பேச்சு:ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை

ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இரு கோயில்கள் தொகு

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பசுபதிகோயில் என்றழைக்கப்படுகின்ற ஊரில் பசுபதீஸ்வரர் என்ற பெயரில் இரு கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று மாடக்கோயில். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற இக்கட்டுரையில் இரு கோயில்களைப் பற்றிய செய்திகளும் கலந்து தரப்பட்டுள்ளன. இவ்விரு கோயில்களுக்கும் நேரில் நான் சென்றுள்ளேன். விரைவில் இவை பற்றி தனித்தனியாகவோ, ஒரே கட்டுரையில் மற்றொரு பகுதியாக எழுதவுள்ளேன். இவ்விரு கோயில்கள் விரைவில் பதிவினை மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:47, 6 மார்ச் 2016 (UTC)

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையின் (பசுபதிகோயில் என்னும் பெயர் உள்ள ஊரில்) வடக்குப்புறம் புள்ளமங்கை கோயில் உள்ளது. சாலையின் தென்புறம் பசுபதிகோயில் உள்ளது. கிழார் கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றே இக்கோயிலில் உள்ள அனைத்துக் கல்வெட்டுகளும் குறிப்பிடுவதாகவும், தற்போது வழங்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்பது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்காகும் என்று திரு தில்லை கோவிந்தராஜன் கருத்து தெரிவித்தார். மேலும் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:08, 6 மார்ச் 2016 (UTC)

இரு கோயில்கள் தனித்தனிப்பதிவாக்கும் முயற்சி உதவி வேண்டல் தொகு

கீழ்க்கண்ட விவரங்களின் அடிப்படையில் பசுபதிகோயில் என்ற நிலையில் இரு கோயில்கள் உள்ளதை அறியலாம். (சான்று என். செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் 2004 சிறப்பு மலர், பக்.117 முதல் 121).

1) புள்ளமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஏழாவது கோயில்) ஊரின் பெயர் : வெள்ளாளப் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே ஐந்து நிமிட நடைதூரத்தில் கோயில் உள்ளது. அய்யம்பேட்டை கண்டியூர் சாலையில் அய்யம்பேட்டையிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது. இறைவன் : ஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்து மகாதேவர் இறைவி : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி சிறப்பு  : சோழர் காலச் சிற்பக் கலைக்கூடமாக இக்கோயில் உள்ளது. மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.

2) பசுமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஐந்தாவது கோயில்) ஊரின் பெயர் :கள்ளர் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து தெற்கில் 0.5 கிமீ தொலைவில் பிரிவு சாலையில் கோயில் உள்ளது. இறைவன் : பசுபதீஸ்வரர் இறைவி : பால்வள நாயகி, லோகநாயகி சிறப்பு  : கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று.கடைசியாக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அரியசிற்பக்கலைப்படைப்பாகும்.

பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற இப்பதிவில் இரு கோயில்களைப் பற்றிய செய்திகளும் கலந்திருப்பதைக் காணமுடிகிறது. தலைப்பு பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்றிருப்பது தவறாகும். இப்பதிவின் தலைப்பு புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் (அல்லது) புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் என்று அமையவேண்டும். இப்பதிவின் தலைப்பினை புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் என்றோ புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் என்றோ என்று மாற்றித்தர வேண்டுகிறேன். இதுவரை எழுதப்படாத மற்றொரு கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றி புதிய பதிவினைத் தொடங்குவேன். அதற்கான புகைப்படங்களையும் இணைப்பேன்.இருகோயில்களுக்கும் நான் நேரில் சென்றுவந்துள்ளேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 7 மே 2016 (UTC)Reply

புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் எனப்படுகின்ற கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலைப் பற்றிய கட்டுரை ஒப்புநோக்கிற்காக கீழே தரப்பட்டுள்ளது. Shiva Temples of Tamil Nadu ஆலந்துறைநாதர் கோயில், திருப்புள்ளமங்கை. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:47, 7 மே 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 07:04, 7 மே 2016 (UTC)Reply

வணக்கம், நந்தகுமார். தங்களின் உதவிக்கு நன்றி. விரைவில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றிய பதிவை எழுதுவேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:57, 9 மே 2016 (UTC)Reply

வணக்கம், பா.ஜம்புலிங்கம், ஜெகதீஸ்வரன். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றிய பதிவை எழுதிய பின், திருப்புள்ளமங்கை பசுபதி கோயில், பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் என்ற வழிமாற்றுகளையும் உருவாக்க வேண்டும். தற்பொழுது இந்த வழிமாற்றிகள் முறிந்துவிட்டதால் நீக்கி உள்ளேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 10:10, 11 மே 2016 (UTC)Reply

வணக்கம், நந்தகுமார். இன்று பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற பெயரில் புதிய பக்கம் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்துள்ளேன். தொடர்ந்து இப்பதிவினையும், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் பதிவினையும் மேம்படுத்துவேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:11, 12 மே 2016 (UTC)Reply

வணக்கம், பா.ஜம்புலிங்கம், மிக்க நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 04:41, 12 மே 2016 (UTC)Reply

நன்றி, நந்தகுமார். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் பேச்சுப்பக்கத்தில், இரு கோயில்களைப் பற்றிய மேற்கண்ட விவரங்களைத் தெளிவிற்காகத் தந்துள்ளேன். நன்றி, நந்தகுமார். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் பேச்சுப்பக்கத்தில், இரு கோயில்களைப் பற்றிய மேற்கண்ட விவரங்களைத் தெளிவிற்காகத் தந்துள்ளேன். முந்தைய பதிவை கையொப்பமின்றி அனுப்பிவிட்டேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:24, 12 மே 2016 (UTC)Reply

  ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை" page.