பேச்சு:ஏழாம் அறிவு (திரைப்படம்)

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic பொய்ப் பரப்புரை
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஏழாம் அறிவு (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழர் நன்றி மறந்தவர் அல்ல தொகு

இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் தமிழர்கள் போதிதருமனை மறந்ததாக கூறுகின்றனர். அதற்கு மேல் யோசிப்பது இல்லை.

  1. ஒன்றை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதிதருமனின் காலத்தில் களப்பிரர் ஆட்சியின் இருண்ட காலம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆண்ட மூவேந்தர் வரலாறே தமிழகத்தில் மறைக்கப்பட்டது. இதில் புதியவர்களான பல்லவர் வரலாற்றை எங்கு பாதுகாப்பது.
  1. மேலும் போதிதருமனை போல் இங்கு பல பேர் தற்காப்புக்கலையிலும், மருத்துவத்திலும் சிறந்திருந்தனர். உதாரனத்திற்கு ஒருநாட்டினர் அனைவரும் தற்கப்புக்கலைகளில் சிறந்தவர்கள் என்றிருக்கையில் அங்கே ஒருவன் போய் நான் தற்காப்புக்கலைகளில் சிறந்தவன் மார்தட்ட முடியாதல்லவா.சீனாவில் மக்களுக்கு இவர் சோலின் முறை குங்ஃபூவை அறிமுகப்படுத்தியதால் அவரை அங்கே கொண்டடுகின்றனர். இங்கே அது களரி என்ற பெயரில் போதிதருமன் முந்திய கலம் தொட்டே இருந்து வருகிறது. அதனால் இங்கே அவரை நினைவில் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் பற்றிய கட்டுரையை விரிவுப்படுத்த உதவியது அனைத்தும் தமிழ் புத்தகங்களில் இருந்தே.

அதனால் தமிழர் போதிதருமனை மறந்ததாக தயவு செய்து எவரும் கருதவோ இக்கருத்தை பரப்பவோ வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:44, 31 அக்டோபர் 2011 (UTC)Reply

முருகதாசை வரலாற்று ஆசிரியராகக் கொண்டு, ஒரு வெகுஜனத் திரைப்படத்தை வரலாற்று மூலமாகக் கொண்டால் நடக்கும் அபத்தங்களில் இதுவும் ஒன்றே :-). --சோடாபாட்டில்உரையாடுக 05:48, 31 அக்டோபர் 2011 (UTC)Reply


பொய்ப் பரப்புரை தொகு

போதி தருமரின் வாழ்க்கை பற்றிச் சரியான வரலாற்று ஆதாரம் எதுவுமே காட்டாமல் வரலாற்றைத் திரிக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது சமகாலத்தவர் எவரும் அவரைத் தமிழரெனக் கூறியதாக எந்தவித ஆதாரமுமில்லை.--பாஹிம் 06:05, 5 நவம்பர் 2011 (UTC)Reply

இது தொடர்பான உரையாடல் பேச்சு:போதி தருமன் பக்கத்தில் நடந்துள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:51, 4 ஆகத்து 2012 (UTC)Reply

Return to "ஏழாம் அறிவு (திரைப்படம்)" page.