பேச்சு:இரு சகோதரிகள்
Additional citations given - --Uksharma3 03:29, 9 அக்டோபர் 2016 (UTC)
The song book is a printed book. The book is the citation. Scanned pages are only for easy reference. அச்சிடப்பட்ட, printed books ஆக மட்டுமே உள்ள நூல்களை விக்கியில் மேற்கோள் காட்ட முடியாதா? Googledrive நம்பமுடியாததென்றால் அச்சிடப்பட்ட நூல்களில் சான்றாகக் காட்டும்போது அந்த பக்கத்தை ஸ்கேன் செய்து கோப்பு ஆக்கி கட்டுரையுடன் இணைக்க முடியுமா? - Uksharma3 05:11, 9 அக்டோபர் 2016 (UTC)
- பாடல் புத்தகம் சான்றாகாது. காண்க: en:Wikipedia:Identifying reliable sources. வேண்டுமானால், நம்பகமான மூலம் இருந்து, மேலதிக மேற்கோளுக்காக விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் - இந்த முறையில் மேற்கோள் சுட்டலாம். பக்கத்தை வருடி கொண்டு இணைக்கத்தேவையில்லை. --AntanO 06:32, 9 அக்டோபர் 2016 (UTC)
- @AntanO: பாடல் புத்தகம் சான்றாகாதெனில் பல பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிக் கட்டுரைகளே எழுத முடியாது. தமிழ் விக்கியில் பல தமிழ் திரைப்படங்கள் பற்றி எவ்வித சான்றுமில்லாமல் பக்கங்கள் உருவாக்கப் பட்டிருப்பதைப் பார்த்தேன். உருவாக்கியவர்கள் மைல் கற்களைத் தாண்டியிருப்பார்கள். அவ்வளவு தான்.
- 1950களில் வந்த பாடல் புத்தகங்களை சிலர் பொன் போலப் பாதுகாத்து வருகிறார்கள். எனது நண்பர் ஒருவர் 1949-ஆம் ஆண்டு பாடல்புத்தகம் வைத்திருக்கிறார். அந்தப் பாடல் புத்தகங்கள் மெலிந்த குறைந்த தரத்திலான தாளில் அச்சிடப்பட்டவை. அந்தக் காலத்தில் 10, 15 காசுக்கு விற்கப்பட்டவை. அவற்றை செல்லரிபடாமல், கிழிந்து நைந்து போகாமல் பாதுகாப்பதென்பது எவ்வளவு சிரமமானது என்பது அதை வைத்திருப்பவர்களுக்குத் தான் தெரியும்.
- படத்தின் சுருள்கள் எங்குமே கிடைக்காத படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்கள் வெளிவந்தன என்பதற்கு இப்போது பாடல் புத்தகங்களே சான்று. ஒரு சில படங்களைப் பற்றி பத்திரிகைகள், இதழ்களில் விமரிசனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் பாடல் புத்தகங்கள் முழுத் தகவலையும் தருகின்றன.
- உதாரணத்திற்கு, சில பாடல்களை அவற்றை எழுதிய கவிஞர்கள் யார் என்பதை அறிய பாடல் புத்தகங்களே உதவுகின்றன. திரைப்படத்தில் கூட பாடலாசிரியரிகளின் பெயர்களைக் காட்டுவார்களே தவிர எந்தப் பாடலை யார் எழுதினார் எனக் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் பாடல் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
- மேலும் ஒரு விடயத்தை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். 1940, 50, 60 களில் வெளியான படங்கள் பற்றி அதிக ஆவணங்கள் கிடையாது. எதையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு சில காலத்துக்கு முன்னரே ஏற்பட்டது. அந்தக் காலத்தில் பிறந்த பலருக்கு பிறப்புச் சான்றிதழே கிடையாது. படங்களைப் பார்த்தும், இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் சொன்ன தகவல்களை நினைவுக்குக் கொண்டு வந்தும், பத்திரிகைகளில் வந்த சில விமர்சனங்களை வைத்தும் இன்றைக்கு நாங்கள் அந்தத் திரைப்படங்கள், கலைஞர்கள் பற்றி ஆவணப் படுத்த முயற்சி செய்கிறோம். அந்தக் காலத்தில் வாழ்ந்த, இன்றைக்கு 70 வயதுக்கு மேற்பட்ட என்போன்ற ஒரு சிலர் தான் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறோம். கட்டற்ற கலைக் களஞ்சியத்தை மேம்படுத்த பாடுபடுகிறோம். நாங்கள் எழுதுபவற்றுக்குப் போதிய சான்று இல்லையென்றால் கணினியிலும் இணையத்திலும் தேர்ச்சியுள்ள இள வயதினர் சான்றுகளைத் தேடிச் சேர்க்க வேண்டும். அப்படியில்லாமல் சான்று இல்லையென்று தள்ளி வைத்தால் இப்படி எழுதுவதற்குக் கூட ஆள் இல்லாமல் போகும். அதனால் நஷ்டப்படப் போவதென்னவோ வருங்கால சந்ததி தான். - --Uksharma3 02:57, 10 அக்டோபர் 2016 (UTC)
- @AntanO: பாடல் புத்தகம் சான்றாகாதெனில் பல பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிக் கட்டுரைகளே எழுத முடியாது. தமிழ் விக்கியில் பல தமிழ் திரைப்படங்கள் பற்றி எவ்வித சான்றுமில்லாமல் பக்கங்கள் உருவாக்கப் பட்டிருப்பதைப் பார்த்தேன். உருவாக்கியவர்கள் மைல் கற்களைத் தாண்டியிருப்பார்கள். அவ்வளவு தான்.
