பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்
- மிகையான, அதுவும் வேற்றுமொழியிலான நூற்பட்டியலே தேவையில்லை. தமிழ் விக்கிக்குத் தேவையும் இல்லை. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:01, 3 சனவரி 2015 (UTC)
இதற்கு முன் சான்றில்லை வார்ப்புரு இடப்பட்டிருந்ததால் சான்று சேர்க்கும் முகமாக இந்நூற்பட்டியல் இடப்பட்டது. //நூற்பட்டியலே தேவையில்லை. தமிழ் விக்கிக்குத்// ஹி ஹி அப்படியானால் தமிழ் விக்கியில் உள்ள பெரும்பாலான அனைத்துக் கட்டுரைகளிலும் நூற்பட்டியல் அழிக்கப்பட வேண்டும். //மிகையான// ஹு ஹு அது உங்களுக்கு மட்டுமே???--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:04, 3 சனவரி 2015 (UTC)
- //இதற்கு முன் சான்றில்லை வார்ப்புரு இடப்பட்டிருந்ததால் சான்று சேர்க்கும் முகமாக இந்நூற்பட்டியல் இடப்பட்டது.// மீண்டும் அந்த வார்ப்புருவை இடவேண்டும். :/ சான்றில்லை என்றால் சான்றைச் சேருங்கள். நூற்பட்டியல் என்பது ஒரு சான்றாகாது. \\ //நூற்பட்டியலே தேவையில்லை தமிழ் விக்கிக்குத்//\\ என நான் கூறவில்லை. மீண்டும் கவனிக்க. *மிகையான வேற்றுமொழி நூற்பட்டியல்.* பெரும்பாலான என்றால் நீங்கள் இணைத்த அனைத்துமா??? முழுமையான கட்டுரை என்றாலும் சரி. ////மிகையான// ஹு ஹு அது உங்களுக்கு மட்டுமே// அப்பிடி நான் சொல்லல. நீங்கள் நினைத்தால் என் தவறல்ல.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:14, 3 சனவரி 2015 (UTC)
//நூற்பட்டியல் என்பது ஒரு சான்றாகாது// இதற்கான சான்றுகள் உளவா? //அப்பிடி நான் சொல்லல// இல்லே நீங்க தட்டச்சு செய்தீங்க. //பெரும்பாலான என்றால் நீங்கள் இணைத்த அனைத்துமா// இல்லை இணைக்கப்போகும் அனைத்தும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 3 சனவரி 2015 (UTC)
- ◕//இதற்கான சான்றுகள் உளவா?// ஆம் உள்ளன. அதற்கு சான்று சான்று. ஆம், நீங்கள் சான்றென்றால் என்னவெண்டு முதல் அறிந்துகொள்ளவேண்டும்.
- ◕//மிகையான// என நான் கூறினேன். ஆனால் அது
எனக்கு மட்டுமே என நான் கூறினேன்.(தட்டச்சுப்பிழை) எனக்கு மட்டுமெனக் கூறவில்லை. - ◕நீங்கள் இணைத்த, இணைக்கப்போகும் அனைத்தையும் குறிக்கவா //ஹி ஹி அப்படியானால் தமிழ் விக்கியில் உள்ள பெரும்பாலான அனைத்துக் கட்டுரைகளிலும் நூற்பட்டியல் அழிக்கப்பட வேண்டும்.// இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினீர்??? தங்களுடைய கட்டுரைகள் எனக்கூறத் தயக்கமா??--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:39, 3 சனவரி 2015 (UTC)
வணக்கம். இது தமிழ் விக்கிப்பீடியா ஆகும். ஆங்கில நூல்களின் பட்டியல் ஆங்கில எழுத்துக்களில் இடப்படுவது ஏற்புடையதே இல்லை. இத்தகைய பட்டியல்களைக் காணும்போது அவற்றை நீக்குவதே சரியானதாகும். சான்றாக நூற்பட்டியல் இணைக்கப்பட்டால் எத்தினையாம் பக்கத்தில் சான்று உள்ளது போன்ற விபரங்கள் தரப்பட்ட வேண்டும். வெறுமனே பட்டியல் இடுவது சரியல்ல. நன்றி. கோபி (பேச்சு) 17:10, 3 சனவரி 2015 (UTC)
