பேச்சு:ஆதி சைவர்

Kanags unreferenced என்று இந்த பக்கத்தை தொகுத்திருந்தீர்கள். ஓரளவு தரமான மேற்கோள்கள் காட்டி, unreferenced என்ற கூற்றை நீக்கியிருந்தேன். இது சரிதானா? இன்னமும் reference வேண்டுமானால் நான் சேர்த்த தயார். தங்கள் ஆலோசனை தேவை. மேலும் பயனர்:Selvasivagurunathan m இந்த பக்கத்தை நீக்கி இருந்தார். அதன் காரணம் என்ன என்பதையும், பிழை இருப்பின் அது என்னவென்று தெரிந்தால், திருத்திக்கொள்ளவும் விரும்புகின்றேன். நன்றி --Jaivanth (பேச்சு) 11:15, 6 சூன் 2015 (UTC)Reply

கட்டுரையுடன் தொடர்பற்ற மேற்கோள்களைச் சேர்த்து வருகிறீர்கள். மேலும், தனிப்பட்ட வலைப்பதிவுகளை மேற்கோள்களாகத் தர முடியாது. அவை அனைத்தும் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 12:03, 6 சூன் 2015 (UTC)Reply

Jaivanth

தமிழ்நாடு சாதிகள் பட்டியல் கட்டுரையில் உள்ள "ஆதி சைவர் (703)" பற்றிய கட்டுரையா இது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 6 சூன் 2015 (UTC)Reply

ஆம். அவர்களேதான். சில மாதங்கள் முன்னர் உங்கள் "அந்தணர்" குறித்த பதிவு ஒன்றில் தனிப்பட்ட முறையில் வேறொரு தளத்தில் மாமத்தியார் என்றழைக்கப்படும் நாவிதர், மங்கலன் என்று அழைக்கப்படும் நாவிதர், சிவவேதியர், சிவ பிராமணர் என்று அழைக்கப்படும் ஆதிசைவர் இவர்கள் அனைவரும் பிராமணரே என்று ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று வினவினேன். அதற்கு நீங்கள் சாதி சான்றிதழில் பிராமணர் என்று இல்லை என்றீர். கவுண்டர் என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு வகுப்பினரின் சாதி சான்றிதழில் கூட கொங்கு வெள்ளாளர் என்று மட்டுமே இருக்கும். தயவுசெய்து இதுகுறித்து ஆழ்ந்த ஆய்வு தங்களுக்கு தேவைப்படும் என்று பரிந்துரைக்கிறேன். மேலும் இதுகுறித்த கல்வெட்டு ஆதாரங்கள் தங்களுக்கு தேவைப்பட்டால் அதனையும் அளிப்பேன். நான் இந்த பக்கத்தை துவக்கியது விக்கியில் இவர்களைப்பற்றி இல்லையே என்ற ஆதங்கம்தான். தொகுப்பாக இல்லை. உரைநடை வடிவில்தான் உள்ளது என்பதனை ஏற்கிறேன். தொகுத்து வழங்க சில நாட்கள் பிடிக்கும். அதுவரை அழியாமல் இருந்தால் மகிழ்வேன்.--Jaivanth (பேச்சு) 16:35, 6 சூன் 2015 (UTC)Reply
பயனர்:தென்காசி சுப்பிரமணியன்
காஞ்சியில் ராஜேந்திர சோழன் கங்கைக்கரையில் இருந்து வருவிக்கப்பட்ட ஆதிசைவர் சிலரை குடியமர்த்தியதாக சித்தாந்த சாராவளி கூறுகின்றது. ஆனால் காஞ்சியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொண்டை தேசத்திலும் இன்று ஆதிசைவர் "தொண்டைமண்டல ஆதிசைவ வெள்ளாளர்" என்ற பெயரில்தான் உள்ளார்கள். இவர்கள் தங்களை வெள்ளாளர் என்று 1901இன் சென்சஸ் அறிக்கையிலும் தெரியப்படுத்தி உள்ளார்கள்[1]. இவர்களிடம் அதே 5 கோத்திரங்கள் உண்டு. அவர்களின் மணவினை பதிவில் அவர்கள் கோத்திரங்களை காணலாம். http://www.hindusonlymatrimony.com/browse/Boys%20(Grooms)/Tamil/Thondai%20Mandala%20Aadhi%20Saiva%20Vellalar/all

