பேச்சு:இந்தியக் காட்டெருது
என்ன நேர்த்தியான உடல்வாகு! கார்த்திக், இந்தக் கட்டுரையைத் தொடங்கியதற்கு மிக்க நன்றி. இம்மாவைப் பற்றி மார்க்கசிடம் உரையாடியபோது ஒருவித குற்ற உணர்வே ஏற்பட்டது, சோழவந்தானில் இருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள உயிரினங்களைப் பற்றி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ளவரிடமிருந்து தெரிந்து கொள்கிறோம் என்று. இக்கட்டுரையை நன்கு வளர்த்தெடுப்போம். -- சுந்தர் \பேச்சு 06:34, 31 ஜூலை 2009 (UTC)
- இவ்விலங்கை நான் முதன்முதலில் 2000ஆம் ஆண்டு இந்திராகாந்தி தேசிய பூங்காவின் டாப்சிலிப்பில் பார்த்தேன். இதன் உடலை கண்டு வியந்திருக்கிறேன். ஒரு சில ஆண் விலங்குகளை காணும் போது ஏதோ பெரிய டிராக்டரை பார்ப்பது போல இருக்கும். உடல் முழுவதும் கட்டு கட்டாக தசைகள்!! மேற்கு தொடர்ச்சி மலையில் களப்பணிகளின் போது பல இடங்களில் கண்டுள்ளேன். கன்றுடன் உள்ள தாய் பெரும்பாலும் விரட்டும். ஒரு முறை துரத்தியதும் உண்டு!! காட்டினுள் உள்ள சாலைகளின் பக்கத்தில் ஆண் தனித்து மேய்துகொண்டிருக்கும், பல நேரங்களில் வாகனத்தை கண்டும் ஒதுங்காது, மிக்க துணிச்சலானது ஆண்கள். ஆனைமலை மஞ்சம்பட்டில் ஒரு தனித்துவம் வாய்ந்த வெள்ளை கடமா en:Manjampatti White Bison இருப்பதை படித்திருக்கிறேன். கீழ்காணும் ஆராய்ச்சி கட்டுரைகள் இதற்கு சான்றுகள்
- Brander, A.A.Dunbar, (1936) White Bison, Journal of Bombay Natural History Society. 38(3): 619-620.
- Davidar, E.R.C. (1970) White bison of Manjampatti, Journal of the Bombay Natural History Society, 67, 565– 569
- Gouldsbury, J.: White Bison of Manjampatti, Journal of the Bombay Natural History Society, 68, 823
- Whitaker, Romulus. White Gaur of Manjampatti, Hornbill, Bombay, April-June 1979, 30.
இக்கட்டுரையை நன்கு வளர்க்கவேண்டும் சுந்தர். பில். எல். சாமியின் சங்க இலக்கியத்தில் விலங்குகள் நூலில் இவ்விலங்கை பற்றி பல குறிப்புகள் இருப்பதாக ஒரு நண்பர் கூறினார். அந்த புத்தகத்தை 2 ஆண்டுகளாக தேடிதேடி களைத்துவிட்டேன் :(:(:(:(. அந்நூலின் யானை பகுதி மட்டும் மதுரையில் ஒரு நூலகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மிகுந்த வேண்டுகோளுக்கு பிறகு நகலெடுத்து கொடுத்தார். பில். எல். சாமியின் நூல்கள் கிடைத்தால் கண்டிப்பாக ஒளிவருடவேண்டும்.--கார்த்திக் 14:52, 31 ஜூலை 2009 (UTC)
பெயர்
தொகுவேறு பேச்சுப்பக்கம் ஒன்றில் செல்வா Yak-ஐக் கடமா என்று குறித்ததாக நினைவு. இச்சொல் இவ்விரண்டு இனங்களுக்கும் பொதுவானதா?
தவிர பின்வரும் தேவாரப் பாடலில் வரும் கடமா எவ்விலங்கு?