- தமிழில் ஆதாரங்கள் இல்லாத போது பிற மொழியில் ஆதாரம் இருந்தால் நிச்சயமாகக் கொடுக்கலாம். அனைத்து ஆதாரங்களும் பிற மொழியில் இருப்பதால் அவற்றை நீக்குவது தேவையற்ற செயலாகவே கருதுகிறேன். எத்தினையாம் பக்கத்தில் சான்று உள்ளது போன்ற விபரங்கள் தரப்பட்ட வேண்டும் என்பது ஏற்புடையதே. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:37, 8 சனவரி 2015 (UTC)
- எத்தினையாம் பக்கத்தில் சான்று உள்ளது போன்ற விபரங்கள் தரப்படிருந்தால் அது ஆதாரம் ஆகும். ஆனால் இங்கே தரப்பட்டிருப்பது வெறுமனே நூற்பட்டியல். அத்தகைய பட்டியல் சான்றாகாது. இதே கட்டுரையை ஆங்கிலத்தில் வாசித்தால் 120 அடிக்குறிப்புக்கள் உள்ளன. நூற்பட்டியல் மேலதிக வாசிப்புக்காகவே இணைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நாம் பட்டியலைப் பிரதிசெய்து இடுவது சான்றுதரும் வேலையை மலினமாக்கி விடும். ஏதாவது கட்டுரைக்குச் சான்றுதர வேண்டுமெனின் ஆங்கில விக்கியிலோ அல்லது அமேசனிலோ போய் தேடிச் சில நூல்களின் பெயர்களை இட்டால் பிரச்சனை தீர்ந்தது என்றாகிவிடும். நன்றி. கோபி (பேச்சு) 15:00, 8 சனவரி 2015 (UTC)
நூல்களின் பட்டியல் வேறு. சான்று வேறு. நூல்கள் பட்டியலைத் தந்து விட்டு சான்று கோரல் வார்ப்புருக்களை நீக்கக் கூடாது. நூல் பட்டியல் ஆங்கிலத்தில் இருக்கிறது என்பது நீக்குதலுக்கு ஏற்புடைய காரணம் இல்லை. பல துறைகள் குறித்த செறிவான நூல்களின் தமிழாக்கங்கள் இல்லாத போது, குறித்த நூல்களைத் தேடி மேலும் தரவுகளை அறிந்து கொள்ள இந்த நூல் பட்டியல்கள் நிச்சயம் உதவும். அவற்றைத் தமிழாக்கியோ தமிழ் எழுத்துகளில் பெயர்த்தோ எழுதத் தேவையில்லை. அதே வேளை, முக்கியமான சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து தருவது பொருத்தமாக இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பட்டியலை அப்படியே வெட்டி ஒட்டத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 19:44, 8 சனவரி 2015 (UTC)
இரவி, நான் உங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன். பல துறைகள் குறித்த தமிழாக்கங்கள் இல்லாதபோது ஆங்கில விக்கிப்பீடியா போன்றவற்றினை நாடி ஆங்கில நூற்பட்டியல்களை அடையலாம். சில துறைகள் சார்ந்து மிக முக்கிய ஆங்கில நூல்களைப் பட்டியலாக்கலாம். ஆனால் கட்டுரைக்குக் கட்டுரை ஆங்கில நூற்பட்டியல்களை வழங்குவது சரியல்ல. அவ்வாறு செய்யலாம் என்றால் தமிழில் விக்கிப்பீடியா எதற்கு? தமிழ்க் கட்டுரைகளில் ஆங்கில எழுத்துக்கள் இருப்பது போன்றதான ஒரு சூழ்நிலையிலேயே, அதாவது வடமொழி ஆதிக்கக் காலத்தில் கிரந்த எழுத்துக்கள் தமிழுக்கு வந்தன. அதனையே மீண்டும் செய்வது சரியா? கோபி (பேச்சு) 13:58, 14 சனவரி 2015 (UTC)
