பேச்சு:ஆப்கானித்தான்

ஆப்கானித்தான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


ஒவ்வொரு நாளும் ஒரு பந்தியை ஆப்கானிஸ்தான் கட்டுரைக்கு சேர்ப்பதாக முடிவு எடுத்துள்ளேன். இதன் மூலம் இது ஒரு முழுமையான கட்டுரையாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன். --ஜெ.மயூரேசன் 05:06, 5 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரையை மொழி மாற்றம் செய்து வருகின்றேன். ஆயினும் மொழி பெரும் தடைக்கல்லாக உள்ளது. சில சில தகவல்களைத் தவிர்த்து நான் மொழி பெயர்த்து வருகின்றேன். முடியுமானவர்கள் நான் விட்ட சில வசனங்களையும் தமிழாக்கம் செய்து இங்கு சேர்க்கவும். நன்றி. --ஜெ.மயூரேசன் 03:23, 12 செப்டெம்பர் 2006 (UTC)Reply
பாராட்டுகள் மயூரேசன்! நெடிய பெருங் கட்டுரை! சிறு சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

மொழிநடையும் ஆங்காங்கே மாற்ற வேண்டும், எனினும் நல்ல ஆக்கம். என் பாராட்டுகள்!--செல்வா 12:24, 1 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி திரு செல்வா அவர்களே! இரண்டு வாரத்துக்குள் முற்றிலும் மொழிமாற்றம் செய்துவிட எண்ணுகின்றேன்.. அதன் பின்னர் வேறு ஒரு கட்டுரையை தத்து எடுக்க வேண்டியதுதான். மாற்றங்களை நீங்கள் செய்யலாம். நன்றி --ஜெ.மயூரேசன் 16:56, 3 பெப்ரவரி 2007 (UTC)


பிரித்தானிகா கட்டுரையும் பார்க்கவும் [1] [2]

ஷாஹி என்ற அரச வம்சத்தினர் 3ம் நூற்றாண்டிலிருந்து 10ம் நூ. வரை கபூல்/ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தினர். ஷாஹிக்கள் புத்த அல்லது இந்துமதத்தினர். அதனால் "ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்ராஜ்ஜியங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில்ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்" என்பது சரியாகாது. கடைசியான காபூல் அரசர் ஜயபாலன் துருக்கிய இஸ்லாமிய சபுத்கஜினுடன் கிபி 1021 ல் போர் தொடுத்து தோற்றுப் போனான். கிபி 1000 வரை இந்து/புத்த மக்கள் ஆப்கானிஸ்தானில் பெருமளவாக இருந்திருக்கெலாம்.--விஜயராகவன் 10:02, 5 பெப்ரவரி 2007 (UTC)

  • ஆப்கானிசுதான் என நகர்த்தலாமென கருதுகிறேன். (த* உழவன் 07:15, 4 ஜூன் 2010 (UTC))

ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னரின் பெயர் ழாஹிர் ஷா (ظاهر شاه) என்பதாகும். இப்பெயர் அரபு மொழியிலேயே உள்ளது. இதனைச் சரிவர ஆங்கிலத்தில் எழுத முடியாமையினாலேயே உருது மற்றும் பஷ்தூ மொழிகளின் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்தில் Zahir Sha என்று எழுதப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றியே தமிழிலும் அது எழுதப்பட்டுள்ளது. எனவே, இதனைச் சரியான அமைப்பில் ழாஹிர் ஷா என மாற்றி விடலாமா? தயவு செய்து விளக்குக.--பாஹிம் 14:57, 17 அக்டோபர் 2010 (UTC)Reply

  • அபுதாபி என்பதை ar:أبوظبي, en:Abu Dhabi, பாகிஸ்தானியர்கள் உருது மற்றும் பஷ்தூ மொழிகளின் ஒலிப்பிற்கு ஏற்ப அபுஜாபி என்றழைக்கின்றனர்.யாரும் அபுழாபி என்றழைக்கவில்லை. ஆகவே,மாற்றம் செய்ய வேண்டியதில்லை.--ஹிபாயத்துல்லா 15:26, 17 அக்டோபர் 2010 (UTC)Reply

சகோதரர் ஹிபாயத்துல்லா அவர்களே, சாஹிர் ஷா அல்லது ஸாஹிர் ஷா என்று எழுதிவிட்டு அதனை அப்படியே வாசித்தால் சூனியக்கார மன்னன் என்று பொருள் வரும். சரியான அமைப்பின்படி ழாஹிர் ஷா என்று எழுதி அப்படியே வாசித்தால் வெளிப்படையான மன்னன் என்று பொருள். அரபு மொழியறிந்தவர்கள் இதனை நன்கறிவர். எனவே, இந்த விபரீத விளைவைத் தவிர்க்க நாடியே அதனை ழாஹிர் ஷா என மாற்றலாமா என்று கேட்டேன். தயவு செய்து இதனை மீண்டும் கவனிக்கவும்.--பாஹிம் 15:43, 17 அக்டோபர் 2010 (UTC)Reply

