பேச்சு:எரோடோட்டசு
பெயர் எழுத்துப்பெயர்ப்பு
தொகுஇங்கே தமிழில் ஹெரோடோட்டஸ், அல்லது ஹேரோடோட்டஸ் என்று இருக்க வேண்டும் என பலர் விரும்பலாம். இரோடோட்டசு அல்லது எரோடோட்டசு என்னும் எழுத்துப் பெயர்ப்புக்கும் மாற்றுவழி தருவது நல்லது. முக்கியமான ஐரோப்பிய மொழிகளாகிய இத்தாலிய, பிரான்சிய, எசுப்பானிய மொழிகளில் ஆங்கிலத்தில் உள்ள H என்னும் ஒலி கிடையாது. அவர்கள் உரோமானிய/இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டிருந்த பொழுதும் H ஐப் பயன்படுத்துவதில்லை, அல்லது அப்படியே பயன் படுத்தினாலும், அதனை ஒலிப்பில்லா எழுத்தாக மிகப்பல இடங்களில் வழங்குகின்றனர். கிரேக்கர்களை மிக நெருக்கமாக பின்பற்றிய இத்தாலியர்களே, அவர்களுக்கு இனமானமொழியாக இருந்தபொழுதிலும் Erodoto என்றுதான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் நம் தமிழ் மொழியில் எரோடோட்டசு என்று வழங்குவதால் தவறில்லை. எரோடோட்டோ என்றும் கூட அழைக்கலாம். உருசியர், உக்ரேனியர், 'பெலாரூசியர் போன்றவர்கள் 'கெரோடோட் (Геродот) என்பது போல ஒலிக்கிறார்கள். இத்தாலிய மக்களைப் போலவே சிசிலி மக்கள், அரோகனீசு மக்கள் Erodoto என்று கூறுகிறார்கள். எனவே நாம் எளிமையாக எரோடோட்டசு என்று கூறலாம். கட்டாயம் நாம் மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. எரோடோட்டசு என்று இருந்தால் குறைவொன்றுமில்லை, நம் மொழியின் இயல்பின் படி அழகாக நாம் வழங்குகிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இப்படி எழுதுவது தமிழ் மொழியின் மரபுகளுக்கு முன்னுரிமை தருவது மட்டுமன்றி எளிதாக நம் மொழியில் வழங்கும்படியும் அமையும். தமிழ் மொழியைப் பழிப்பவர்கள் உலக மொழிகளின் மரபுகளையும், தமிழ் மொழியின் மரபுகளையும் நன்கு அறியாதவர் என்று கருதி அவர்கள் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --செல்வா 05:17, 11 ஜனவரி 2009 (UTC)
உலக மொழிகளில் சில எடுத்துக்காட்டுகள்:
- an:Erodoto
- be:Герадот
- es:Heródoto எசுப்பானிய மொழியில் H என்று எழுதினாலும் ஒலிக்கப்படுவதில்லை.
- fr:Hérodote பிரான்சிய மொழியில் H என்று எழுதினாலும் ஒலிக்கப்படுவதில்லை.
- it:Erodoto
- ru:Геродот
- scn:Eròdutu
- uk:Геродот
--செல்வா 05:17, 11 ஜனவரி 2009 (UTC)