- கோபி, தமிழ் ஆக்கங்களில் பிற மொழி எழுத்துகள் அளவு கூடி கலக்கின்றன என்ற நோக்கில் இதனைப் பார்க்க முடியுமா என்று தெளிவில்லை. பல கட்டுரைகளின் முக்கிய உசாத்துணைகள், சான்றுகள் ஆங்கில வழி ஆய்வுக் கட்டுரைகளில் தான் உள்ளன. இவற்றைத் தவிர்க்க முடியா. ஆங்கில எழுத்துகளைத் தவிர்க்கிறோம் என்று தமிழ் எழுத்துகளிலோ தமிழாக்கியோ எழுதினால் மூலத்தை இனங்காண்பதில் சிக்கல் கூட வரலாம். எனவே, ஆங்கில எழுத்துகள் கலப்பது தான் சிக்கல் என்றால், நூல் பட்டியல்கள் என்றில்லாம் அனைத்து வகையான பின்னிணைப்புகள் அடிப்படையிலும் பார்க்க வேண்டும். இவற்றைச் சில துறைக்கு மட்டும் என்று மட்டுப்படுத்துவதும் நடைமுறைச் சாத்தியமற்றது.
- தமிழ் நூல்கள்
- தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கிய நூல்கள்
- முக்கியமான ஆங்கில, பிற மொழி நூல்கள் சில (இவற்றின் எண்ணிக்கையை வேண்டுமானால் வரையறுக்கலாம்)
என்ற வரிசையில் முன்னுரிமை தரலாம். ஆனால், ஒரு முக்கியமான நூலோ சான்றோ, அது ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ இருக்கிறது என்பதற்காக புறக்கணிக்கப்படக்கூடாது.--இரவி (பேச்சு) 22:29, 14 சனவரி 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:23, 15 சனவரி 2015 (UTC)
இரவி, உங்கள் கருத்தின் முரண்நகை என்னவென்றால் இதே காரணத்தினையே கிரந்தப் பாவனையாளர்கள் தம்மை நியாயப்படுத்த முன்வைக்கிறார்கள். அர்ஜூனை அருச்சுனன் என்று எழுதினால் அவனை அடையாளம் காணமுடியாதாம் :) தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போர் அதனைப் பயன்படுத்துவோர் தமிழே தெரியாது வருவர் என்ற எடுகோளுடன் பங்களிக்க வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலமின்றிச் செயற்பட முடியாத நிலைக்குத் தமிழ் செல்லும். ஆங்கிலம் அறிவு மொழி தமிழ் முட்டாள் மொழி தமிழ் அறிவு வளர்ச்சிக்குப் பொருத்தமல்ல என்று சொல்லப்படும். (தேவ மொழி, நீச மொழி போல)
நான் தமிழ்த் தாலிபான் அல்லன். ஒரு சான்றினை மொழிகருதிப் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஆனால் சான்றல்லாத நூற்பட்டியல்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்கிறேன். மிக மிக மிக அரிதாக முக்கிய நூலொன்றினைக் குறிப்பிட நேரலாம். ஆனால் ஆங்கிலத்தில் தங்கிவாழும் நிலையினை ஏற்படுத்துவது சரியல்ல. பல கட்டுரைகளில் ஆங்கிலப் பகுதிகள் காணப்படுகின்றன. தமிழ் வசனங்களில் இடையிடையே ஆங்கிலச் சொற்கள். இது மிக மோசமான நிலை. மேலும் முடிந்தவரை உரோமன் எழுத்துக்களைத் தவிர்ப்பது இன்றியமையாதது. கிரந்தம் பயன்படுத்துவது எவ்வளவோ மேல். நன்றி. கோபி (பேச்சு) 12:50, 16 சனவரி 2015 (UTC)