பேச்சு:இஸ்ரேல்
தலைப்பு
தொகுஇந்நாட்டின் பெயர் இதன் அலுவல் மொழிகளில் அஃதாவது, எபிரேய மொழியில் மதீனாத் இசுராஈல் என்றும், அரபு மொழியில் தௌலத் இசுராஈல் என்றும் இருக்கும் நிலையில் இசுரேல் என்ற சொல் எப்படிச் சரியாகும்? இதன் தலைப்பு இசுராஈல் என்று இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:56, 16 திசம்பர் 2013 (UTC)
- எப்படியிருப்பினும் தமிழில் எழுதும் மரபு ஒன்று இருக்கிறதல்லவா? தமிழ் மரபைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா? இஸ்ரேல் அல்லது இஸ்ரவேல் என்றே தமிழில் பொதுவழக்காக எழுதப்படுகிறது. இங்கு இசுரேல் அல்லது இசுரவேல் என இருப்பதே பொருத்தம்.--Kanags \உரையாடுக 09:17, 16 திசம்பர் 2013 (UTC)
- தமிழில் எழுதும் மரபா? ஆங்கிலேயர்கள் தமிழ்ப் பகுதிகளைக் கைப்பற்றிய பின் தொடங்கிய வழக்கத்தை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்களால் எழுதப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்புக்களும் ஒலிபெயர்ப்புக்களும் காணப்படுகின்றனவே. அவற்றில் எழுதப்படும் முறையை விடுத்து, ஆங்கிலேயருக்குப் பிந்திய வழக்கத்தைப் பின்பற்றுவதையா தமிழ் மரபு என்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 09:22, 16 திசம்பர் 2013 (UTC)
இன்னுமொரு விடயம். வெகுசனத் தமிழ் ஊடகங்கள் பலவும், பாட நூல்களும் கியூபா என்று குறிப்பிடுவதை கூபா என்று மாற்றவில்லையா? அதன் போது நீங்கள் கூறும் தமிழ் மரபு எங்கே போய் விட்டது?--பாஹிம் (பேச்சு) 09:30, 16 திசம்பர் 2013 (UTC)
- முசுமலிம்கள் அரபுத் தமிழில் எழுதுகிறார்கள். இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.--Kanags \உரையாடுக 09:37, 16 திசம்பர் 2013 (UTC)
நான் என்ன அரபுத் தமிழிலா எழுதுகிறேன்? உமறுப் புலவர் போன்றோர் அரபுத் தமிழிலா எழுதினார்கள்? முஸ்லிம்கள் அரபுத் தமிழிலும் எழுதினார்கள்.... எழுதுகிறார்கள் என்பது தவறு.--பாஹிம் (பேச்சு) 09:56, 16 திசம்பர் 2013 (UTC)
- அப்படியானால் எபிரேய ஒலிப்புக்கு ஏற்ற யிஸ்ராஎல் என்று இருக்க வேண்டும். தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு இஸ்ரேல், இஸ்ரவேல் ஆகிய பதங்களையே பயன்படுத்துகின்றது. கியூபா - கூபா அடிப்படையில் செயற்படுத்துவதாயின் யிஸ்ராஎல் என்ற வழிமாற்றை ஏற்படுத்தலாம். மேலும், தமிழ் இலக்கண விதிப்படி உயிர் எழுத்துக்கள் சொல்லின் இடையில் வரா என நினைக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:39, 16 திசம்பர் 2013 (UTC)
எபிரேயம், அரபு ஆகிய இரண்டுமே அந்நாட்டின் அலுவல் மொழிகள் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். எபிரேயம் மட்டுமல்ல.--பாஹிம் (பேச்சு) 09:56, 16 திசம்பர் 2013 (UTC)
- இசுராஈல் என்ற வழிமாற்றும் தேவையாகிறதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 10:58, 16 திசம்பர் 2013 (UTC)
- கட்டுரையில் சரியான ஒலிப்பெயர்ப்பைத் தரலாம். வழிமாற்றுத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 11:26, 16 திசம்பர் 2013 (UTC)
தலைப்பை மாற்றுக
தொகுஇத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. இஸ்ரேல் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை இஸ்ரேல் என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:12, 25 செப்டம்பர் 2019 (UTC)