பேச்சு:ஆய்த எழுத்து
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton in topic ஆய்த எழுத்துப் பாவனை
ஆய்த எழுத்துப் பாவனை
தொகுஎனக்குத் தெரிந்தவரையில் ஆய்த எழுத்து எழுத்தின் முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. நான் அறிந்து கொண்ட காரணங்கள்.
- ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. (தொல்காப்பியம்)
- எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே (தொல்காப்பியம்)
முதலாவது ஆய்த எழுத்து தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரவேண்டும் எனக் கூறுகின்றது.
இரண்டாவது சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது எனக் கூறுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து என்பதால் இவ்விதி அதற்கும் பொருந்துகின்றது.
பல கட்டுரைகளில் ஆய்த எழுத்து முதலிலும் இறுதியிலும் காணப்படுகின்றது. எனவே இது குறித்த தெளிவான முடிவை எடுப்பது தேவையெனக் கருதுகின்றேன். இதற்கு விதிவிலக்கு இருப்பின் தெரிவிக்கவும். --Anton (பேச்சு) 02:02, 9 சூலை 2012 (UTC)
- மேலும் கலந்து முடிவு எடுத்தால் நன்கு. எனது கருத்து சில ஆங்கில வார்த்தைகளுக்கு விதிவிலக்கு அளித்தல் உதவும். குறிப்பாக f என துவங்கும் வார்த்தைகளுக்கு. குறைந்தது வழிமாற்றுகளாவது வைத்தல் வேண்டும் --அஸ்வின் (பேச்சு) 14:45, 27 ஏப்ரல் 2020 (UTC)
- முறையான ஆங்கில உச்சரிப்பும் அற்ற தமிழ் இலக்கண மீறல் உள்ள அமைப்ப தேவையற்றது. இலக்கணம் தெரியாத ஊடகங்கள் போன்று விக்கி செயற்பட வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. --AntanO (பேச்சு) 14:51, 27 ஏப்ரல் 2020 (UTC)
- பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் - இங்கும் ஏற்கெனவே உரையாடியுள்ளோம். அரை மாத்திரையில் தமிழில் எப்படி உச்சரிக்கத் தொடங்குவது? --AntanO (பேச்சு) 14:53, 27 ஏப்ரல் 2020 (UTC)
- விக்கியில் தேடும் சாதரண பயனர்களுக்கு இவ்வாறான வழிமாற்றுகள் உதவும். குறிப்பாக வேற்றுமொழி வார்த்தைகளுக்கு அனைவரும் இலக்கணத்தினை பின்பற்றுவதில்லை. இவ்வாறான பெயர்களை தேடுவது இலகுவாக இல்லை. இவற்றினை வழிமாற்றுகளாக வைப்பதில் பிழை ஏதும் இல்லையே! மேலும் இவற்றினால் பயனர்கள் கற்றுக்கொள்ளலாம்!--அஸ்வின் (பேச்சு) 16:07, 27 ஏப்ரல் 2020 (UTC)
- பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் - இங்கும் ஏற்கெனவே உரையாடியுள்ளோம். அரை மாத்திரையில் தமிழில் எப்படி உச்சரிக்கத் தொடங்குவது? --AntanO (பேச்சு) 14:53, 27 ஏப்ரல் 2020 (UTC)