- உங்களுக்கு சுருக்கமாக விக்கி வழிகாட்டலைக் கொடுத்துள்ளேன். அதன்படிதான் நானும் நீங்களும் செயற்ட வேண்டும். இதற்குமேல் உரையாடி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நன்றி. --AntanO 03:21, 10 அக்டோபர் 2016 (UTC)
- நீங்கள் காட்டிய வழிகாட்டல் ஆங்கில விக்கிக்கானது. ஆங்கில விக்கியில் நான் எழுதும் தமிழ் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளில் பாடல் புத்தகம் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழில் ஏற்கப்பட முடியாது என்றால் தமிழ் விக்கிக்கான வழிகாட்டல் பக்கத்தின் சுட்டியைத் தரவும். நன்றி. - Uksharma3 04:48, 10 அக்டோபர் 2016 (UTC)
- புத்தகம் வெளிவந்த ஆண்டு, வெளியீட்டாளர் விபரங்கள் இருந்தால் திரைப்படப் பாட்டுப் புத்தகத்தை சான்றாகக் காட்ட தமிழ் விக்கியில் அனுமதிக்க வேண்டும். பாட்டுப் புத்தகங்கள் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. இவற்றை வருடி இணைக்க வேண்டிய அவசியமில்லை. காப்புரிமை காலாவதியானவற்றை விக்கிமூலத்தில் தரவேற்ற வேண்டும்.--Kanags \உரையாடுக 07:06, 10 அக்டோபர் 2016 (UTC)
- மேலே என் கருத்திடலிலும், பாடல் புத்தகம் சான்றாகாவிட்டாலும் இணைக்கலாம் என்ற கருத்தையே பதிவு செய்துள்ளேன். ஆனால் சிக்கலான பகுதிகளுக்கு இதனைச் சான்றாகக் கொள்ளக்கூடாது. மேலும் தனிநபர் சேமிப்பு பகுதிகளுக்கும், வருடி இணைப்பதும் சரியாகப்படவில்லை. ஆனால், தமிழ் விக்கிக்கான வழிகாட்டல் பக்கத்தின் சுட்டியைத் தரவும் என்ற தர்க்கம் செய்வது ஆக்க பூர்வமற்றது. இப்படியான கேள்விகளுக்கு தமிழ் விக்கிக்கான பாடல் புத்தகம் இணைக்கும் வழிகாட்டல் பக்கத்தின் சுட்டியைத் தரவும் என்ற ஏரணத்தைத்தான் பயன்படுத்த முடியும். --AntanO 07:28, 10 அக்டோபர் 2016 (UTC)
- @Uksharma3: பாட்டு நூல்களை உங்கள் கூகுள் Driveல் சேர்த்து வைக்காமல், https://archive.org/ தளத்தில் ஒரு தொகுதியாக வெளியிட்டால் இன்னும் பலரைச் சென்றடையும். தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொருத்தவரை பாட்டு நூல்கள் முக்கிய ஆவணங்களே. அதே வேளை, இவற்றில் உள்ள தகவலை ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டு நூல்கள், ஆய்வு நூல்களைக் கொண்டு சரி பார்ப்பதற்கான தேவையும் இருக்கிறது. எனவே தான், இவற்றைக் கூடுதல் இணைப்புகளாக மட்டும் தரக் கோருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:31, 17 அக்டோபர் 2016 (UTC)
- மேலே என் கருத்திடலிலும், பாடல் புத்தகம் சான்றாகாவிட்டாலும் இணைக்கலாம் என்ற கருத்தையே பதிவு செய்துள்ளேன். ஆனால் சிக்கலான பகுதிகளுக்கு இதனைச் சான்றாகக் கொள்ளக்கூடாது. மேலும் தனிநபர் சேமிப்பு பகுதிகளுக்கும், வருடி இணைப்பதும் சரியாகப்படவில்லை. ஆனால், தமிழ் விக்கிக்கான வழிகாட்டல் பக்கத்தின் சுட்டியைத் தரவும் என்ற தர்க்கம் செய்வது ஆக்க பூர்வமற்றது. இப்படியான கேள்விகளுக்கு தமிழ் விக்கிக்கான பாடல் புத்தகம் இணைக்கும் வழிகாட்டல் பக்கத்தின் சுட்டியைத் தரவும் என்ற ஏரணத்தைத்தான் பயன்படுத்த முடியும். --AntanO 07:28, 10 அக்டோபர் 2016 (UTC)
யூடியூப் இணைப்பு
தொகுகட்டுரையின் பின்பகுதியில் பாடல்கள் என்றப் பகுதியில் யூடியூப் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிற தளங்களின் இணைப்புகளை கட்டுரைப் பகுதியிலேயே இணைக்கலாமா? என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன். நிறைய சைவக் கட்டுரைகளுக்கு சைவம்.ஆர்க் மற்றும் வேறு சில இணையதள இணைப்புகள் கட்டுரையின் பகுதியிலேயே கொடுக்கப்பட்டன. அவற்றை முன்பு நீக்கம் செய்துள்ளேன். அதனால் இம்முறை குறித்து தெளிவுப் படுத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 10 அக்டோபர் 2016 (UTC)
- யூடியூப் இணைப்பு கொடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. குறிப்பிட்ட கட்டுரையில் உரையாடலாமா? --AntanO 07:30, 10 அக்டோபர் 2016 (UTC)
