை `இஸ்லாமிய தமிழ்` என்கிறேன். அப்படி ஒன்றுமில்லை என்றால், சரி.--92.39.200.17 16:05, 9 ஜூன் 2009 (UTC)

அலால் என்ற ஒரு சொல் இசுலாமிய வழக்கில் இல்லை. இக்கட்டுரைத் தலைப்பை ஹலால் என மாற்ற உதவ வேண்டுகிறேன்.--பாஹிம் 08:38, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அரபு நாட்டவர் இலங்கையரை ஸ்ரீ லங்கி என்று சொன்னால் இல்லையில்லை நான் ஸ்ரீ லங்கன் என்பீர்களா? ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு எழுதமுடியுமோ அவ்வாறுதான் எழுதலாம். அதற்காகத் தான் பலமொழிகள் இருக்கின்றது. கூகிளில் குப்பையைத் தேடினால் குப்பைதான் வரும். கூகிள் மாத்திரம் அல்ல பிங் (அலால் , ஹலால்) பொன்ற தேடுபொறிகளும் அவ்வாறானதே. அதற்காக தமிழ் மொழியின் கலைக்கழஞ்சியமான விக்கிபீடியாவில் அவ்வாறே எழுதுவது சரியகாது. அலால் என்னும் தலைப்பை ஹலால் என்று மாற்றவேண்டியதில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. --உமாபதி \பேச்சு 08:18, 9 சூன் 2013 (UTC)Reply

கூகுளில் ஹலால் எனத் தேடினால் முதலில் வருவது அலால் என்ற தமிழ்விக்கிக் கட்டுரை தான். எனவே கூகுள் சரியான தகவலைத் தான் தருகிறது. எவரும் கவலைப்படத் தேவையில்லை. ஹ என்ற வடமொழி எழுத்து சொல் ஒன்றின் ஆரம்பத்தில் வரும் போது அதனைத் தமிழில் அ என்ற எழுத்தால் ஆரம்பிக்கலாம். இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே.--Kanags \உரையாடுக 08:28, 9 சூன் 2013 (UTC)Reply

ஹலால் என்ற சொல் ஒரு பெயர்ச்சொல். ஆகவே அதன் பொருளில் மாற்றம் ஏற்படுமாறு அதனை பெயர் மாற்றம் செய்ய முடியாது. அலால் என்று இஸ்லாம் மதத்தில் இல்லை. ஹலால் என்று தான் உள்ளது. ஹ என்ற எழுத்து ஆரம்பத்தில் வரும் போது அ என மாற்றப்பட வேண்டும் என்றால் விக்கியில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. உதாரணமாக ஹரிஹரன் கோயில், ஹரிஹரன் (பாடகர்), ஹமாஸ்... இப்படியே தொடர்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்ப எழுத்தை அ என்று மாற்றலாமா?--Fasly (பேச்சு) 10:05, 10 ஆகத்து 2016 (UTC)Reply

ஹ எனத் தொடங்கும் சொற்களுக்கு அ எனவே மாற்றலாம். (அரிஅரன் கோவில்)..--Kanags \உரையாடுக 10:08, 10 ஆகத்து 2016 (UTC)Reply

மூன்று விதமான தலைப்புக்களை சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த மூன்று தலைப்புக்களையும் குறிப்பிட்டுக் கூறினேனெ தவிர வேறு நோக்கங்கள் அடியேனும் இருக்கவில்லை. மற்றது அவ்வாறானால் ஹ எழுத்தில் ஆரம்பமாகும் அனைத்துக் கட்டுரைகளும் மாற்றப்பட வேண்டும். இது சாத்தியமா?--Fasly (பேச்சு) 10:24, 10 ஆகத்து 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலால்&oldid=2103040" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அலால்" page.