பேச்சு:இந்திய மாநிலங்களின் சின்னங்கள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Jayarathina in topic புதுச்சேரி அரசின் சின்னம்
புதுச்சேரி அரசின் சின்னம்
தொகுஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் சின்னம், புதுவை பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபமாகும். அனால் இங்கே இந்திய அரசின் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. திசையன் வரைகலையில் அச்சின்னம் உருவாக்கப்படும் வரை படிமம்:Puducherry_Park_Monument_retouched.jpg வைக்கப்படுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:54, 18 மே 2011 (UTC)
- மன்னிக்கவும். ஆயி மண்டபம், சின்னமாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பழைய படிமமே வைக்கப்படுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:05, 18 மே 2011 (UTC)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)