பாகிம், இபாயதுல்லா மூல மொழியின் ஒலிப்புகளை அப்படியே பயன்படுத்துவது தமிழ் விக்கியில் வரவேற்கப்படும் ஒன்றே. எனவே மாற்றுவதில் தவறு இல்லை என்பதே எனது கருத்து. --அராபத்* عرفات 16:29, 17 அக்டோபர் 2010 (UTC)Reply
  • ழாஹிர் ஷா என்று தமிழகத்தில் அரபு மொழியறிந்தவர்கள் அழைக்கின்றனர். அரபிகள் தாஹிர் ஷா என்றழைக்கின்றனர்.என்பதை விளக்கவே அபுதாபியை உதாரணம் காட்டியுள்ளேன்.மூல மொழியின் ஒலிப்புகளை அப்படியே பயன்படுத்த முடிவுசெய்தால் தாஹிர் ஷா என மாற்றவேண்டும்.மேலும் ஸிஹ்ரு என்றால் சூனியம் என்று பொருள். ஸஹிர் என்றால் சிறிய என்று பொருள். ஸஹிர்ஷா என்றால் சிறிய மன்னன் என்று பொருள்.

--ஹிபாயத்துல்லா 16:48, 17 அக்டோபர் 2010 (UTC)Reply

முதலாவது இங்கு எழுதும் மொழி தமிழ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் எழுத்துகளில் தமிழில் வழங்கும் பெயர் வடிவின் சரியான முதல்மொழி வடிவைக் கண்டபின் பொருள் கொள்ளத்தொடங்குங்கள். Bank என்பதை ஒருவன் பாங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள். அதன் முதல் மொழி அறிந்து அதிலும் சரியான பொருள் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இபயத்துல்லா கூறுவதை நோக்கும் பொழுது, தாஃகிர் சா என்று தமிழில் எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். பாஃகிம் கூறுவதை நோக்கினால் இழாஃகிர் சா என எழுத வேண்டுமோ எனத் தோன்றுகின்றது. சா என்பது வேண்டாம் எனில் இழ்சா என்று எழுதுங்கள். ழ்சா என்பது ஏறத்தாழ shaa என்பது போலவே ஒலிக்கும். இராமன், இலிங்கம் என்பது போல இழ்சா எனலாம். தமிழில் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது. சேர்த்து எழுதினால் தாஃகிர்ழ்சா என்றோ இழ்சாஃகிர்ழ்சா என்றோ எழுதலாம். எப்படி அரபி மொழியிலோ ஆங்கிலத்திலோ ஞானசம்பந்தன், நெடுஞ்செழியன், அழகப்பன், வள்ளி முதலான பெயர்களை எழுத இயலாதோ, அதுபோலவே பல அரபி மொழிச்சொற்களைத் தமிழில் எழுத இயலாது. இதனைப் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.--செல்வா 17:58, 17 அக்டோபர் 2010 (UTC)Reply

தலைப்பை மாற்றுக தொகு

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. ஆப்கானிஸ்தான் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை ஆப்கானிஸ்தான் என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:24, 25 செப்டம்பர் 2019 (UTC)

சரியான பெயர் அப்கானிஸ்தான். எனவே தமிழ் முறைப்படி அப்கானித்தான் அல்லது அபுகானித்தான் என்றிருப்பதே தகும்.--பாஹிம் (பேச்சு) 04:24, 20 ஆகத்து 2021 (UTC)Reply

தேவையற்றது. தமிழில் ஆப்கானிஸ்தான் என்றே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.--Kanags \உரையாடுக 06:14, 20 ஆகத்து 2021 (UTC)Reply

@செல்வா: உட்பட மற்ற நிருவாகிகளினதும் கவனத்துக்கு: தேவையற்றதெனத் தனியொருவர் முடிவெடுப்பது எப்படி? இதைப் பற்றி உரையாடினால் பல தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.--பாஹிம் (பேச்சு) 07:44, 20 ஆகத்து 2021 (UTC)Reply

பயங்கரவாத நாடல்ல இஸ்லாமிய குடியரசு நாடு தொகு

இஸ்லாமிய பயங்கரவாத நாடல்ல ஆப்கானிஸ்தான் Md Riyas7 (பேச்சு) 14:51, 16 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆப்கானித்தான்&oldid=3696208" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆப்கானித்தான்" page.