இவர்கள் சுந்தரர் தன்கள் இனத்தவர் என்கிறார்கள். ஆக வைதீக சமயம் அல்லாத அந்தணர் சிலர் இவர்களோடு ஐக்கியமாகியிருக்கலாம் என்பது என் கருத்து. --Jaivanth (பேச்சு) 13:22, 7 சூன் 2015 (UTC)Reply

இவர்கள் யார்?

சைவ சிவாச்சாரியார் (754)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:39, 6 சூன் 2015 (UTC)Reply

ஆச்சார்யா அபிஷேகம் மேற்கொண்ட ஆதி சைவர் / சிவ பிராமணர் தான் சைவ சிவாச்சர்யார் என்று அழைக்கப்படுவர். அவரே குருவாக வழிநடத்த தகுதி எய்தியவர். அவரைத்தான் குருக்கள் என்பர். ஆனால் ஆகமத்தில் வைணவ ஆகமங்களும் உண்டு. அதன்படி ஆச்சார்யா அபிஷேகம் மேற்கொண்டவர் வைணவ ஆச்சார்யார். பட்டாச்சார்யார் என்றும் அவர்களை வழங்குவர். சிவாச்சார்யார்களுக்கும் பட்டர் பட்டம் உண்டு. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அழியாமல் இருக்கும் ஆகமங்கள்படி பிராமணர் என்றாலே அது சைவ வைணவ ஆச்சார்யார்கள் மட்டுமே. உமாபதி சிவம் என்ற பெயரை வைதீகர்கள் வைக்க மாட்டார். ஆச்சார்யா அபிஷேகம் மேற்கொண்ட உமாபதி சிவம் சிவாச்சாரியார் ஆனார். தில்லை வாழ் அந்தணர் ஆதி சைவரே என்று எனக்கு தெரிந்து 20க்கும் மேற்பட்ட மடாதிபதி சிவாச்சாரியார்கள் கூறியுள்ளார்கள். கோப்பெருஞ்சிங்கன் காலத்துக்கும் பிற்பட்ட காலத்தில்தான் மகுட ஆகமப்படி அமைந்த தில்லை கோவிலை ஆக்கிரமித்து இன்று தாங்களே தில்லை வாழ் அந்தணர் என்று கூறுக்கொள்கின்றனர் என்று அவர்கள் எனக்கு உரைத்தனர். சோழ தேசத்திலிருந்து பாலக்காடு சித்தூர் சென்று ஐக்கியமாகிய மன்னாடியார்களின் குலகுரு வைணவ பட்டாச்சார்யார் & சைவ சிவாச்சாரியார்கள் மட்டுமே. அதே போல் அந்தணர் வகுப்பு சிவ தீஷை பெற்றால் அவர்கள் மட்டுமே ஆதி சைவர். க்ஷத்ரிய வைஷ்ய வர்ணங்கள் சிவ தீஷை பெற்றால் அவர்கள் அநு சைவர். வேடுவர்கள் பெற்றால் அவர்கள் அந்நிய சைவர். இது சைவ சித்தாந்தம். சிவ தீஷை பெற்ற வைதீக பிராமணர் மகாசைவர் தான். ஆதிசைவர் ஆகமுடியாது. ஆனால் மகாசைவர் ஸ்மார்த்தராக இருந்து குலகுருவாக இருக்கவும் முடியும். இந்த வகை மிக அரிதான ஒன்று.
ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை:
சுத்தமான வர்ணத்தவர் எவரும் ஆச்சார்யார் ஆகலாம். ஆனால் அந்தணர் மட்டுமே ஆதி சைவராக இருக்கமுடியும்
http://arumuganavalar.webs.com/saivapeethaviyal.html
ஆதாரம்:
1. "ப்ராம்மணா ;க்ஷத்ரியா : வைஷ்யா :சூத்ரா :ஸ்ரீந்த குலோத்பவா : | ஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந : || " -சுப்ர பேதாகமம்
