தலைப்பை மாற்ற வேண்டும் தொகு

தமிழில் -க் என்று முடியலாகாது. சுனக்கு என்றெழுதுதல் வேண்டும். மேலும் இரிசி என்று முதற்பெயரை எழுதுதல் நல்லது. தலைப்பை இரிசி சுனக்கு என்று மாற்ற வேண்டுகின்றேன். செல்வா (பேச்சு) 14:29, 16 சூலை 2022 (UTC)Reply

@செல்வா: தமிழ் இலக்கணப்படி சொற்கள் சில எழுத்துக்களில் தொடங்கலாகாது (ட, ர, ல வரிசை...), சில எழுத்துக்களில் முடியலாகாது (க், ச்...) என்ற வரையறை/விதிமுறைகளின் அறிவியல்/மொழியியல் அடிப்படையைப் பற்றி விளக்க முடியுமா. நன்றி --Stymyrat (பேச்சு) 17:50, 16 சூலை 2022 (UTC)Reply
தமிழில் வல்லின ஒற்றில் (க்.ச்.ட்.த்.ப்.ற்) ஆகியவற்றில் ஒரு சொல் முடியலாலாது. இது வெறும் வறட்டு விதியன்று. சொல்லிப்பாருங்கள். "கேக்" என்றால் கடைசி "க்" ஒலிக்கவே முடியாது. கேக்கு (இந்தக் கடைசி கு முழு உகரம் அன்று. "க்" என்னும் ஒலியை வெளிக்கொணரும் அளவே ஒலிக்க உதவும் ஓர் உயிரொலி. தற்கால ஆங்கில வழி மொழியியலிலும் இவற்றை 'stop" என்று சொலின்றார்கள். அவ்வொலிகள் வெளிவரா. காற்று அடைபட்டு நிற்கும். "கப்" என்று சொல்லும்பொழுது "ப்" என்பதற்கு இதழ்கள் சேர்ந்தபின்னர், அதனை விட்டால்தான், அதன்வழி சிறிது உயிரொலி வந்தால்தான் "ப்"பின் ஒலி வெளிவரும். மொழியிறுதி எழுத்துக்கள் என்னும் பக்கத்தைப் பாருங்கள். இதேபோல மொழி முதல் எழுத்துகளில் ட, ல, ற, ர முதலான பல எழுத்துகள் தமிழில் வரலாகாது. இதற்கான காரனம் அப்படிச் சொல்ல முற்படும்பொழுது நமது நாக்கு வளைந்து மேலண்ணத்தைத் தொட்டு ஒலி எழுப்பவேண்டும். அதற்காக வாயைத் திறக்கவேண்டும். அப்படித் திறக்கும்பொழுது உயிரொலி சிறிதாக எழும். இதனை எளிமைப்படுத்தவே ஓர் உயிரொலியை முன்னே சேர்க்கின்றோம். இது தமிழில் மட்டுமன்று, பல மொழிகளில் உண்டு. ஆனால் தமிழைப்போல முறையாக விதியாக வைக்கப்படவில்லை. ஆங்கிலத்திலே talk, debt என்றுதான் எழுதவேண்டும் tak, tawk, det என்றெல்லாம் எழுதக்கூடாது என்பதை விதியாகப் பயன்படுத்துகின்றோம். அதுபோலவே தமிழிலும் இவை கடைப்பிடிக்கவேண்டியவை. வகுத்த இலக்கணம். அறிவின் அடிப்படையில் அமைந்தவை,வறட்டு வெட்டி விதிகள் அல்ல. செல்வா (பேச்சு) 13:05, 19 சூலை 2022 (UTC)Reply
தங்களின் பொறுமையான எளிமையான விளக்கத்துக்கு மிக்க நன்றி. --Stymyrat (பேச்சு) 17:48, 19 சூலை 2022 (UTC)Reply

தலைப்பில் தவறான எழுத்துப்பிழை தொகு

சரியான எழுத்துப்பிழை ருஷி ஸுநக் Ooarii (பேச்சு) 07:39, 1 நவம்பர் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரிசி_சுனக்கு&oldid=3596295" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரிசி சுனக்கு" page.