பேச்சு:இ. மயூரநாதன்

இக்கட்டுரை குறிப்பிடத்தக்கதா? விக்கியூடகத்தை மேற்கோளாக் கொண்டே கட்டுரை வரையப்பட்டுள்ளது. இயல் விருதினைப் பெற்றவர்கள் அணைவரும் குறிப்பிடத்தக்கவர்களா? அவ்வாறாயின் அவர்களுக்கும் கட்டுரை எழுதலாமா? --A-wiki-guest-user (பேச்சு) 06:22, 11 ஏப்ரல் 2019 (UTC)

//இயல் விருதினைப் பெற்றவர்கள் அணைவரும் குறிப்பிடத்தக்கவர்களா?// ஆம், அது ஒரு குறிப்பிடத்தக்க விருது. அனைவருக்கும் முடிந்தால் கட்டுரை எழுதலாம்.--Kanags (பேச்சு) 08:21, 11 ஏப்ரல் 2019 (UTC)
தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். தமிழ் இலக்கியத் தோட்டம் விருதினைப் பெற்றவர்கள் அணைவரும் குறிப்பிடத்தக்கவர்களா? --A-wiki-guest-user (பேச்சு) 09:00, 11 ஏப்ரல் 2019 (UTC)
இல்லை, ஆனால் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதைப் பெறுபவர்கள் குறிப்பிடத்தக்கவர்களே.--Kanags (பேச்சு) 09:08, 11 ஏப்ரல் 2019 (UTC)
ஏன் இவ்வாறான ஏற்பாடு? விளக்க முடியுமா? --A-wiki-guest-user (பேச்சு) 09:22, 11 ஏப்ரல் 2019 (UTC)
@Ravidreams: நீங்கள் இதுபற்றிய கருத்துக்கூற முடியுமா? --A-wiki-guest-user (பேச்சு) 09:27, 11 ஏப்ரல் 2019 (UTC)
@A-wiki-guest-user: நீங்கள் கேட்பது விளங்கவில்லை? நாம் எவ்வித ஏற்பாடும் ஏற்படுத்தவில்லை. இயல்விருது அனைத்து தமிழ் ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.--Kanags (பேச்சு) 09:32, 11 ஏப்ரல் 2019 (UTC)
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இயல் விருது என்பது தமிழக இலக்கிய, அறிவு சார் வட்டங்களில் கவனிப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. பல முக்கிய இதழ்கள் இது குறித்து செய்திகள், பேட்டிகள் வெளியிடுவது உண்டு. இது நிச்சயம் குறிப்பிடத்தக்கமைக்குரிய ஒரு தகுதி தான். --இரவி (பேச்சு) 05:45, 12 ஏப்ரல் 2019 (UTC)
@Ravidreams: சரி. தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இயல் விருது மட்டுந்தான் குறிப்பிடத்தக்கதா அல்லது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஏனைய பிற விருதுகளும் குறிப்பிடத்தக்கதா? @Kanags: விருதுகள் குறிப்பிடத்தக்கவை என்பதை எதை வைத்து மதிப்பிடுவது என்பது பற்றித்தான் எனது கேள்வி. விக்கிப்பீடியா ஏதும் முறைகள் கொண்டுள்ளதா? --A-wiki-guest-user (பேச்சு) 07:09, 12 ஏப்ரல் 2019 (UTC)
தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இயல் விருது குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஏனைய விருதுகள் தனிப்பட்டவர்கள் நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக வழங்கப்படுகின்றன. அவை குறிப்பிடத்தக்கவையா என்பது கேள்விக்குரியதே. என்னைப் பொறுத்தவரையில் இல்லை என்றே கூறலாம்--Kanags (பேச்சு) 08:12, 12 ஏப்ரல் 2019 (UTC)

முறையான தகுதியா?

தொகு

மயூரநாதனுக்கு முன்பே சிலர் தமிழில் விக்கிப்பீடியாவை உருவாக்க முயற்சித்ததாகவும், தொகுப்புகள் செய்ததாகவும் கடடுரை தெரிவிக்கின்றது. ஆகவே, முன்னோடிகள் இவருக்கு முன்பும் இருந்துள்ளனர். அவர்கள் மறைக்கப்பட்டர்களா? கேள்விக்கான இடம் இது இல்லை என்றாலும், விக்கிப்பீடியா என்பது பலரின் உழைப்பு, ஆனால் இவருக்கு மட்டும் விருது வழங்கப்பட்டது எதற்காக? ஊடக உத்தி இவரை மட்டும் பெயரியவராகக் காட்டிவிட்டதா? தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை என்பதெல்லாம் சற்று அதிகம்தான். தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்பகட்டத்தில் பங்களித்தவருக்கு கொடுக்கும் மிகை பிரச்சாரம்போல் வேறு விக்கிப்பீடியாக்களிலும் உண்டா? --A-wiki-guest-user (பேச்சு) 07:52, 12 ஏப்ரல் 2019 (UTC)

வணக்கம் பயனர்:A-wiki-guest-user. தொடர்புடைய கட்டுரை குறித்த முறையான விவாதம் ஏற்கத்தக்கது. ஆனால், பயனரின் பேச்சுப் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதக்கம் மற்றும் பாராட்டுகள் குறித்து நகையாடி கருத்து தெரிவிப்பது பண்பாகுமா என்பதனை கருத்திற் கொள்ளுங்கள்; ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்தில் விக்கிச் சமூகம் அவரைப் பாராட்டுவது விக்கியின் நடைமுறைகளில் ஒன்று என்பதனை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:56, 12 ஏப்ரல் 2019 (UTC)