கடமா என்றால் மத யானை (தேவாரத்தில்). அதேபொருளில் நாலடியாரில் “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” என்று வரும். ~ நா. கணேசன்
கடமா களியா னையுரித் தவனே கரிகாடிடமா அனல்வீசி நின்று நடமா டவல்லாய் நரையே றுகந்தாய் நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும் விடவார் அரவா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
-- சுந்தர் \பேச்சு 08:47, 2 ஜூன் 2010 (UTC)
- சுந்தர், யாக் (Yak) என்னும் என்னும் விலங்கு கவரிமா என்று நான் எழுதியிருக்கின்றேன். பி.எல். சாமி அவர்கள் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்னும் நூலிலும் செந்தமிழ்ச்செல்வி என்னும் மாதிகையிலும் இது பற்றிக்குறித்துள்ளார். மயிர்நீப்புன் உயிர்வாழா என்னும் குறளில் வரும் கவரிமா என்பது இமயமலைப் பகுதிகளில் நரந்தம் புல்லை உண்டு வாழும், உடல்முடி நிறைந்த Yak என்னும் விலங்கு என்றும், எப்படி அவற்றின் முடியை நீக்கினால் குளிர்தாங்காது இறந்துவிடுமோ, அப்படி மான இழந்தால் உயிர்ழப்பர் என்று விளக்கம் தருகின்றார். எஅன்வே அது கவரிமா கடமா அல்ல. தேவாரப் பாடலில் வரும் கடமாகளியானை என்பது யானை கடமா அல்ல. சிவபெருமான் யானையின் தோலுரித்த வரலாறு. வலுவான யானையின் தோலை (உகிரால்) உரித்ததாகக் கதை. உட்பொருள் உண்டு. --செல்வா 23:19, 25 ஜூலை 2010 (UTC)
கடமா படங்கள்
தொகுஅண்மையில் இந்திராகாந்தி தேசிய காட்டுயிர் காப்பகத்துக்கும் (டாப்சிலிப்) அதன் அருகேயுள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்கும் சென்று வந்தோம். அப்போது பல கடமாக் கூட்டங்களை வெகு அருகில் கண்டு களித்தோம். என் தம்பி எடுத்த படங்களுள் சிலவற்றை இங்கே இட்டுள்ளேன். தேவைப்பட்டால் கட்டுரையில் சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:48, 20 நவம்பர் 2010 (UTC)
ஆமா
தொகுஆமா என்ற பெயர் இந்த விலங்குக்கு அறிவியல் களஞ்சியத்தில் தரப்பட்டுள்ளது. --Natkeeran 17:55, 19 திசம்பர் 2010 (UTC)
ஆமாம், நக்கீரன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
தமிழ் விக்கிப்பீடியா கடமான் என்ற தலைப்புடன் பக்கம் உருவாகியுள்ளது.
இலக்கியங்களில் கடமா/கடமான் சொல்லாட்சி உள்ள இடங்கள் அறிந்துகொள்ளப் பார்க்கவும்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Indian bison = bos guarus. அதற்கு இலக்கியங்களில் ஆமா, ஆமான் “cow-like wild animal" எனப் பெயர். காட்டுமாடு, காட்டெருமை என்பதும் உண்டு.
ஆமா/ஆமான்(Indian bison, i.e, bos guarus), மரையா/மரையான் (Nilgai), கவரிமா/கவரிமான் (Yak), கலைமா/கலைமான் (black buck), வெளிமா/வெளிமான் (Indian gazelle), ... என்பது போல கடமா என்றாலும், கடமான் என்றாலும் ஒன்றுதான் - Sambur deer என்பது புறநானூற்றுப் பாடல்களும், உரைகளும் காட்டுகின்றன. மேலும் கடமா என்பதற்கு மதயானை என்று தேவாரத்திலும், “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” என்று நாலடியாரிலும் வருகிறது.
எனவே, ஆமா(ன்) அல்லது காட்டுமாடு, காட்டா என்று bos guarus பக்கத்தை திருத்திவிட வேண்டுகிறேன்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE இப்பெயர்களே இலக்கியங்களிலும் மக்களாலும் ஆளப்பெறும் bos guarus ஆமாவிற்கு வழங்கி வரும் பெயர்கள்:
நன்றி, நா. கணேசன்
காட்டெருமை
தொகுநற்கீரன், நீங்கள் இவ்விலங்குக்கான மாற்றுப்பெயராக காட்டெருமை எனச் சேர்த்துள்ளீர்கள். இம்மாவுக்கு காட்டெருமை என்ற பெயர் தவறானது என கார்த்திக்பாலா கூறியதாக நினைவு. ஒரு பாலை மட்டும் குறிப்பதாலா அல்லது அது வேறு விலங்கா என நினைவில்லை. உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:20, 30 மே 2012 (UTC)
- மலையாள விக்கிப்பீடியாவில் இவ்விலங்கைக் காட்டுப்போத்து எனக் குறித்துள்ளனர். அப்பெயர் தமிழிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு. -- சுந்தர் \பேச்சு 11:48, 10 செப்டெம்பர் 2012 (UTC)