- சர்மா அவர்கள் இப்போது பாடல்களுக்கு யூடியூப் இணைப்பு மூலம் கட்டுரைக்குள்ளேயே தருவது எனக்கு சரியானதாகத் தெரியவில்லை. வெளியிணைப்பாகத் தருவதே சிறந்த முறை.--Kanags \உரையாடுக 07:41, 10 அக்டோபர் 2016 (UTC)
- ஆம் உசாத்துணை முறையற்ற இணைப்புகள் யாவும் பிழையானவே. அல்லது வெளியிணைப்பில் இருப்பதே ஏற்றது. --AntanO 07:54, 10 அக்டோபர் 2016 (UTC)
- யூ ட்யூப் இணைப்பு தருவது உண்மையில் எனக்கு கால, பண விரயத்தையே ஏற்படுத்துகிறது. ஆனாலும், தகவல் தேடுபவர்களுக்கு உதவும் என்ற வகையிலேயே இந்த இணைப்பைக் கொடுக்கிறேன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் பாடல்கள் பற்றி விபரம் தேடும்போது இவ்வாறான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. Tab உருவாக்கப்பட்டிருப்பதால் யூ ட்யூப் இணைப்பு கொடுப்பது தவறில்லை என நினைத்தே கொடுத்தேன். I write the articles from the point of view of a person who is looking for more information. As Wiki boasts itself as a கலைக் களஞ்சியம் I thought the more information given is better. But if these additional information cannot be given, there will be not much value to the article from the layman's point of view. The section "External Links" is also a part of the article. It makes no difference whether to give the You Tube link in the Song list or External links. Anyway, hereafter I will not link the songs to You Tube. When time permits, I will remove the links in the articles already written. - Uksharma3 08:14, 10 அக்டோபர் 2016 (UTC)
- இந்தக் கட்டுரையில் நான் செய்திருக்கும் வடிவமைப்பு மாற்றம் அனைவருக்கும் ஏற்புடையது என நம்புகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:27, 10 அக்டோபர் 2016 (UTC)
- நான் சிறிது மாற்றம் செய்திருக்கிறேன். (வேறு வடிவமும் வரவேற்கப்படுகின்றன) யூடியூபில் இல்லாத பாடல்களையும் கட்டுரையில் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படத்தில் கட்டாயம் நான்கிற்கும் மேல் பாடல்கள் இருக்கும் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 08:36, 10 அக்டோபர் 2016 (UTC)
- பாடல் புத்தகத்தின் இணைப்பை மேற்கோளில் கொடுத்திருந்தேன். அதை நீக்கிவிட்டார். நீக்காமல் இணைப்பை வெளி இணைப்பு என மாற்றியிருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும். இப்போது வெளி இணைப்பில் பாடல் புத்தகத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். மேலும் பாடல்கள் உள்ளன. தேவையானவர்கள் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் செய்த மாற்றங்களுக்கு நன்றி - --Uksharma3 10:36, 10 அக்டோபர் 2016 (UTC)
- கவனிக்கவில்லை. இணைப்பிற்கு நன்றி. ஏனைய பாடல்களை நானே எழுதி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 10:44, 10 அக்டோபர் 2016 (UTC)
- பாடல் புத்தகத்தின் இணைப்பை மேற்கோளில் கொடுத்திருந்தேன். அதை நீக்கிவிட்டார். நீக்காமல் இணைப்பை வெளி இணைப்பு என மாற்றியிருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும். இப்போது வெளி இணைப்பில் பாடல் புத்தகத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். மேலும் பாடல்கள் உள்ளன. தேவையானவர்கள் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் செய்த மாற்றங்களுக்கு நன்றி - --Uksharma3 10:36, 10 அக்டோபர் 2016 (UTC)
- விளக்கத்தோடு, செயல்பாடும் தந்தமைக்கு மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:26, 12 அக்டோபர் 2016 (UTC)
பாடல்களுக்கான யூடியூபு இணைப்புகள் தேவையில்லை. வெளியிணைப்புகளின் நோக்கம் குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி கலைக்களஞ்சிய நோக்கில் மேலதிகமாக அறிந்து கொள்ளவே தவிர, தலைப்பைக் குறித்த அனைத்து இணைப்புகளையும் ஒரே இடத்தில் தொகுத்து தருவது அல்ல. --இரவி (பேச்சு) 08:06, 17 அக்டோபர் 2016 (UTC)