பேச்சு:ஆபிரிக்கான மொழி

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதன் தலைப்பை ஆப்பிரிக்கான மொழி என மாற்றலாமா? ஆப்பிரிக்கா என்னும் கண்டம் என்பதால் ஆப்பிரிக்கானா என்ரு இருந்தால் பொதுச் சீர்மை இருக்கும். இலங்கையில் ஆபிரிக்கா என்பார்களா? இப்படி எழுதுவது பழக்கம் என்றால், இலங்கையில் இதனை aabirikkaah என்று பலுக்குவார்களா, அல்லது aappirikkaah என்று பலுக்குவார்களா? aappirikkaah என்று பலுக்குவதானால் ஆப்பிரிக்கா என்ரு எழுதுவதுதான் நல்லது. --செல்வா 14:11, 30 மே 2008 (UTC) ஆப்பிரிக்கான மொழி என்பது சரியாகப்படுகிறது.--கார்த்திக் 17:45, 30 மே 2008 (UTC)Reply

இலங்கையில் ஆபிரிக்கா என்பதை aabirikkaah என்றோ aappirikkaah என்றோ உச்சரிப்பதில்லை. aapirikkaah என்றே உச்சரிக்கிறோம். இது பற்றி நான் முன்னர் எழுதிய குறிப்பை இங்கே பார்க்கலாம். மயூரநாதன் 18:01, 30 மே 2008 (UTC)Reply
மயூரநாதன், அங்கே பார்த்தேன். பகரம் முதல் எழுத்தாக இல்லாவிடில், பகரத்திற்கு முன் ஒற்று இல்லை என்றால் அது மெலிந்தே ஒலிக்கும் அல்லவா? அதனால்தான் ஆபிரிக்கா என்று எழுதினால் aabirikkaa என்றுதானே ஒலிக்க வேண்டும். தமிழ் மொழியின் ஒலிப்பானது பேச்சு வழக்கில் சிறிது சிறிது மாறலாம் (வருவாக என்பதை வருவாஃக என்று சொல்வது போல), ஆனால் அழுத்தம் திருத்தமாக சீரான முறைப்படி ஒலிக்கும் பொழுது வல்லின ஒலிப்பு விதிகள் பின்பற்றுதல் வேண்டுமல்லவா? Abirikkaa, Abirigaa என்று இருந்தால் இலங்கையில்எப்படி தமிழில் எழுதுவார்கள்? அபிராமி, ஆபிரகாம் (aabiragaam), அபுபுல்லா (abubullaah), அபின், அபயம், உபயம் என்று இப்படி எத்தனையோ பிறமொழிச்சொற்கள் உள்ளனவலவா? மேலும் சில இடங்களில் ஆபிரிக்கா என்றும் சில இடங்களில் ஆப்பிரிக்கா என்றும் எழுதுவது நல்லதல்ல என்று நினைக்கிறேன். --செல்வா 18:33, 30 மே 2008 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் பொதுப்பயன்பாடு கருதி இக்கட்டுரையை ஆப்பிரிக்கான மொழி என மாற்ற உடன்படுகிறேன். ஆனாலும் Africaans என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் இம்மொழியை தமிழில் ஆப்பிரிக்கான்சு மொழி என அழைக்கலாமா என இப்பொழுது என்னுள் கேள்வி எழுகிறது. இம்மொழி பேசும் மக்களை ஆப்பிரிக்கானர்கள் என அழைக்கலாமா? என்ன சொல்கிறீர்கள்?--Kanags \பேச்சு 22:28, 30 மே 2008 (UTC)Reply

நன்றி கனகு. ஆப்பிரிக்கான்சு மொழி என்று சொல்வதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆப்பிரிக்கான மொழி என்று இருந்தாலும் எனக்கு ஏற்பே. --செல்வா 23:03, 30 மே 2008 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆபிரிக்கான_மொழி&oldid=247485" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆபிரிக்கான மொழி" page.