பேச்சு:அலைகயலுருக்கள்
மீன் என்பது தமிழ்ச் சொல் இல்லையா என்ன? அலை+கயல்+உருக்கள் = ?
உருக்கள் என்பது characters என்பதையல்லவா குறிக்கும்? இதற்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு? இக்கட்டுரைத் தலைப்பும் இக்கட்டுரையின் உள்ளடக்கங்களும் கலந்துரையாடப்பட வேண்டும். மேலும் கலைச்சொல் புதியதாக இருப்பின் அதற்குண்டான விளக்கத்தையும் பெயர்க் காரணம் என்று தனித்தலைப்பிட்டுத் தந்துதவுங்கள். இது அனைவருக்கும் உதவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:31, 19 மே 2011 (UTC)
மீனும் தமிழ்ச்சொல்லே, கயலும் தமிழ்ச்சொல்லவா. மேலும் உரு என்பது உருப்படிகள் என்பதையும் குறிக்கும். பேச்சு வழக்கில் ஒருவரிடம் உங்களுக்கு உருப்படிகள் எத்தனை என்பதைக் கேட்பதுண்டு. இங்கு உருப்படிகள் என்பது பொருளையல்ல குழந்தைகளைக்குறிக்கும். மீன் மட்டும் தான் சொல்லென்றால் கயல் எதற்கு என்பது எனக்குத் தெறியவில்லை. நான் பெயர்க்காரணம் கொடுக்கத் தவறியது என் குற்றமே. இது எனது மறதியால் நிகழ்ந்த ஒருத் தவறாகும். மேலும் இதுப்போல் தவறுகள் நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். மேலே முறையிட்ட கருத்துக்களில் பிழையிருப்பின் சுட்டுக. பெயர்க்காரணம் இன்னும் சில மணிநேரங்களில் கொடுக்கப்படும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 12:09, 19 மே 2011 (UTC)
- சிங்கமுகன் வருத்தப்பட வேண்டிய தேவையேதுமில்லை. இது கூட்டுமுயற்சியை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் கொடுக்கவில்லையென்றாலும் இன்னொருவர் கொடுத்துவிடுவார். ஆனால், எனக்கு பெயரின் அடிப்படையிலேயே ஐயம் இருந்ததால்தான் கேட்டேன். பதிலுரைக்கு நன்றி...
- கயல் = சங்ககாலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் சொல்
“ | கயல் முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள்
|
” |
-
- மீன் = பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது (சமக்கிருதம் = मत्सयः)
- எங்கள் பாடநூலில் மீனாட்சி எனும் பெயரை சமக்கிருதம் என்று கூறி அதற்குத் தமிழ்ப் பதமாக "கயல்கண்ணி" என்று கொடுத்திருந்தனர்.
- இவைவே எனக்குத் தெரிந்தவை.... :)
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:45, 19 மே 2011 (UTC)
எடுத்துக்காட்டு மிக அருமை. கவலைக்கொள்ள வேண்டும். தமிழில் அறிவியல் மற்றும் அதன் விளக்கம் சார்ந்த கலந்துரையாடல் வளர்ச்சியின் கட்டாயம். பெயர்கள் இடவேண்டிய பதங்கள் இன்னும் நிறைய காணப்படுகின்றன. ஒரேப் பதத்தைக் கையாளும்போது சொற்களின் வலிமை குன்றிப்போய்விடும் என்பது எனது எண்ணம். எடுத்துக்காட்டிற்கு உயிர் என்னும் சொல்லை நுண்ணுயிரி, குறுவுயிரி, சிறுவுயிரி, உயிரியல், முதலுயிர் என்பன கலைச்சொல்லாக்கத்தில் கையாளப்பட்டு வருகின்றன. கலைச்சொல்லாக்கம் என்பது தனித்துவம் இருந்தால் தான் அது காலத்திற்கு நிலைக்கும் என்பது என் சிந்தனை. ஆகையால் தான் ஒரே சொற்களைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு பதங்களைக் கையாள்கிறேன். மேலும் இவ்விவாதத்தை நிறைவு செய்யாது தீர்வுக்காணும் வரைத் தொடரப் பணிக்கிறேன். மீன் என்பது தமிழில்லையா! இவ்வையத்தைப் போக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:47, 19 மே 2011 (UTC)
மேலும் எனக்குத் தெறிந்தவரையில் அடிப்படைச் சொற்களில் வடமொழியின் தாக்கம் மிகவும் குறைவே. அதுவும் தமிழில் ஒருப்பொருள் குறித்த பலச்சொற்கள் மிகுந்துக் காணப்படுகின்றன. தமிழிலில் இருந்தும் பல வேர்ச்சொற்கள் வடமொழியில் கலந்துள்ளதாக பாவாணர் குறிப்பிட்டுள்ளார். மீன் என்பதன் பதம் குறித்து தமிழ்ப்புலவர்கள் யாரேனும் விவரித்தால் விடைக்கான ஏதுவாய் இருக்கும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:05, 19 மே 2011 (UTC)
- மீன் தமிழ்ச்சொல் என்பது இக்கால மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை. பரோவின் திராவிட வேர்ச்சொல் அகரமுதலியில் இச்சொல் அனைத்து திராவிட மொழிகளிலும் தனித்தும் கிளைத்தும் வழங்கி இருப்பதைக் காணலாம். அது, திராவிட அடித்தட்டுத் தாக்கத்தால் சமக்கிருதத்துக்குச் சென்றது. மின்னுவதால் மீன் எனப் பெயர் பெற்றது என்பர். (விண்மீன் என்ற சொல்லையும் ஒப்பு நோக்கலாம்.) கயல் என்ற சொல்லும் நல்ல தமிழ்ச்சொல் தான். -- சுந்தர் \பேச்சு 11:46, 25 மே 2011 (UTC)
நன்றி சுந்தர் அவர்களே. இத்தலைப்புக் குறித்த ஏதேனும் கருத்துண்டா. நன்றிகளுடன். --சிங்கமுகன் 13:56, 25 மே 2011 (UTC)
- சிங்கமுகன், என்னை சுந்தர் எனப் பெயர் சொல்லியே அழையுங்கள். தலைப்பு நன்றாக உள்ளது. உருப்படிகள் என்று பேச்சில் கேட்டிருந்தாலும் முட்டைகளுக்கும் குஞ்சுகளுக்கும் உருக்கள் எனச் சொல்வது பொருத்தமா எனத் தெரியவில்லை. (பொருத்தமில்லை என்று மறுப்பதற்கில்லை.) மற்றபடி, நல்ல தலைப்புத்தான். -- சுந்தர் \பேச்சு 10:16, 26 மே 2011 (UTC)
- சுந்தர், உரு என்பதற்கு உருவம் எனவும் கொள்ளலாம். முட்டைகளும் குஞ்சுகளும் மீனின் உருவங்கள் தான் என்பதில் ஐயம் இருக்காது என எண்ணுகிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 10:29, 26 மே 2011 (UTC)