பேச்சு:அவகாதரோ மாறிலி
புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள நல்ல அறிவியல் கட்டுரை --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:55, 7 சூன் 2012 (UTC)
இது அவகாதரோ மாறிலி என்றுதான் இருக்க வேண்டும். அவகாதரோ எண் அல்ல.--பாஹிம் (பேச்சு) 16:07, 7 சூன் 2012 (UTC)
- அவகாதரோ எண் என்று தான் நாம் படித்தோம். பின்னர் அந்த எண்ணின் அளவையும் மாற்றிவிட்டார்கள். இப்போது மாறிலி என அழைக்கப்பட்டாலும் பரவலாக எண் என்ற பழைய வழக்கிலேயே அழைக்கப்படுகிறது. மாறிலி 6.02214X×1023.--Kanags \உரையாடுக 21:23, 7 சூன் 2012 (UTC)
திருத்தம்
தொகு"..அல்லது ஒரு கிராம் அளவு அல்லது ஒரு கிராம் அயனி அளவு " என்ற கூற்று தவறானது, எனவே நீக்கியுள்ளேன். ஒரு மோல் அளவு என்பதே சரி. --செல்வா (பேச்சு) 22:04, 7 சூன் 2012 (UTC)
நன்றி
தொகுஅவகாதரோ என்பதே "சரியான" (எளிமை சார்ந்த) தமிழ் வழக்கு. நன்றி சஞ்சீவி குமார். பாஃகிம், நீங்கள் குறிப்பிடுவது போல, constant என்பது மாறிலி என்று குறிக்க வேன்டியது மிகவும் சரியே, ஆனால் இங்கே Avagadro number என்று அழைக்கும் மரபும் உள்ளதால், அவகாதரோ எண் என்றும் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 22:55, 7 சூன் 2012 (UTC)
தலைப்பு
தொகுஅவகாதரோ எண் என்றோ, அவகாதரோ மாறிலி என்றோ தலைப்பை மாற்றுவது நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.--செல்வா (பேச்சு) 22:59, 7 சூன் 2012 (UTC)
நல்லது, செல்வா. தலைப்பை மாற்றிவிடுங்களேன்.--பாஹிம் (பேச்சு) 02:26, 8 சூன் 2012 (UTC)
- கட்டுரையை உருவாக்கிய பயனர் பார்வதியின் கருத்தையும் அறிந்தவுடன் மாற்றலாம் என்று எண்ணியிருந்தேன். சற்றே பொறுப்போம்.--செல்வா (பேச்சு) 02:45, 8 சூன் 2012 (UTC)
விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:03, 8 சூன் 2012 (UTC)