ரோமை உரோம் என புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.இரணுமே சரியானதா இல்லை எது சரி.--நிரோஜன் சக்திவேல் 15:07, 12 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, நீங்கள் சொல்லுவது சரியே. தமிழ் முறையை பலவாறு புறக்கணிக்கும் போக்கால் இப்படி எழுத நேரிடுகிறது. அறிவியல் சொற்கள் போல், வேற்று நாட்டவர்களின் பெயர்ச்சொல்லில் இப்படி தமிழில் முதல் எழுத்தாக வராத ர, ல, ற, ட முதலான எழுத்துக்களில் தொடங்கி எழுதுகிறோம். Toronto வை, இடொராண்ட்டோ, உடொராண்ட்டோ என்றோ எழுதுவதில்லை. சிலர் தொராண்ட்டோ என எழுதுவர், அது எவ்வளவோ மேல். ரோம் என்பதை உரோம் என்று எழுதுவதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. --செல்வா 20:50, 24 பெப்ரவரி 2007 (UTC)

அனவரதமான நகரம்

தொகு

முற்றிலும் புரியவில்லை. வேறு சொல் ஆளலாம்.--சிவக்குமார் \பேச்சு 17:03, 11 செப்டெம்பர் 2008 (UTC)Reply

உரோம் என்றோ உரோமாபுரி என்றோ இருப்பதே பொருத்தமென நினைக்கிறேன். உரோமை என்பது தெளிவற்றது.--பாஹிம் (பேச்சு) 14:21, 19 சனவரி 2015 (UTC)Reply

  விருப்பம் உரோம்--AntonTalk 14:37, 19 சனவரி 2015 (UTC)Reply
தமிழ் விக்கியில் பல இடங்களில் உரோமை எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் விளக்கமும் அறியத்தரப்படவில்லை. பரவலாக உரோம் என்பதே ஏற்புடையது.--மணியன் (பேச்சு) 03:15, 20 சனவரி 2015 (UTC)Reply
மூல மொழியான இத்தாலிய மொழியில் உரோமா ([[::it:Roma|Roma]]) என்றே குறிப்பிடப்படுகிறது. --சத்தியராஜ் (பேச்சு) 11:27, 29 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரோம்&oldid=1852084" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உரோம்" page.