பேச்சு:எலுமிச்சைப் புல்
அருகம்புல் வேறு லெமன் கிராஸ் வேறு. லெமன் கிராஸைப் பற்றியதாகவே இக்கட்டுரை இருப்பதால் தலைப்பை மாற்ற வேண்டும். லெமன் கிராஸ் - சரியான தமிழ்ப்பெயர் உண்டா எனத் தெரியவில்லை. சரியானதேதும் இல்லாவிட்டால், எலுமிச்சைப்புல் என வழங்கலாம். ---ஜீவா (பேச்சு) 14:36, 6 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம். மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஜீவா நன்றி. இது அருகம் புல் இல்லை! இதை தேசிப் புல் என்றுதான் தமிழில் சொல்வார்கள், இதை கிழக்காசியா மக்கள் பெரும்பாலும் உணவில் கலப்பதுண்டு. இதன் வாசம் தேசி இலையின் வாசத்துக்கு இணையானது. இந்த படத்தில் இருப்பதுதான் அருகம் புல் http://1.bp.blogspot.com/-Pu6bpp612l0/Tngx463LCCI/AAAAAAAAAIs/pb2462LAEUo/s1600/grass.jpg நன்றி. --சிவம் 14:58, 6 அக்டோபர் 2012 (UTC)
நன்றி சிவம்,ஜீவா மாற்றிவிட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:44, 6 அக்டோபர் 2012 (UTC)
- தேசிப் புல் பற்றித் தெரியவில்லை. அருகம் புல் பற்றிய சில விபரங்களை சேர்த்துள்ளேன். உள்ளடக்கத்தில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டித் திருத்தவும். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:55, 6 அக்டோபர் 2012 (UTC)
சஞ்சீவ் கொஞ்சம் பொறுங்கள்.. அவசரப்படவேண்டாம். உங்கள் கட்டுரை சரியானதே! ஆனால் அதன் தலைப்பு பிழையானது என்றுதான் கூறி இருக்கிறோம். நீங்கள் இட்டு இருந்த படங்களும் கட்டுரைகளும் சரியானதே. தேசிப் புல் அல்லது எலுமிச்சை புல் என்பதே சரியாக இருக்கும் என்று கூறி இருந்தோம். அறுகு என்று வேறு ஒரு கட்டுரையும் உள்ளது அதையும் பாருங்கள்.--சிவம் 15:57, 6 அக்டோபர் 2012 (UTC)
ஆம் சிவா.நான் தவறாகப் புரிந்துகொண்டு அவசரப்பட்டு விட்டேன். கட்டுரையை மீளமைத்துள்ளேன், தலைப்புமாற்றம்தான் தேவை என நினைக்கின்றேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:40, 6 அக்டோபர் 2012 (UTC)
வாழ்த்துக்கள் சஞ்சீவி. ஆமாம் தலைப்புதான் மாற வேண்டும். மற்ற அனைத்தும் இப்போ சரியாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு சில வீடுகளில் கிணற்றடியில் இவற்றை நட்டு இருப்பார்கள், உதாரணம்: கரும்பு, இறம்பை, தேசிப் புல் போன்றவை காணப்படும். எங்கள் வீட்டிலும் இந்த தேசிப் புல் இருக்கின்றன அதனால்தான் சொன்னேன். நன்றி --சிவம் 17:00, 6 அக்டோபர் 2012 (UTC)
- அது சரி, கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டுமா இல்லையா?--Kanags \உரையாடுக 12:56, 13 அக்டோபர் 2012 (UTC)
- எலுமிச்சைப் புல் --Anton (பேச்சு) 13:14, 13 அக்டோபர் 2012 (UTC)