(நல்ல குல ஒழுக்கமுள்ள பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் ஆகிய நால்வருமே ஆச்சாரியராகும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள் )
2. " வாஷாண ;ஸ்ரீவஸம்காராத் புக்தி முக்தி ப்ரேதா பவேது : | பாஷாண ; ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது || " – ஸ்கந்த காலோத்ர ஆகமம்
(கல்லானது சிவ ஸம்ஸ்காரத்தினாலன்றோ போக மோக்ஷங்களை தருவதாகின்றது..இப்படி கல்லே சிவத்தன்மை அடையுமாகின் ,சூத்திரன் அங்ஙனம் ஆகான் என்பது எப்படி ? )
3. " சூத்திரனும் தேசிகனா வான்மாணாந் தந்துறவி சாத்திரத்தின் மூன்றுமுணர்ந் தால் " – (மறைஞான சம்பந்த தேசிகரின் சைவ சமய நெறி,37ஆவது குறள் )
(பசு,பதி,பாசம் எனும் திரிபதார்த்தங்களை அறிவானாகின்,சூத்திரனும் ஆச்சாரியராகலாம் )
4." பசு நூல்களை பற்றாது பதி நூல்களாகிய சிவ நூல்களைப் பற்றி பயிலும் பிராமணர் முதலான நான்கு வருணத்தவருமே ஆச்சாரியர் ஆவதற்கு தகுதி உடையவர்கள் "- சிவ புராணம்
அந்தணர் பகுப்பை சேர்ந்த ஆதிசைவர்கள் 99% சைவ வேளாளர் பிரிவினர். சுந்தரமூர்த்தி நாயனார், திருமாளிகைத்தேவர் முதற்கொண்டு இதனை வரிசைப்படுத்தலாம். --Jaivanth (பேச்சு) 09:13, 7 சூன் 2015 (UTC)Reply
பொதுவில் வர்ணங்களைப்பற்றி நான் கட்டுரையில் குரிப்பிடப்போவது இல்லை. காரணம் முக்திக்கு வழிகாட்டும் ஆதி சைவத்தில் அதன் நோக்கம் மட்டுமே முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற என் நோக்கம்தான். ஆதிசைவம் என்ற பதம் 12ஆம் நூற்றாண்டில் இருந்துதான் வழக்கில் இருக்கின்றது. ஆனால் வரலாற்று பாத்திரங்களோ 8ஆம் நூற்றாண்டில் இருந்தே காணமுடிகின்றது. இந்த முடிச்சினை அவிழ்க்க ஆதிசைவம் முன்னர் என்ன பெயரில் இருந்தது என்று ஆராயுங்கள். தாங்கள் கேட்டனவைக்கும், கேட்காமல் நான் கூறிய சிலவற்றில் இருந்தும் உங்களுக்கு தெளிவு கிட்டியிருப்பின் மகிழ்ச்சி. --Jaivanth (பேச்சு) 09:19, 7 சூன் 2015 (UTC)Reply
மாமாத்தியார் என்பது சமையம் அல்ல குலப்பெயர். சிறுதொண்ட நாயனார் குடி மாமாத்தியார் குடி. மாமாத்தியார் அந்தணர் என்று பகுக்கப்பட்டுள்ளது. மாமாத்தியார் நாவிதர் சமொகத்தில் ஒரு பிரிவு. அதேபோல் மங்கலன் என்ற நாவிதர் பிரிவுக்கு "மூவாயிரவன்" என்று 2 கல்வெட்டுகள் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் சமய ரீதியாக ஆதிசைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆய்வுகள் தேவை. நன்றி --Jaivanth (பேச்சு) 09:38, 7 சூன் 2015 (UTC)Reply
  1. Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆதி_சைவர்&oldid=3007900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆதி சைவர்" page.