பேச்சு:உரோசா

இதற்கு முளரிப்பூ என தமிழ்ச்சொல் உள்ளதே. அதனைப் பயன்படுத்தலாம். --இராச்குமார் (பேச்சு) 21:28, 11 சூலை 2012 (UTC)Reply

உண்மையாகவா? இது வழக்கில் உள்ளதாயின் பக்கவழிமாற்று விட்டு மாற்றிவிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:59, 11 சூலை 2012 (UTC)Reply
முளரி (முள் + அலரி) என்பது பன்பொருள் ஒரு மொழி. தாமரைக்கு மட்டுமே என எண்ணுகிறேன்.-- உழவன் +உரை.. 05:27, 12 சூலை 2012 (UTC)Reply

முளரி என்பது தாமரையைக் குறிக்கும் எனப் படித்ததாகத் தான் நினைவிருக்கிறது. --Prakayas (பேச்சு) 05:51, 12 சூலை 2012 (UTC)Reply

முளரி அல்ல என்பதற்கு (சான்று - சென்னைப்பேரகரமுதலி)உழவன் (உரை) 02:07, 7 அக்டோபர் 2016 (UTC)Reply

உரோசா என்பது தமிழ்ச் சொல்லன்று. ஓரிரு நூற்றாண்டுகள் பழைய ஆங்கில-தமிழ் அகராதிகளில் இதற்கு முட்செவ்வந்தி என்று குறிப்பிடுப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 03:56, 31 திசம்பர் 2015 (UTC)Reply

  1. செம்பருத்திக்கே, முட்செவ்வந்தி என்று பெயர். இங்கு தாவரவியல் பெயரைக் காணவும்.
  2. இந்த உரோசா என்ற தலைப்பு, இலத்தீனிய தாவரவியல் பெயரான, ரோசா பேரினத்தைக் (en:Rosaceae)குறிக்கிறது. தமிழ் மரபுக்கு ஏற்ப உரோசா என்று வைத்துள்ளனர்.
  3. பிரஞ்சு மொழியிலிருந்து, நிறத்தைக் குறிக்க Rose என்பது ஆங்கிலத்தில் வந்ததாகத் தெரிகிறது. மேலும், நபர்களையும் குறிக்கின்றது.
  4. மேற்கூறியவற்றை, ஆங்கில விக்கிப்பீடியாவின் இப்பகுதியில் காணலாம்.
தாவரவியல் பெயரே பொருத்தம் ஆகும். சப்போட்டா பழம் என்பது கூட தாவரவியல் பெயர், தமிழ்நாட்டில் சாதரணமக்களிடம் நிலைபெற்று விட்டது. அதுபோலதான் இந்த ரோசாவும். எனவே, தலைப்பு மாற்றல் வார்ப்புரு இருவாரங்களில் நீக்கப்பட உள்ளது.--உழவன் (உரை) 02:07, 7 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரோசா&oldid=2126563" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உரோசா" page.