பேச்சு:அஸ்மா ஜெகாங்கீர்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m
  • இக்கட்டுரையில் பெண்களின் ஒறுத்தலை என்பதனை பெண்கள் மீதான ஒறுத்தலை என மாற்றலாமா?
  • ஒறுத்தல் என்பதற்கு தண்டனை (To punish) என்பதே முதன்மையாக தமிழ் விக்சனரியில் எழுதப்பட்டுள்ளது. இழிவுபடுத்து, புண்படுத்து என்பதும் (to mortify) தரப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை என்பது வேறு, இழிவுபடுத்துதல் என்பது வேறு அல்லவா? இதனையும் கவனிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 27 சூன் 2014 (UTC)Reply
செல்வசிவகுருநாதன், நான் கூற வந்தது persecution -- இதனை உரிமையடக்கல் எனத் தமிழாக்கம் செய்துள்ளேன். இப்போது சரியா ?--மணியன் (பேச்சு) 04:34, 27 சூன் 2014 (UTC)Reply

உரிமையடக்கல் என்பதனை சரியான சொல்லாகவே கருதுகிறேன். பெண்களின் உரிமையடக்கல் என எழுதுவதைவிட பெண்கள் மீதான உரிமையடக்கல் என்பதே சரியான இலக்கணம் என நினைக்கிறேன். பெண்களின் உரிமையடக்கல் என்றால், பெண்கள் செய்யும் உரிமையடக்கல் என்பதுபோல பொருள்படுகிறது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:07, 27 சூன் 2014 (UTC)Reply

Y ஆயிற்று இதனை நீங்களே செய்திருக்கலாமே ! யாவரும் தொகுப்பது தானே விக்கிக்கழகு :) --மணியன் (பேச்சு) 06:47, 27 சூன் 2014 (UTC)Reply

உடனடியாக செய்த திருத்தத்திற்கு மிக்க நன்றி! ஒரு விசயத்தில் மிகத் தெளிவாக நான் இருந்தால், நானே செய்திடுவேன்; எனது எண்ணத்தில் சிறு ஐயம் இருந்தாலும் உரையாடவே விரும்புகிறேன். உதாரணமாக ஒறுத்தல் என்பதனை படித்தபோது உடனடியாக புரியவில்லை; யோசித்தபோது, 'இன்னா செய்தாரை ஒறுத்தல்...' எனும் குறளைப் படித்திருந்ததால் அதன்பிறகு புரிந்தது. அதன்பிறகு விக்சனரியில் படித்ததில், வேறொரு ஐயம் வந்தது. எனவே கவனிக்குமாறு வேண்டுகோள் வைத்தேன். அதன்பிறகு இலக்கணத்திலும் ஐயம் வந்துவிட்டது! பலரும் படிக்கும் ஒரு கட்டுரையில், ஐயத்துடன் திருத்தத்தினை செய்ய மனம் ஒப்பவில்லை. எனவேதான் இன்னொரு வேண்டுகோள் வைத்தேன்; மற்றபடி, எழுதியவரே திருத்தட்டும் எனும் நினைப்பு இல்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:43, 27 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஸ்மா_ஜெகாங்கீர்&oldid=1684835" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அஸ்மா ஜெகாங்கீர்" page.