பேச்சு:ஆற்காடு
பெயர்க் காரணம்
தொகுஆல்+காடு=ஆற்காடு. ஆல மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அப்பெயர் ஏற்பட்டது.2409:4072:591:95B7:0:0:26FC:18A0 06:06, 17 சூலை 2020 (UTC)
=ஆர்க்காடு பெயர்க் காரணம்.
தொகுசோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் 'ஆர்' என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு ஆகும். ஆர்க்காடு என்ற ஊர்ப்பெயரே இன்று மாவட்டத்திற்கும் பெயராக வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு 'அழிசில்' என்ற குறுநில மன்னனுக்கு உரியதாய் இருந்துள்ளது. இப்பொழுது வடவார்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் இவ்வூர் காணப்படுகிறது.
"படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்" 2
என்னும் அடிகள் ஆர்க்காடு சோழர்களின் நகரமாக இருந்தததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக 'ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்' என்னும் புலவர் காணப்படுகின்றார்.
இதனடிப்படையிலும், தமிழ்ச்சான்றோர்கள் பலர் ஆர்க்காடு என்று பயன்படுத்தி வருவதையும், அதுபோழ்து பலர் ஆற்காடு என்று பயன்படுத்துவது தவறு என்று எழுதியுள்ளதையும் கருத்திற்கொண்டு இப்பக்கம் உருவாக்கப் பட்டது.
எனவே, பொறுப்பில் உள்ளவர்கள் ஆவன செய்திட வேண்டுகின்றோம்.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 06:15, 15 சனவரி 2013 (UTC)--சீராசை சேதுபாலா./உரையாடுக. 06:15, 15 சனவரி 2013 (UTC)
ஆர்க்காடு என்ற வார்த்தையே சரியானது என்ற கருத்து ஏற்கப்படுகிறதா / மறுக்கப்படுகிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?
பெயர்க் காரணம்.
தொகுஆல்+காடு=ஆற்காடு.
ஆல மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், 'ஆற்காடு' என்ற பெயர் ஏற்பட்டது.
முற்காலத்தில், ஊர்களின் பெயர்கள், அந்த இடங்களைச் சார்ந்த மரங்கள், தெய்வங்கள், நிலப்பரப்புகளின் முக்கியத்துவங்களின் அடிப்படைகளில் பெயரிடப்பட்டன. Helppublic (பேச்சு) 07:12, 17 சூலை 2020 (UTC)