பேச்சு:இயற்கைவழி வேளாண்மை

இக்கட்டுரையில் உசாத்துணையாகத் தரப்பட்டுள்ள இணையப்பக்கங்களில் உள்ள தகவல்கள் கட்டுரையில் அப்படியே தரப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறல் என்பதால் நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:54, 27 சனவரி 2015 (UTC) அவசரப்படாதீர்கள் நான் மாற்றம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.--−முன்நிற்கும் கருத்து Prabaka 123 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. Reply

தலைப்பில் மட்டுமன்றி கட்டுரையிலும் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. மேலும், இயற்கை வேளாண்மை கட்டுரைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?--Kanags \உரையாடுக 20:16, 27 சனவரி 2015 (UTC)Reply

இதற்கு முன் உளள ”இயற்கை வேளாண்மை” கட்டுரை முற்றிலும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எழுத்துப் பிழை இல்லை. ஆனால், பல சொற்கள் சொற்றொடர்கள் அர்தம் புரியாமல் உள்ளன. மேலும் தொடர்ந்த் கட்டுரையின் தரததை உயர்த தொகுக்கும் போது பல தொழில் நுட்ப சொற்கள் மறந்துவிடும் போல் இருக்கிறது. உதரணமாக organic product என்பதை ”கரிம பொருள்” என்று மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது எந்த பொருளிலும் கார்பன் இருந்தால் அது கரிமப்பொருள் என்று பொருள்படும். "compost tea" என்பதை கலப்புத தேனீர் என்று கூறப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். இன்னும் பல.--−முன்நிற்கும் கருத்து Prabaka 123 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இயற்கை வேளாண்மை கட்டுரையில் வேண்டிய தகவல்களை மாற்றிவிட்டு இதை நீக்கிவிடவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:40, 28 சனவரி 2015 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பெரிய கட்டுரையாக இருக்கிறதே.--−முன்நிற்கும் கருத்து Prabaka 123 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பிரபாகரன், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரை தரமற்றது என்பது உண்மையே. ஆனாலும், ஒரே பொருளில் இரண்டு கட்டுரைகள் இருக்க முடியாது. ஆனாலும், உங்களால் அக்கட்டுரையை en:Organic farming என்ற ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாக வைத்துத் திருத்த முடியுமா? அல்லது, இப்போது நீங்கள் எழுதிய கட்டுரையை அந்த ஆங்கிலக் கட்டுரைக்கேற்பத் திருத்தி எழுத முடியுமா? உரையாடல் பக்கங்களில் உங்கள் ஒப்பத்தை இடுவதற்கு ~~~~ எனத் தட்டச்சிடுங்கள்.--Kanags \உரையாடுக 09:35, 28 சனவரி 2015 (UTC)Reply

என்னால் முடியும். ஆனால் organic farming என்றால் இது அமெரிக்காவை அடிப்படையாக கொண்டது natural farming ஜப்பானை அடிப்படையாக கொண்டது. இரண்டிற்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் மாறாமல் மொழி பெயர்ப்பதில் தவறு ஒன்றுமில்லை. முதலில் கூறப்பட்டது பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. பின் சொல்லப்பட்டது சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது--prabakaran 10:10, 28 சனவரி 2015 (UTC)

இப்போது விளங்குகிறது. இயற்கைவழி வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்ற இரண்டு கருத்துருக்கள் இருப்பது இப்போது தான் எனக்குத் தெரிந்தது. அப்படியானால், இக்கட்டுரையைத் தனியாகவே வைத்திருக்கலாம். கட்டுரையில் நவீன என்ற அடைமொழி தேவையா?.--Kanags \உரையாடுக 10:43, 28 சனவரி 2015 (UTC)Reply

இயற்கை வேளாண்மை என்பதே சரி. இயற்கைவழி என்பது எதற்கு? Natural farming என்பதை இயற்கை வேளாண்மை என்றும் Organic farming என்பதை இயல் வேளாண்மை என்றும் கூறலாமே.--பாஹிம் (பேச்சு) 03:49, 16 சூன் 2019 (UTC)Reply

Return to "இயற்கைவழி வேளாண்மை" page.