பேச்சு:இடாய்ச்சு மொழி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Winnan Tirunallur in topic பங்களிப்பு :)
இலங்கைத் தமிழர் ர ற வழக்கம்
தொகுகுறிப்படத்தக்க எண்ணிக்கையுடைய இலங்கைத் தமிழர்கள் பின்வரும் உச்சரிப்பு/எழுத்து வழக்கத்தை உடையவர்கள். அவ்வழக்கம் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- t, ra, raa என்பதை ற், ற, றா எனவும்
- r, ta, taa என்பதை எனவும் ர், ர, ரா கொள்வார்கள்.
பொதுவாக எழுத்து தமிழில் (தமிழ்நாட்டுத் தமிழர்) ta, taa என்பதற்கு ட டா என்பதை பயன்படுத்துவதே வழக்கம்.
- ஜெர்மன் எழுத்துக்கள்
- ஜெர்மன் ஒலியியல் (en:German phonology)
டாயிட்சு
தொகுதமிழில் ய்ச் ஒன்றாக வருமா? டாயிட்சு? டாய்ச்சு? எப்படி எழுதலாம்?--ரவி 02:26, 5 ஜூன் 2009 (UTC)
- டாய்ச்சு சரியாகவுள்ளது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:27, 5 ஜூன் 2009 (UTC)
- இக்கட்டுரையில் சில இடங்களில் இடாய்ச்சு எனவும், யேர்மனிய மொழி எனவும், ஜேர்மன் எனவும், ஜெர்மன் மொழி எனவும் உள்ளது, கட்டுரைத் தலைப்பில் உள்ளது போல அனைத்து இடங்களிலும், இடாய்ச்சு என மாற்றம் செய்யலாமே? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:33, 25 ஏப்ரல் 2012 (UTC)
பங்களிப்பு :)
தொகுIk hou van jou என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம் என கேள்விப்பட்டேன். சரிதானா? சேர்க்கலாமா??--arafat 03:48, 8 ஜூலை 2009 (UTC)
- Lieben என்றால் அன்பு செய்தல். Ich liebe dich என்றால் நான் உன்னைக் காதலிக்கின்றேன் என்று பொருள். (ich = நான்; du = நீ, du->dich = உன்னை; liebe என்பது காதலி என்னும் வினைச்சொல் நான் என்று வரும்பொழுது வரும் வடிவம். -கிறேன் என்பதுபோல)--செல்வா 03:58, 8 ஜூலை 2009 (UTC)
இடாய்ச்சு என்பது அதீத செயற்கைதனமான ஒலிபெயர்ப்பாக உள்ளது. ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் டொய்ச்சு என்றே கூறுகின்றனர். தான் டோன்றித் தனமான ஒலிபெயர்ப்புக்களை ஏற்றுக் கொள்ள இயலாது. கவனிக்கவும். --Iqbalselvan (பேச்சு) 02:13, 6 நவம்பர் 2013 (UTC)
- இடாய்ச்சு (தமிழக வழக்கு), உடொய்ச்சு (ஈழத்தமிழர் வழக்கு).--Kanags \உரையாடுக 08:43, 6 நவம்பர் 2013 (UTC)
- இடாய்ச்சு என்பது சரியாகப் படவில்லை, தமிழகத்தில் ஜெர்மன் மொழி என்று தான் பலரும் அறிகின்றனர். இதை ஏன் நாம் ஜெர்மன் ( செருமன் ) மொழி என்றே பயன்படுத்தக் கூடாது. --Winnan Tirunallur (பேச்சு) 18:41, 16 ஆகத்து 2015 (UTC)