பேச்சு:ஆலா
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fasly
ஆலா என இங்கு குறிப்பிடப்படும் பறவை ஆர்க்டிக் டெர்ன் (பறவை) எனப்படும் பறவையா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:31, 11 சூலை 2012 (UTC)
- இல்லை "Sternidae" எனும் குடும்பத்தைச் சேர்ந்தது என நினைக்கின்றேன் (en:Tern).--Anton (பேச்சு) 13:43, 11 சூலை 2012 (UTC)
- ஆலா என்பது common tern (Sterna hirundo) என்று கூறுகின்றது இந்தக் கட்டுரை. Sterna acuticauda என்னும் வகையை கறுப்பு வயிற்று ஆலா என்கிறது. ஆனால் ஆலா என்றால் White-bellied Sea Eagle என்கிறது தமிழ்ப் பேரகராதி. ஆலா என்பது கட்டாயம் நீர்ப்பறவையைச் சுட்டும் பெயர். ஆல் என்பது நீரைச் சுட்டும் சொல் (என் முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பு எழுதியுள்ளதைச் சுட்டுகின்றேன். வெண்ணகடு நீர்க்கழுகு (white-bellied Sea Eagle) என்பது ஆலா இல்லாமலும் இருக்கலாம் என்பது என் கருத்து. அகடு = வயிறு. --செல்வா (பேச்சு) 14:48, 11 சூலை 2012 (UTC)
கறுப்பு வயிற்று ஆலா எனப் பெயர் மாற்றலாமா? --Anton (பேச்சு) 04:50, 12 சூலை 2012 (UTC)
இந்த் த்லைப்பின் கீழ் ஆலாக்களின் வகைகளை கொடுத்தால் எப்படி--Fasly (பேச்சு) 05:03, 12 சூலை 2012 (UTC)