பேச்சு:இராமானுசரின் மூன்று திருமேனிகள்

இராமானுசரின் மூன்று திருமேனிகள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமானுசரின் மூன்று திருமேனிகள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமானுசரின் மூன்று திருமேனிகள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மற்றுமொரு கட்டுரை தொகு

இராமானுசர் எனும் பெயரில் ஏற்கனவே ஒரு கட்டுரை இருக்கிறது. இங்கு எழுதப்பட்டுள்ள தகவல்களை அங்கே எழுதினால்... கட்டுரை விரிவாக்கம் பெற்று, அவர் குறித்த தகவல் கட்டுரை நன்கு முழுமைபெறும் என நினைக்கிறேன். ஒருவரைப்பற்றி இருவேறு முதன்மைக் கட்டுரைகளில் தகவல்கள் இருப்பது 'ஒரே மாதிரியான கட்டுரைகள் (duplicate)' எனும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் 18:40, 17 பெப்ரவரி 2012 (UTC)

இக்கட்டுரை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் மூன்று திருமேனியினை மட்டும் குறித்து எழுதப்பட்டுள்ளது. இவை இராமானுசரின் மூன்று சன்னதிகள். நீங்கள் குறிப்பிடுவது வாழ்க்கை வரலாறு. இது duplicate அல்ல என்பது என் கருத்து. இது போல ஒருவரைப்பற்றி முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகள் உள்ளன. எனவே தயை கூர்ந்து அனுமதிக்கக் கோருகிறேன்.--Iramuthusamy 19:18, 17 பெப்ரவரி 2012 (UTC)
ஐயா,
ஒரு கட்டுரையை அனுமதிப்பதும் / அனுமதிக்க மறுப்பதும் இங்கு எவரின் கைகளிலும் இல்லை. எவருக்கும் உரிமையும் இல்லை. நீங்கள் யாரிடமும் அனுமதிகோர வேண்டிய அவசியமும் இல்லை. (தேவையற்ற தகவல்களை சிலர் அறியாமல் கட்டுரையாக எழுதும்போதோ அல்லது சில விஷமிகள் தவறாக கட்டுரை எழுதும்போது மட்டுமே... விக்கிப்பீடியா நிருவாகிகள் அக்கட்டுரைகளை அனுமதிப்பதில்லை). மேலும் விக்கியில் நானும் தெரிந்து கொள்ளவேண்டியன நிறைய உள்ளன. எனது கருத்தை மட்டுமே நான் முன்வைத்தேன். விக்கிப்பீடியாவில் செம்மையான கட்டுரைகள் இருக்கவேண்டும் எனக்கருதிதான் 'பேச்சு' பக்கம் உருவாக்கினார்கள்! எனது நோக்கமும் அதுதான்.உங்களின் புதிய கட்டுரை தனித்துவமானது என நீங்கள் கருதினால் அப்படியே இருக்கட்டும். வேறு எவரேனும் அவர்களின் கருத்தை தெரிவிக்கிறார்களா எனப் பார்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் 19:39, 17 பெப்ரவரி 2012 (UTC)
இராமானுசர் பற்றிய வாழ்க்கை வரலாறு, அவர் ஆற்றிய செயல்கள் என்பன வேறு, அவருடைய முத்திருமேனி என்னும் இக்கட்டுரையின் கருப்பொருள் வேறு என்றே நான் உணர்கின்றேன். மேலே செல்வசிவகுருநாதன் சொல்லியது முற்றிலும் உண்மை. யாரிடமும் அனுமதி ஏதும் பெறவும் வேண்டியதில்லை. கட்டுரைகள் ஒரே கருத்துடையதாக இருப்பதாக நினைத்தால் ஒன்றோடு ஒன்றை இணைக்க வேண்டுகோள் விடுக்கலாம். இங்கு அப்படியான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு கட்டுரைக்குள்ளேயே கூட அதன் உட்பகுதிகள் பற்றிய முதன்மைக்கட்டுரைகள் இருக்கலாம், இருப்பது பற்றிய சுட்டியும் அக் கட்டுரைக்குள் இருக்கும். இந்த முத்திருமேனி கட்டுரையைப் பற்றி இராமானுசரின் கட்டுரையிலும் தொடுப்புத் தரலாம். --செல்வா 20:20, 17 பெப்ரவரி 2012 (UTC)
கட்டுரைகள் இரண்டும் தனித்தனியே இருக்கலாம். திருமேனிகள் கட்டுரையில் இராமனுசரின் பிறப்பு பற்றிய விபரங்களை இராமானுசர் கட்டுரையில் சேர்க்கலாம். இங்கு சுருக்கமாகக் கூறினால் போதும். அத்துடன் இராமானுசர் கட்டுரையிலும் மூன்று திருமேனிகள் பற்றிச் சுருக்கமாகக் கூறி இந்தக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:45, 17 பெப்ரவரி 2012 (UTC)
Return to "இராமானுசரின் மூன்று திருமேனிகள்" page.