பேச்சு:ஆன்றி மட்டீசு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இவருடைய பெயர் Henri Matisse என்று எழுதினாலும் இதில் உள்ள H எழுத்து பிரான்சியம், எசுப்பானியம், இத்தாலியம் போன்றவற்றில் ஒலிப்பதில்லை. என்றி மட்டீசு அலல்து என்று மத்தீசு என்று எழுதினால் சரியாக இருக்கும். ஒவ்வொரு மொழியரும் வெவ்வேறு விதமாகவும் ஒலிப்ப்ர். இவர் பிரான்சியர் ஆகையால் என்றி மத்தீசு என்று எழுதினால் கூடிய அளவு பொருத்தமாக இருக்கும். எனவே தலைப்பை மாற்ற உள்ளேன்.--செல்வா 01:37, 19 மே 2011 (UTC)
- தலைப்பை மாற்றியது சரிதான். தமிழ் எழுத்துமுறைக்கேற்ப எழுதுவோம், அதிலும் இந்த இடத்தில் இந்த நபரின் தாய்மொழியில் அவரது பெயரின் ஒலிப்புக்கு நெருங்கி வந்துள்ளபடியால் சிறப்பு. -- சுந்தர் \பேச்சு 02:47, 19 மே 2011 (UTC)
- பிரான்சில் இவரை ஆன்றி என்றல்லவா ஒலிப்பார்கள். மேலும் மென்மையாக தகரம் வருவதில்லை. ”ஆன்றி மட்டீசு” என்று மாற்றிவிடலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 19 மே 2011 (UTC)