@A-wiki-guest-user:,

  1. //ஆகவே, முன்னோடிகள் இவருக்கு முன்பும் இருந்துள்ளனர். அவர்கள் மறைக்கப்பட்டர்களா?// எதுவும் மறைக்கப்படவில்லை. தமிழ் விக்கிப்பீடியா வரலாறு என்னும் கட்டுரையைப் பார்க்கவும். முதலில் பதிவு செய்தவை அதிகம் இல்லை மயூரநாதன் அவர்கள் மிக முக்கியமான கட்டுரைகள் எழுதியது மட்டுமல்லாமல், யாவரைக்காட்டிலும் மிக அதிகமாக கட்டுரைகள் எழுதியது மட்டுமல்லாமல், நன்முறையில் பலருக்கும் வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். இன்றளவும் இருக்கின்றார்.
  2. //ஆனால் இவருக்கு மட்டும் விருது வழங்கப்பட்டது எதற்காக? ஊடக உத்தி இவரை மட்டும் பெயரியவராகக் காட்டிவிட்டதா?// மயூரநாதன் அவர்களைப் பற்றி ஊடகத்திலோ பிற இடங்களிலோ யாருக்கும் எதுவும் தெரியாமல்தான் இருந்தது. கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் உயர் விருதாகிய இயல் விருது, அவருடைய தகுதியையும் ஆக்கத்தின் பெருமையையையும் உணர்ந்து வழங்கிய பின்னரே தமிழூடகங்கள் அவரைப்பற்றி அறியத்தொடங்கி விகடனின் முன்னணி 10 பேரில் ("டாப் 10") ஒருவராக எல்லாம் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தினர். மிக மெய்யான பெருமைக்குரியவர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஏதும் "ஊடக உத்தி" எல்லாம் இல்லை (இருந்தால் காட்டுங்கள்!!). ஊடகம் உணர்ந்தது, இயல்விருது பெற்ற பின்னரே. இதில் ஏதும் "பிரச்சார"மும் இல்லை மிகைபிரச்சாரமும் இல்லை. இதை நீங்கள் இதை அணுகுவதின் கோணத்தில் சிக்கல் இருக்கலாம். மற்ற விக்கிப்பீடியாக்களில் இப்படிப் பெருமைப்படுத்திருக்கின்றார்களா என்று அந்தந்த விக்கியர்களிடம் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம். அது இங்கு முக்கியமே இல்லை. மயூரநாதன் அவர்களும் அவருடன் தொடக்கத்தில் பயணித்த ஒரு 5-10 பேர்களும் இல்லாவிடில் தமிழ்விக்கிப்பீடியா இப்படிப்பட்ட வளர்ச்சியை எட்டியிருக்க முடியாது என்பதை இங்குப் பணியாற்றிய பழம் பங்களிப்பாளர்கள் நன்கு உணர்வார்கள் (பலரும் இன்றும் இங்கு இருக்கின்றார்கள்). நான் 2006 முதல் பணியாற்றியிருக்கின்றேன். எனவே நான் இதனை உறுதிப்பட கூறமுடியும். நான் பங்களிக்கத் தொடங்கிய போது ஏறத்தாழ 2400 கட்டுரைகள் இருந்தன. --செல்வா (பேச்சு) 03:36, 13 ஏப்ரல் 2019 (UTC)

எச்சரிக்கைகள் பலவும் நீக்கப்படுகின்றன

தொகு

கீழ்க்காணும் அறிவிப்புகளை நீக்கியுள்ளேன். காரணங்களைக் கீழே தந்துள்ளேன்.

  1. {{advert}} - இதில் விளம்பரம் ஏதுமில்லை.
  2. {{autobiography}} -- ஆம் இது வாழ்க்கை வரலாறுதான், இவரின் குறிப்பிடத்தகுந்த பெருமைக்குக் காரணமான வரலாறு தமிழ் விக்கிப்பீடியாவுடன் தொடர்புடையதுதான், ஆகவே அப்படி இருப்பது தவிர்க்க இயலாதது.
  3. {{primary sources}} - இதில் பிழையில்லை. எவற்றை முதன்மை மூலங்கள் என்று கருதுகின்றீர்கள்?
  • "multiple issues" என்னும் அறிவிப்பையும் நீக்கியுள்ளேன். அப்படி ஏதுமில்லை இங்கே.

மேலும் இருக்கும் சில அறிவிப்புகளையும் நீக்கவுள்ளேன். அவை பொருத்தமற்றவையாகவே கருதுகின்றேன்.

--செல்வா (பேச்சு) 03:53, 13 ஏப்ரல் 2019 (UTC)

{{BLP sources}} என்பதை நீக்கிவிட்டு {{refimprove}} என்பதைச் சேர்த்திருக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 04:11, 13 ஏப்ரல் 2019 (UTC)

கட்டுரை விக்கி நடையில் இல்லை. திருத்துவதற்கு வார்ப்புரு சேர்த்திருக்கிறேன்.--Kanags (பேச்சு) 04:21, 13 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._மயூரநாதன்&oldid=2690528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இ. மயூரநாதன்" page.