பேச்சு:இந்தியச் சிறுமான்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic குள்ளமான்
pink, ink என்பவற்றை பிங்க், இங்க் என்று எழுதும் வழக்கம் உள்ளது. ஆனால், இது சரியான முறையாக தெரியவில்லை. சின்க்காரா என்று எழுதினால் கூடுதல் ஒலிப்பு நெருக்கம் வரலாம். --இரவி (பேச்சு) 06:42, 11 மே 2012 (UTC)
- சரி தான், ரவி. சின்க்காரா என்ற தலைப்பிற்கு நகர்த்தி விடுகிறேன். --சிவக்குமார் \பேச்சு 07:28, 11 மே 2012 (UTC)
- இதன் பெயர் சிங்காரா என்றுதான் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பெயர் தமிழ் மரபுப்படி பிழை.--பாஹிம் (பேச்சு) 08:55, 11 மே 2012 (UTC)
- தமிழ் மரபுப்படி ன்க் என்று வராது தான். ஒலிப்பு நெருக்கம் தேவையில்லை என்றால் சிங்காரா என்றே பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 09:13, 11 மே 2012 (UTC)
இந்தியச் சிறுமான் எனும் தமிழ்த் தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:20, 11 மே 2012 (UTC)
- சிங்காரமான் என்றும் விக்சனரியில் தரப்பட்டிருக்கிறது. மூலச் சொல்லுக்கு ஒப்ப உள்ளது.--Kanags \உரையாடுக 14:27, 11 மே 2012 (UTC)
சிங்காரம் வட சொல் என்பதனாலேயே தவிர்த்தேன். Indian Gazelle என்பதற்கேற்ப இந்தியச் சிறுமான் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 14:45, 11 மே 2012 (UTC)
குள்ளமான்
தொகுபதிவுக்காக: சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் தனது வானில் பறக்கும் புள்ளெலாம் என்ற கட்டுரை நூலி்ல் இதற்கு குள்ளமான் என்னும் சொல்லை ஆண்டுள்ளார். --சிவக்குமார் \பேச்சு 13:58, 24 மே 2012 (UTC)